பாட்டிலின் வாயிலிருந்து குடிப்பது பற்றிய சட்டம்

கேள்வி:

தோல் துருத்டியின் வாயிலிருந்து குடிப்பதற்கு இஸ்லாத்தில் உடைய தடயை, பாட்டில்களின் வாயிலிருந்து குடிப்பதற்கும் பொருந்துமா?

பதில்:

எல்லாப்புகழும் இறைவனுக்கே.

நபி صلى الله عليه و سلم தோல் துருத்தியின் வாயிலிருந்து குடிக்கக்கூடாது என்று தடுத்தார்கள் என்று ஸஹீஹ் அல்புகாரியிலும் ஸஹீஹ் முஸ்லிமிலும், இப்னு அப்பாஸும் அபூ ஹுரைராவும் அறிவிக்கும் ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானக.

தோல் துருத்தி என்பது தோலில் செய்யப்பட்ட வாய் கொண்ட ஒரு பாத்திரம்.

இது ஏன் தடுக்கப்பட்டுள்ளது? அறிஞர்கள் பல காரணங்கள் கூர்கின்றனர் – அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக.

1) தோல் துருத்திக்குள் எண்ணவுள்ளது என்பதை கான முடியாது. சில சமயங்களில் அதனுள் தீங்கிழைக்கும் பூட்சி, பாம்புகள் இருக்கக்கூடும். ஒருமுறை ஒருவர் அதிலிருந்து தண்ணீர் குடித்த போது ஒரு பாம்பு வந்து விழுந்ததாக ஒரு அறிவிப்பு வந்துள்ளது.

இன்று பெரும்பாலான பாட்டிலுகளுக்குள் பார்க்க இயலும் என்பதால், அவ்வாறான பட்டில்களுக்கு இந்த காரணம் பொருந்தாது.

2) தோல் துருத்தியின் வாயிலிருந்து தண்ணீர் குடிக்கும் நபர், அதை சரியாக கட்டுப்படுத்த இயலாது, அளவுக்கு அதிகமாக ஊற்றி மூச்சு தினரலாம், அல்லது தன் ஆடைகளை ஈரமாக்களாம்.

நாம் பலரிடம் பார்ப்பது போல் இந்தக்காரணம் பாட்டில்களுக்கும் பொருந்தும்

3) ஒருவர் வாய் வைத்து குடித்தால் அவாின் உமில் நீர் அந்த பாட்டிலில் படியக்கூடும், தண்ணீரில் கலக்ககூடும், அவாின் சுவாசம் தண்ணீரில் நிலைக்கக்கூடும். இது பிறரை வெருப்படய செய்யும், இதனால் நோய்கள் பரவக்கூடும்

இந்தக்காரணம் பாட்டிலில் இருந்து குடிப்பவர்களுக்கு பொருந்தும். ஆனால் பாட்டிலில் வாய் வைக்காமல் அண்ணார்ந்து குடிப்போர்க்கு பொருந்தாது.

அதே போல் ஒரு பாட்டிலிலிருந்து பிறர் யாரும் குடிக்க மாட்டார்கள்,ஒருவர் மட்டும் தான் குடிப்பார் எனும் நிலையிலும் இது பொருந்தாது.

ஆனால் கூறப்பட்ட காரணங்களில், மூன்று காரங்களுக்காகவும் தோல் துறித்தியிலிருந்து குடிப்பது தடுக்கப்பட்டிருக்களாம். இதுவே இமாம்களான இப்னு அல்அரபி, இப்னு அபீ ஹம்ஸா மற்றும் சிலரின் கூற்று அல்லாஹ் அவர்களுக்கு அருள் பொழியட்டும்.

இக்காரணங்களில் சில பாட்டில்களுக்கும் பொருந்துவதால், நாம் பாட்டில்களளின் வாயிலிருந்து நேரடியாக குடிக்கக்கூடாது, குறிப்பாக அதை வேறொருவர் பயன் படுத்தும் வாய்ப்பிருந்தால்.

அல்லாஹ்வே மிகப் அறிந்தவன்

Islamqa.info

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply