தூய்மை
بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 9️⃣ : நோன்பு திறப்பதற்கு சில நிமிடத்திற்கு முன் மாதவிடாய் ஏற்பட்ட பெண் குறித்த மார்க்கத் தீர்ப்பு என்ன? 📝 பதில் : அதான் கூறுபவர் சரியான நேரத்தில் கூறினால், அவள் அந்த நோன்பை மீட்ட வேண்டும். ஆனாலும், சூரியன் மறைந்த பின்பு அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால்,அவளது நோன்பு செல்லுபடியானதாகும்; அவள் அந்நோன்பை மீட்டத் தேவையில்லை. …
இஸ்லாத்தில் நிர்வாணமாக குளிக்க அனுமதி உள்ளதா?
கேள்வி இஸ்லாத்தில் நிர்வாணமாக குளிக்க அனுமதி உள்ளதா? பதில் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: மூஸா(அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் மேனியிலிருந்து சிறிதளவு கூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால் தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக் கொண்டார்கள். அப்போது, பனூ இஸ்ராயீல்களில் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்; ‘இவருடைய சருமத்தில் ஏதோ …
அல்குர்ஆன் உள்ள அறையில் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது குறித்த தீர்ப்பு என்ன? இது குர்ஆனை அவமரியாதை செய்வதாகக் கருதப்படுமா?
கேள்வி: குர்ஆன் உள்ள அறையில்(வேறு எந்த அறையும் இல்லாத நிலையில்) மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது குறித்த தீர்ப்பு என்ன? இது குர்ஆனை அவமரியாதை செய்வதாகக் கருதப்படுமா? பதிலின் சுருக்கம்: (இங்கு கேள்வியானது) முஷாஃப் இருக்கும் ஒரு அறையில் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல் என்பது குர்ஆனை அவமதிப்பதாகுமா என்பதுதானே தவிர மாறாக அறைகள் இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருத்தது அல்ல. பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்குர்ஆனுக்கு மரியாதை காட்டுவதன் முக்கியத்துவம்: அல்குர்ஆனுக்கு மரியாதை தருவதும் அதைக் கவனமாகக் …
கழிவறைக்குச் சென்றபோது கழிப்பறையில் ஒரு துளி இரத்தம் (கசிந்ததை) கண்டேன். ஆனால் அது மாதவிடாய் இரத்தமா என சரியாகத் தெரியவில்லை. எனவே நான் எனது தொழுகை மற்றும் நோன்பினை தொடரலாமா..?
கேள்வி நான் சுய தேவைக்காக கழிவறைக்குச் சென்றபோது கழிப்பறையில் ஒரு துளி இரத்தம் (கசிந்ததை) கண்டேன். ஆனால் அது மாதவிடாய் இரத்தமா என சரியாகத் தெரியவில்லை. எனவே நான் எனது தொழுகை மற்றும் நோன்பினை தொடரலாமா..? பதில் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஒரு துளி இரத்தம் (கசிந்தது) என்பது மாதவிடாய்க்கான அறிகுறி அல்ல. எனவே நோன்பையும் தொழுகையையும் விட்டுவிடக் கூடாது (தொடர வேண்டும்). ரமழான் மாத நோன்பை மேற்கொண்டிருக்கும் பெண்ணிற்கு (மாதவிடாய் முடிந்த பிறகும்) சிறு இரத்தப் புள்ளிகள் …
இஸ்திஜ்மார் – கல், டிஸ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு தூய்மை செய்வதன் சில சட்டங்கள்
ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்களிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது இஸ்திஜ்மார் என்றால் என்ன? மேலும் விமானத்தில் பயணிக்கும் போது, நீர் இருப்பினும், டிஸ்யூ பேப்பர் பயன் படுத்தி இஸ்திஜ்மார் செய்வது கூடுமா? தூய்மை விடயத்தில் சிறந்தது எது? பதில்: இஸ்திஜ்மார் என்பது மலம், சிறுநீர் கழித்த பின்பு முன்-பின் உறுப்புகளை, கல் அல்லது அது போன்றவற்றை கொண்டு தூய்மை செய்வதை குறிக்கும் சொல். இதற்காக டிஸ்யூ போபரும் பயன் படுத்தலாம், ஆனால், குறைந்தது மூன்று …
இஸ்திஜ்மார் – கல், டிஸ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு தூய்மை செய்வதன் சில சட்டங்கள் Read More »
சிறுநீர், மலத்தை அடக்கிக்கொண்டு தொழலாமா?
கேள்வி : குளிர் மற்றும் (இதுபோன்ற) வேறுகாரணங்களினால் தொழுகைக்காகவும், வுழூவை பேணுவதற்காவும் சிறுநீரை கட்டுப்படுத்திக் கொள்பவர் பற்றிய நிலைப்பாடு என்ன? அவர் மீது ஏதேனும் கடமைகள் இருக்கின்றனவா? பதில் : ஆமாம் அவர்மீது கடமைகள் இருக்கின்றன. ஏனெனில், அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார். நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “உணவு வந்து காத்துக்கொண்டிருக்கும்போது அல்லது சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டு தொழக்கூடாது.” (ஆதாரம் : முஸ்லிம்-969) அப்படி ஒரு …
வுளூ இல்லாமல் அதான்/பாங்கு கூறலாமா?
கேள்வி : (முஅத்தின்) தொழுகைக்கான அழைப்பை விடுபவர் வுழூ இல்லாமல் அவ்வழைப்பை மேற்கொள்ளலாமா? பதில் : ஆமாம், வுழூ இன்றி தொழுகைக்கான அழைப்பை மேற்கொள்ளவது ஆகுமானது. ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நிலைகளிலும் அல்லாஹுத்தஆலாவை (திக்ர்) நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள்.” (ஆதாரம் : முஸ்லிம்-608) எனவே, (அதான்) தொழுகைக்கான அழைப்பு என்பது (திக்ர்) அல்லாஹ்வை நினைவு கூறுவதில் ஒன்றாக இருக்கின்றது. பதிலளிப்பவர் : அஷ்ஷைய்க் முஹம்மத் …
வாந்தி வுழூவை முறித்துவிடுமா?
கேள்வி : வாந்தி வுழூவை முறித்துவிடுமா? பதில் : வாந்தி என்பது குறைவாகவோ அல்லது கூடுதலாகவே இருந்தாலும் அது வுழூவை முறிக்காது என்பதுவே ஆதாரமான கருத்தாகும். ஏனெனில், வாந்தி என்பது வுழூவை முறிக்கும் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் கிடையாது. எனவே, வுழூ தொடர்ந்திருக்கும் என்பது அடிப்படையாகும். ”ஆதாரத்தின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட விடயத்தை (மற்றுமொரு) ஆதாரத்தின் மூலமே அல்லாமல் (நினைத்த விதத்தில்) அதனை முறித்துவிட முடியாது.” என்ற இந்த கோட்பாடு மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகவும் பிரயோஞனமானதாகும். வாந்தி என்பது …
செல்போன்களிலிருந்து குர்ஆன் ஓதுவதற்கு தூய்மை அவசியமா?
கேள்வி: சில செல்போன்களில், குர்ஆன் மென்பொருள்கள் உள்ளன, இதனால் ஒருவர் தான் எந்த நேரம் விரும்பினால், குர்ஆனை எடுத்து ஓத இயலும். என் கேள்வி, இவ்வாறு ஓதுவதற்கு தூய்மை அவசியமா? பதில்: புகழனைத்தும் இறைவனுக்கே, குர்ஆனின் எழுத்துகளும், கிறாஅத்துகளும் இருக்கும் இந்த செல்போன்கள் முஸ்ஹஃப்களை போன்றல்ல, இதை தூய்மையின்றி தொடுவது அனுமதிக்கப்பட்டது, அதை எடுத்துக்கொண்டு நீங்கள் கழிவறைகளுக்குள்ளும் செல்லலாம். ஏனென்றால் இந்த செல்போன்களில் வரும் எழுத்துகள் முஸ்ஹஃபின் எழுத்துக்கள் போன்றல்ல, இந்த எழுத்துகள் அலைகளைப்போன்ற வடிவங்களை பெறுகின்றது, …
செல்போன்களிலிருந்து குர்ஆன் ஓதுவதற்கு தூய்மை அவசியமா? Read More »
மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை ஓதலாமா ?
மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனைப் ஓதலாமா ? இஸ்லாமிய அறிஞர்கள்(رحمهم الله) மத்தியில் கருத்துவேறுபாடு உள்ள விஷயங்களில் இதுவும் ஒன்று. ஃபிக்ஹ் அறிஞர்கள் பெரும்பாலோர் மாதவிடாய் பெண்கள் தூய்மை அடையும் முன்னர் குர்ஆன் ஓதுவது ஹராம் என்றே கருதுகின்றனர். திக்ரிலும், துஆவிலும், குர்ஆன் ஓதும் எண்ணத்தில் அல்லாமல் குர்ஆனின் சில வசனங்களை மட்டும் ஓதுவதையும் தவிர. உதாரணமாக “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” அல்லது ‘இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன் ‘ போன்ற வார்த்தைகளை கூறுவது அனுமதிக்கப்பட்டது . …