காலுறைகளின் மீது மஸஹ் செய்வது தொடர்பான மார்க்க சட்டங்கள் | தொடர் 01 |

காலுறைகளின் மீது மஸஹ் செய்வது தொடர்பான மார்க்க சட்டங்கள் | தொடர் 01 |

மஸஹ் செய்வதன் வரையறையும், சட்டமும்:

மஸஹ் செய்வது என்றால் – குறிப்பிட்ட நேரம் வரை காலுறைகளின் மேற்பகுதியில் கால் விரல்களிலிருந்து கணுக்கால் வரை ஈரக் கைகளைக் கொண்டு தடவுவதாகும்.

காலுறைகள் (குப்/ khuff) என்றால் என்ன ?

காலில் அணியப்படும் தோலினால் செய்யப்பட்ட காலணிகளை குறிக்கும். மேலும், பஞ்சு மற்றும் கம்பளியை கொண்டு செய்யப்படும் காலுறைகளும் (சாக்ஸ்/ SOCKS) இதில் அடங்கும்.

மஸஹ் செய்வதன் சட்டம்:

ராபிதா, கவாரிஜ் போன்ற பித்அத் வாதிகளை தவிர்த்து அஹ்லுஸ் சுன்னாவின் ஒருமித்த கருத்துப்படி காலுறைகளின் மீது மஸஹ் செய்வது அனுமதி அளிக்கப்பட்டதாகும்.

அல்-முக்னி (1/206).

காலுறைகளின் மீது மஸஹ் செய்வதன் காலவரையறை:

உள்ளூரில் இருப்பவர் ஒரு நாளும் , பிரயாணத்தில் இருப்பவர் மூன்று நாட்கள் வரை மஸஹ் செய்திடலாம்.

இதற்கு ஆதாரமாக பின்வரும் அறிவிப்புகள் இருக்கின்றன.

 

1️⃣ “மூன்று பகலும் மூன்று இரவும் பயணிகளுக்கும், ஒரு பகல் ஒரு இரவு பயணியல்லாதோருக்கும் காலுறைகளில் மஸஹ் செய்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள்” என அலீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பார்க்க:ஸஹீஹ் முஸ்லிம்.

2️⃣ பயணத்தில், குளிப்பு கடமையானவர்களைத் தவிர்த்து, மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகளுக்கு மலம், ஜலம் கழித்தல் மற்றும் தூங்குதல் போன்றவற்றிற்காக எங்கள் காலுறைகளை கழற்ற வேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என ஸஃப்வான் இப்னு அஸ்ஸால் (ரலி) அறிவிக்கிறார்கள்.

பார்க்க : திர்மிதீ, நஸாயீ, அஹ்மத்.

அதாவது, ஒருவர் சனிக்கிழமை பகல் 12 மணிக்கு தமது காலுறைகளின் மீது மஸஹ் செய்ய ஆரம்பிக்கிறார் என்றால்,

அவர் உள்ளூர் வாசியாக இருந்தால் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணி வரையிலும்,

பிரயாணியாக இருந்தால் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி வரை மஸஹ் செய்திடலாம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

– ஷெய்க் முஹம்மத் மன்ஸூர் உமரி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply