அஸ்மாஉல் ஹுஸ்னா – அல்மஜீது- ஒரு விளக்கம்

அல் மஜீது: அவன் தான் பெரும் மகிமை(அல் மஜ்து) வாய்ந்தவன். அல்மஜ்து என்பது உயர்வான, பரந்து விரிந்த பண்புகள் இருப்பதை குறிக்கும்.

அல்லாஹ்வின் பண்புகள் ஒவ்வொன்றும் உயர்வான, முழுமையான, மகத்தான பண்புகள். அவன் 1)முழுமையான அறிவு கொண்ட அல் அலீம் (பேரறிவாளன்), 2)அவன் தான் ரஹீம், அவனுடய கருணை(ரஹ்மத்) அனைத்தயும் சூழ்ந்துள்ளது, 3) எதுவும் அவன் மீது ஆற்றல் செலுத்த முடியாத அல்கதீர் (பேறாற்றலுடயவன்),4) perunthanmaikonda அல் ஹலீம் (பெருந்தன்மை கொண்டவன்) 5) குறையற்ற பூரண ஹிக்மா (ஞானம், நுண்ணறிவு) கொண்ட அல் ஹகீம்.

இது போன்று அவனின் அனைத்து பெயர்களும், பண்புகளும் மகத்துவத்தின் உச்சம். அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகளில் யாதொரு குரயோ, பலவீனமோ இல்லை.

அல்லாஹ் கூறுகிறான்:
قَالُوٓا۟ أَتَعْجَبِينَ مِنْ أَمْرِ ٱللَّهِۖ رَحْمَتُ ٱللَّهِ وَبَرَكَٰتُهُۥ عَلَيْكُمْ أَهْلَ ٱلْبَيْتِۚ إِنَّهُۥ حَمِيدٌ مَّجِيدٌ
அதற்கவர்கள், ‘‘அல்லாஹ்வுடைய சக்தியைப் பற்றி நீ ஆச்சரியம் அடைகிறாயா? அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய நற்பாக்கியங்களும் (இப்றாஹீமுடைய) வீட்டிலுள்ள உங்கள் மீது நிலவுக. நிச்சயமாக அவன் மிக்க புகழுடையவன், மகிமை உடையவன் (அல் மஜீது)” என்று கூறினார்கள்.

( ஷேக் ஸயீது இப்னு வஹ்ஃப் அல் கஹ்தானி)

((المجيد)) الذي له المجد العظيم، والمجد هو عظمة الصفات وسعتها، فكل وصف من أوصافه عظيم شأنه: فهو العليم الكامل في علمه، الرّحيم الذي وسعت رحمته كل شيء، القدير الذي لا يعجزه شيء، الحليم الكامل في حلمه، الحكيم الكامل في حكمته، إلى بقية أسمائه وصفاته التي بلغت غاية المجد، فليس في شيء منها قصور أو نقصان ، قال الله تعالى: {رَحْمَتُ اللَّهِ وَبَرَكَاتُهُ عَلَيْكُمْ أَهْلَ الْبَيْتِ إِنَّهُ حَمِيدٌ مَّجِيدٌ}
[سعيد بن وهف القحطاني، الثمر المجتنى مختصر شرح أسماء الله الحسنى في ضوء الكتاب والسنة، صفحة- ١٢ ١٣]

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d