இசை பற்றிய இமாம்களின் கூற்று
இசை தடுக்கப்பட்ட அசத்தியமான விடயங்களைச் சார்ந்ததாகும் என்று அல்காசிம் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள். வலீமா வைபவத்தில் (இசை போன்ற) வீணான செயல்கள் இடம்பெறுமானால், அவர்களின் அழைப்புக்கு பதிலளிக்கப்படமாட்டாது என்று அல் ஹஸன் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (அல் ஜாமிஃ லில் கௌரவானி. பக்கம் 262-263 ) “அனைத்து விதமான இசைக்கருவிகளும் ஹராமாகும்” என்று நான்கு மத்ஹப்களின் இமாம்களும் கூறியுள்ள னர். “விபச்சாரம்,பட்டு,மது,இசை போன்றவற்றை ஹலாலெனக்கருதும் ஒரு கூட்டத்தினர் எனது சமூகத்தில் தோன்றுவார்கள் அவர்கள் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் உருமாற்றம் ... Read more