கேள்வி:
ஒரு இடத்தில் பெண்கள் ஒன்றுகூடினால், அவர்கள் ஜமாஅத்தாக தொழுகையை நிறைவேற்றுவது கடமையா? ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுவது குற்றமாகுமா ?
பதில்:
🎙️ ஷைய்ஃக் இப்னு பாஸ் (ரஹி) கூறிகின்றார்கள்.
▪️ ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுவதால் தவறில்லை.காரணம் பெண்களுக்கு ஜமாஅத் தொழுகை கடமை அல்ல.
▪️ ஆண்களுக்கு ஜமாஅத் தொழுகை கடமையாகும்.
▪️ ஆனால், பெண்களில் அதிக கல்வியுள்ளவர்களும் ஞானமுள்ளவர்களும் இருப்பார்கள் எனில் அவர்களை இமாமாக நிறுத்தி ஜமாஅத்தாக தொழுவது நல்லதும் சிறந்ததும் ஆகும்.
▪️ காரணம் அது மற்றவர்கள் கற்றுக் கொள்ளவும் தெரிந்து கொள்ளவுதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.
▪️ உம்முஸலமா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் பெண்களுக்கு இமாமாக நின்று தொழுதுள்ளார்கள்.
▪ சுருக்கமாக சொன்னால் அல்குர்ஆனை நன்றாக ஓதுகின்ற கல்வி உள்ள பெண்களாக இருந்தால் மற்ற பெண்களுக்கு இமாமாக நின்று ஜமாஅத்தாக தொழுவது சிறந்ததும் நல்ல செயலும் ஆகும்.
▪️ காரணம் இந்த செயல், தொழுவதற்கு தெரியாதவர்களுக்கு தொழுகை கற்றுக்கொடுக்க ஒரு வாய்ப்பாகும்.
▪️ எப்படி குகூஉ செய்ய வேண்டும், எப்படி உள்ளச்சத்தோடு சரியாக தொழுவது,தொழுகை முறை ஆகியவைகளை அவர்களால் தெரிந்து கொள்ள முடியும்.
▪️ ஜமாஅத்தில் இமாமாக நிற்கும் பெண்,தன்னோடு தொழுகையில் நிற்கும் பெண்களோடு அதே ஸஃப்ஃபில், நடுவில் நிற்க வேண்டும்.மாறாக ஒரு ஸஃப் முன்னால் நிற்ககூடாது.
▪️ மஃக்ரிப், இஷா மற்றும் ஃபஜ்ர் தொழுகைகளில் ஆண்களைப் போல் பெண் இமாமாக நின்றால் சத்தமாக ஓதலாம்.
▪️ பெண்கள் அனைவரும் ஜமாஅத்தாக தொழாமல் தனித்தனியாகத் தொழுகிறார்கள் என்றாலும் அதில் எந்த தவறும் இல்லை, அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் சரி.
📽️அரபி மூலம் :
https://bit.ly/2MdLt64
மொழிபெயர்ப்பு: கற்கைக்கூடம் Telegram Channel
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: