பல குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு நிரந்தர கருத்தடை செய்வது தொடர்பான மார்க்கச் சட்டம்.


கேள்வி: திரிபோலியில், பாதிஹ் பல்கலைக்கழகத்திருந்து நேயர்; முஹம்மத் அம்மார் நஜ்ஜார் கேள்வி கேட்டனுப்பியிருக்கிறார்: கருத்தடை மாத்திரைகள் அல்லது கருப்பையக சாதனம் (IUD) அல்லது பிற முறைகளைப் பயன்படுத்தி, தற்காலிக குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்வது தொடர்பான இஸ்லாமிய சட்டம் என்ன?
அத்தோடு அதிகமான குழந்தைகளை பெற்றெடுத்த பின், நிரந்தர கருத்தடை செய்வது தொடர்பான சட்டம் என்ன? அல்லாஹ் உங்களுக்கு நற்கூழியை வழங்குவானாக!


பதில்: தேவை ஏற்படின், அதாவது அதிகமான குழந்தைகளை ஒரு தாய் பராமரிப்பது சிரமம் என்பதனால் அல்லது அவள் நோய்வாய் பட்டிருப்பதனால் அல்லது நம்பகமான மருத்துவர்கள் சிபாரிசு செய்வதால் தற்காலிக குடும்ப கட்டுப்பாடு செய்வதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. நோய் குணமாகும் வரை அல்லது குழந்தைகளை பராமரிப்பதற்கான உடல் வலிமை கிடைக்கும் வரை ஒரு வருடம் அல்லது இரு வருடங்களுக்கு தற்காலிக குடும்ப கட்டுபாடு செய்வதில் எவ்வித ஆட்சேபனையும் கிடையாது.
அப்படியான காரணங்களின்றி மாத்திரைகளை எடுப்பதோ? அல்லது கருத்தடை செய்து கொள்வதோ கூடாது. ஏனென்றால், சந்ததியை ஏன் நாம் பெருக்க வேண்டும் என்பதனை அல்லாஹ் தஆலா தெளிவு படுத்தியுள்ளான். குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ் தஆலா தன் அடியார்களுக்கு கொடுக்கும் பெரும் பாக்கியமாகும். அக்குழந்தைகளுக்கு அல்லாஹ் தஆலாவே உணவளிக்கின்றான். நம் நிய்யத் சீராக இருக்குமென்றிருந்தால் பிள்ளைகளை பராமரிப்பதற்காகவும் அவர்களுக்காக நாம் சிரமப்படுவதற்காகவும் பெரும் கூழியை அல்லாஹ் வைத்துள்ளான். தாய்மார்களுக்கு ஏற்படும் நோயினால் அல்லது அதிகமான குழந்தைகள் இருப்பதனால் அல்லது பராமரிப்பது சிரமம் என்பதனால் மாத்திரம் மாத்திரைகளை எடுக்கவோ அல்லது தற்காலிக குடும்ப கட்டுபாடு செய்து கொள்ளவோ முடியும். அதாவது, மாத்திரைகள் மூலமாக அல்லது கருப்பையக சாதனம் மூலமாக அல்லது ஊசி செலுத்துவதன் மூலமாக அல்லது குடும்ப கட்டுப்பாடு செய்யும் பிற எம்முறைகளால் செய்தாலும் சரியே.

நிரந்தர கருத்தடையைப் பொருத்தவரை, கர்ப்பமுறுவது அவள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்றிருந்தால் மாத்திரமே நிரந்தர கருத்தடை செய்ய அனுமதி உண்டு. கருத்தரித்தல் அவள் உயிருக்கு ஆபத்தாக அமையும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தால் நிரந்தர கருத்தடை செய்வதில் பிரச்சினை கிடையாது.

அப்படியில்லாவிடில், நிரந்தர கருத் தடை செய்யக்கூடாது. ஏனெனில், ஒரு பெண் திருமணம் முடிப்பதும், அவளும் அவளுடைய கணவனும் சேர்ந்து குழந்தைகளை பெற்றெடுப்பதும் வணக்கவழிபாடாகும். இதை மீறி நிரந்தர கருத்தடை செய்து கொள்வாளேயானால், பிறகு இதை நினைத்து வருத்தப்படுவாள்.
சுருக்கம்: கருக்கொள்வது அவள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்றிருந்தால் மாத்திரமே நிரந்தர கருத்தடை செய்ய முடியும்.
கேள்வியை எடுத்துரைத்தவர் : அல்லாஹ் உங்களுக்கு நிரப்பமான கூழியை அளிப்பானாக!

தமிழாக்கம்: அஃள்ம் ஃபலீல்

மூலம்: ஷேக் பின் பாஸ், https://binbaz.org.sa/fatwas/13375/حكم-منع-الحمل-نهاىيا-بعد-عدد-معين-من-الاطفال

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply