தஃவாவிற்க்கு முன் இல்மு அவசியம்

தஃவாவிற்கு முன் கல்வியறிவு இருத்தல் அவசியம்: முதலில் அறிந்து கொள்ளுதல், பின் கற்றுக்கொள்ளுதல், பின் விளங்கிக்கொள்ளுதல், பின் கற்றபடி நடத்தல் அதன் பின் தான் கற்று நடந்த படி பிறரை அழைத்தல், கற்று விளங்குவதற்கு முன் தஃவா செய்வது கூடாது, ஏனெனில் இந்நிலையில் தஃவாவானது மார்க்க அறிவு இல்லாமல் அமைந்து விடும். மேலும் கற்றுக்கொடுத்தலானது தெளிவான விளங்குதலின்றி அமைந்து விடும். இதன் அடிப்படையில் அமைந்த தஃவாவின் விளைவானது அதனால் ஏற்படக்கூடிய நலன் பலன்களை விட தீங்கு அதிகமாக ஏற்படும். உமர் இப்னு அப்துல் அஜீஸ் رحمه الله கூறியது போன்று “எவர் அல்லாஹ்வை மார்க்க அறிவின்றி வணங்குவாரோ அவர் ஏற்படுத்தக்கூடிய நலவை விட தீங்கு அதிகமாக ஏற்படும். தஃவாவிலும் அதைபோன்றே கூறலாம், “எவர் அல்லாஹ்வை நோக்கி மார்க்க அறிவின்றி அழைப்பாரோ அவர் ஏற்படுத்தக்கூடிய நலவை விட தீங்கு அதிகமாக ஏற்படும்”. பித்ஆக்கள்(நூதனங்கள்), வழிகேடுகள், பலவகையான மூடநம்பிக்கைகள், அசத்தியங்கள் அனைத்தும் மார்க்க அறிவின்றி, தெளிவின்றி அமைந்த தஃவாவினால் தானே?
ஆகவே முதலாவதாக கற்பது பின் விளங்கிக்கொள்வது அதன்பின் தெளிவான அறிவை பெறுவது
பின் கற்றபடி செயல்படுவது, அதன் பின்னர் தான் பிறரை அதை நோக்கி அழைத்தல்(தஃவா) வேண்டும்
அல்லாஹ் கூறுகிறான்,

﴿فَاعلَم أَنَّهُ لا إِلهَ إِلَّا اللَّهُ وَاستَغفِر لِذَنبِكَ ﴾

(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லை என்பதை நீர் உறுதியாக அறிந்துகொண்டு, உமது தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், …

சூரா முஹம்மது : 19

பேச்சு, செயலுக்கு முன் இங்கு அறிதலை தான் அல்லாஹ் முற்படுத்தியுள்ளான்.

மொழி பெயர்ப்பு: அய்யாசுத்தீன்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d