வாந்தி வுழூவை முறித்துவிடுமா?

கேள்வி : வாந்தி வுழூவை முறித்துவிடுமா?

பதில் : வாந்தி என்பது குறைவாகவோ அல்லது கூடுதலாகவே இருந்தாலும் அது வுழூவை முறிக்காது என்பதுவே ஆதாரமான கருத்தாகும்.

ஏனெனில், வாந்தி என்பது வுழூவை முறிக்கும் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் கிடையாது. எனவே, வுழூ தொடர்ந்திருக்கும் என்பது அடிப்படையாகும்.

”ஆதாரத்தின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட விடயத்தை (மற்றுமொரு) ஆதாரத்தின் மூலமே அல்லாமல் (நினைத்த விதத்தில்) அதனை முறித்துவிட முடியாது.” என்ற இந்த கோட்பாடு மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகவும் பிரயோஞனமானதாகும்.

வாந்தி என்பது வுழூவை முறித்துவிடும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் ஒரு ஆதாரம்கூட கிடையாது.

அதேபோன்று தான் காயங்களுக்கும் கூறப்படுகின்றது. அந்த காயத்திலிருந்து இரத்தம் அதிகமாக வெளியேறினாலும் அந்த விடயம் வுழூவை முறித்துவிடாது.

மேலும், உடலிலிருந்து வெளியேறக்கூடிய சிறுநீர், மலம், காற்று போன்றவைகளைத் தவிர மற்றவைகள் வுழூவை முறித்துவிடாது.

பதிலளிப்பவர் : அஷ்ஷைய்க் முஹம்மத் பின் ஸாலிஹ்

அல்-உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்)
தமிழில் : றஸீன் அக்பர் (மதனி)

Help us translate
இஸ்லாமிய நூல்கள் வாங்க
Telegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply

TelegramWatsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:
%d bloggers like this: