கேள்வி : ஒரு பெண் தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்ய நாடினால், அவரிடமிருந்து விவாகரத்து கேட்பது ஆகுமானாதா? ஏனென்றால் அந்த பெண்ணினால் சுய மரியாதையின் காரணமாக அவருடன் வாழ முடியாது என்று கூறுகிறாள். ஆகையால் இவ்வாறு விவாகரத்து கோரினால் அவள் மீது குற்றமா? ஷரியத்தில் இதன் சட்டம் என்ன?
நிச்சயமாக இந்தப் பெண் தன் கணவனுக்கு இரண்டாவது மனைவிக்கான மஹர் கொடுப்பதில் உதவுவதுதான் பொருத்தமானது. ஏனென்றால் கணவர் தன் மனைவிகள் மத்தியில் நீதியாக இருக்க இயலும், தனக்கு பொருள் மற்றும் உடல் பலம் இருக்கிறது என்ற நம்பிக்கை இருந்தால், பலதார திருமணம் சிறப்பானது.
நாம் இளைஞர்களை ஒரு பெண்ணிற்கு மேல் திருமணம் செய்ய ஊக்குவிக்கிறோம், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு….. என பல மனைவிகளை திருமணம் முடிக்க ஊக்குவிக்கிறோம். அல்லாஹ் நாடி வலக்கரம் பொருந்தியோர் கிடைத்தால், அவர்களிலும் எடுக்கலாம்
இதனால் உம்மத்தின் குழந்தைகளும் சந்ததியினரும் அதிகரிக்கும்.
இறைத்தூதர்(صلى الله عليه وسلم ) அவர்கள் கூறியதிலிருந்து:
” تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الأُمَمَ ”
” நீங்கள் பாசம் நிறைந்த, அதிக பிள்ளைகளை தரும் பெண்களை திருமணம் செய்யுங்கள், உங்களால் நான் மற்ற உம்மத்துகளைவிட அதிகம் பின்பற்றக்கூடியவர்களை கொண்டிருப்பேன்”
ஆகையால் இந்த சகோதரிக்கு என்னுடைய அறிவுரை என்னவென்றால், அவருடைய கணவருக்கு அவர் நாடும் விஷயத்த்தில் உதவ வேண்டும், அவளிடம் பொருட்ச்செல்வம் இருந்தால் தன் கணவருக்கு கொடுத்து உதவட்டும், அவள் பொறுமையாக இருக்க பழகிக் கொள்ளட்டும், மேலும் அல்லாஹ்விடமிருந்து தனது வெகுமதியை எதிர்பார்க்கட்டும். சிலவேளை அவர் திருமணத்தை முடித்த பிறகு அந்த விஷயம் அவளுக்கு எளிதாகிவிடக் கூடும்.
ஒருவர் முதல் மனைவியுடன் இரண்டாவது மனைவியை மணந்தால், அவளுடைய இதயம் (அதாவது, முதல் மனைவி) பொறாமைப்படும் என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும், அவர் மற்ற இருவருடன் மூன்றாவதாக ஒருவரை மணந்தால், இந்த பொறாமை மறைந்துவிடும். எனவே, அந்த பொறாமைக்கு , எங்களுக்கு ஒரு சிகிச்சை உள்ளது, அது என்னவெனில் மூன்றாவது பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும்!
நான் இதை விளையாட்டாக குறிப்பிடவில்லை, இதுவே உண்மை. ஒரு பெண்ணுக்கு போட்டியாக இரண்டாவது மனைவி வருவதால் பொறாமை ஏற்பட்டால் அது மூன்றாவது மனைவி வருவதால் குறைந்து விடுகிறது
அதெப்படி? என்னுடைய வாழ்க்கையில் நுழைந்து சிரமங்களை உருவாக்கிய இரண்டாவது மனைவிக்கு, போட்டியாக இன்னும் ஒரு மனைவி வந்துவிட்டால் அது என் சிரமங்களை குறைக்கிறது
இதனால் தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்:
மற்றும்
وَلَنْ يَّنْفَعَكُمُ الْيَوْمَ اِذْ ظَّلَمْتُمْ اَنَّكُمْ فِى الْعَذَابِ مُشْتَرِكُوْنَ
“நீங்கள் அநியாயம் செய்த படியால் இன்று உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது; நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பீர்கள்” (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).
[சூரா அஸ்-ஜுக்ருஃப் 43 : 39]
இருந்தும் இந்த துன்யாவில் குற்றவாளிகள் குற்றத்திற்கு தாங்கள் பெரும் தண்டனையில் பங்கு வேறொருவருக்கு கிடைத்தால் அது அவர்களுக்கு இலேசாக்கும்.
மேலும் ஒரு ஃபத்வா:
மதீனாவிலிருந்து உம்மு அப்துல்லாஹ் எனும் பெண் இந்த கேள்வியை கேட்கிறார்.
நான் ஒரு வாளிபப்பென், திருமணம் ஆகி பத்தாண்டுகள் ஆகியும் நான் குழந்தை செல்வம் கொடுக்கப்படவில்லை. என் கணவர் என்னுடன் சிறந்த முறையில் பார்க்கிறார். ஆனால் அவர் மற்றும் ஓர் திருமணம் செய்ய நாடுகிறார், நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை .
என்னுடைய கேள்வி, நான் அவரை இன்னும் ஒரு திருமணம் செய்வதிலிருந்து தடுப்பது குற்றமா? மேலும் அவர் இன்னும் ஒரு திருமணம் செய்தால், அவாிடம் இருந்து விவாகரத்து கேட்டால் நான் குற்றவாளி ஆகுவேனா?
ஷேக் உஸைமீன்: கணவர், பெண்களில் தான் விறும்பியவரை திருமணம் செய்து கொள்ளலாம், அல்லாஹ் கூறுகின்றான்
An-Nisa’ 4:3
فَانْكِحُوْا مَا طَابَ لَـكُمْ مِّنَ النِّسَآءِ مَثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ ۚ
பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம்.
அல் குர்ஆன் 4:3
ஆகையால், அவர் நான்கு திருமணம் வரை செய்துகொள்ளலாம். அவாின் மனைவிக்கு அவரை தடுப்பதற்கு அனுமதி இல்லை, ஏனென்றால் பல தார திருமண விடயத்தில் கணவருக்கே உரிமை உண்டு, மனைவிக்கு யாதொரு உரிமையும் இல்லை, திருமணத்தின் பொழுது வேறொரு பெண்ணை மணம் முடிக்கக் கூடாது என்று நிபந்தனை செய்திருந்தால் தவிர.
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه و سلم அவர்கள் கூறினார்கள்:
நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனையே ஆகும்.
இதை உக்பா பின் ஆமிர் (رضي الله عنه) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புஹாரி, முஸ்லிம்)
அவ்வாறு நிபந்தனை ஏதும் இல்லாத நிலையில், கணவரை இன்னுமோர் திருமணம் செய்யாமல் தடுப்பதற்கு மனைவிக்கு அனுமதி இல்லை, அவரும் தன் மனைவி தடுக்கிரால் என்பதற்காக திருமணம் செய்வதிலிருந்து விலகிவிட வேண்டாம், மனைவி விரும்பினாலும், வெறுத்தாலும் திருமணம் செய்யட்டும்.
அவ்வாறு கணவர் இன்னுமொரு திருமணம் செய்துகொண்டால் என்பதற்காக, தலாக் கேட்பதற்கும் உரிமை இல்லை. தலாக் கேட்டாலும் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனென்றால் நபி صلى الله عليه و سلم அவர்களிடம் இருந்து பின்வருமாறு செய்தி வந்துள்ளது: ஒரு பெண் தன் கணவிடம் எந்த குறையும் இன்றி தலாக் கேட்டால், அவளுக்கு சுவனத்தின் நறுமணம் ஹராமாகி விடுகிறது. (அபூ தாவூத்)
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: