ஷிர்க் செய்யும் இமாமின் பின்னால் தொழுவதன் சட்டம் என்ன?

கேள்வி:

இமாம் அப்துல் அஜீஸ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் ஒரு கேள்வி இவ்வாறு கேட்கப்பட்டது:

முன் சென்ற நல் அடியார்களின் கப்ருகளுக்குச் சென்று அவர்களிடம் பரகத் பெற்று மற்றும் சன்மானம் பெறும் நோக்கில் மவ்லிதுகளிலும், மற்ற சந்தர்ப்பங்களில் குர்ஆன் ஓதுபவரின் பின்னால் நின்று தொழுவதன் சட்டம் என்ன?

அதற்கு இமாம் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்:

இது விரிவாக பார்க்க வேண்டியது. அவர் ஷிர்க் ஏதும் செய்யாமல் மவ்லித் மட்டும் கொண்டாடுகிறார் என்றால், அவர் ஒரு பித்அத்வாதி (மார்கத்தில் இல்லாத புதுமையை ஆதரிக்க கூடியவர்). அவர் இமாமாக இல்லாமல் இருப்பது சிறந்தது

ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் கூறியதாவது:

இஸ்லாத்தில் புதிதாக (ஒன்றை) உருவாக்குவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன். ஏனென்றால் புதிதாக ஏற்படுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும். அனைத்து பித்அத்தும் வழிகேடாகும்.
-ஸுனன் அபூ தாவூத் 3991

மவ்லித் (நபி பிறந்த நாள்) கொண்டாட்டம் என்பது மார்கத்தில் அனுமதிக்கப்படாத பித்அத்களில் ஒன்று.

ஆனால் அவர் இறந்தவர்களிடமோ அல்லது ஜின்களிடமோ அல்லது  மற்ற படைப்புகளிடம் உதவி தேடி, துஆ கேட்டு வந்தால் மற்றும் “அல்லாஹுவின் தூதரே,எனக்கு உதவி செய்யுங்கள்” அல்லது ” அல்லாஹுவின் தூதரே எனது நோயை அல்லது எனது நேசத்திற்குரியவரின் நோயை குணப்படுத்துங்கள்” என்று கூறினாலே அல்லது “யா சையத் அல்-ஹுசைன்” அல்லது “யா சையத் அல்-பதவி “. அல்லது அவர்களை தவிர மற்ற இறந்தவர்களிடமோ அல்லது சிலைகள் போன்ற உயிரற்றவவற்றையோ அழைத்து “அல்-மதத் அல்-மதத் (உதவி, உதவி)”என பிரார்த்தனை செய்கிறார் எனில் அவர் பெரிய ஷிர்க் செய்த  ஒரு முஷ்ரிக். அவருக்குப் பின்னால் நீங்கள் தொழுவது கூடாது. மேலும் அவர் தொழுகை நடத்துவது செல்லாது. எனவே (அவர்களிடமிருந்து)எங்களை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டுகிறோம்.

ஆனால் அவர் மவ்லித் நடக்கும் சபைகளில் கலந்து கொள்வது  போன்ற பித்அத்தில் ஈடுபடுகிறார்,ஆனால் இணைவைப்பு செய்யவில்லை. அல்லது அவர் மண்ணறைகள் அருகில் குர்ஆன் ஓதுகிறார், அல்லது தொழுகிறார், ஆனால் இணைவைப்பு செய்யவில்லை என்றால் இஸ்லாமிய மார்கத்தில் ஒரு புதுமையை(பித்அத்) அறிமுகப்படுத்தியுள்ளார்.

எனவே அவருக்கு நாம் கற்றுகொடுக்க வேண்டும் மற்றும் நல்லதை நோக்கி அவரை வழிநடத்த வேண்டும். அவர் மண்ணறைகளில் அருகில் தொழாத தொழுகைகள் செல்லுபடியாகும். ஆனால் கப்ரஸ்தானில் அவர் தொழுத தொழுகைகள்  எதுவும் செல்லுபடியாகாது.

ஏனெனில் அல்லாஹுவின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் ‘தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத,கிறித்தவர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக!’ என கூறியுள்ளார்கள்.
ஸஹீஹ் புகாரி : 437, ஸஹீஹ் முஸ்லிம் .

 

ما حكم الصلاة خلف من يذهب إلى قبور الصالحين للتبرك بها وتلاوة القرآن في الموالد وغيرها بأجر على ذلك ؟ .

فأجاب :

هذا فيه تفصيل : إن كان مجرد الاحتفال بالموالد من دون شرك : فهذا مبتدع ، فينبغي أن لا يكون إماماً ؛ لما ثبت في الحديث الصحيح عن النبي صلى الله عليه وسلم أنه قال : ( إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة ) – رواه أبو داود ( 3991 ) – والاحتفال بالموالد من البدع ، أما إذا كان يدعو الأموات ويستغيث بهم ، أو بالجن ، أو غيرهم من المخلوقات فيقول : ” يا رسول الله انصرني ” ، أو ” اشف مريضي ” ، أو يقول : ” يا سيدي الحسين ” ، أو ” يا سيدي البدوي ” ، أو غيرهم من الأموات ، أو الجمادات كالأصنام ، المدد المدد : فهذا مشرك شركا أكبر ، لا يصلى خلفه ، ولا تصح إمامته – نسأل الله العافية – .

أما إذا كان يرتكب بدعة كأن يحضر المولد ولكن لا يأتي بالشرك ، أو يقرأ القرآن عند القبور ، أو يصلي عندها ، ولا يأتي بشرك : فهذا يكون قد ابتدع في الدين ، فيعلَّم ، ويوجَّه إلى الخير وصلاته صحيحة إذا لم يفعلها عند القبور ، أما الصلاة في المقبرة : فلا تصح ؛ لقول النبي صلى الله عليه وسلم : ( لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد ) متفق عليه .

பார்க்க: Fataawa ash-Shaykh Ibn Baaz (9/373, 374 And 12/108, 109).

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply