ஷிஆக்கள் என்பவர்கள் யார்?அவர்கள் குறித்த மார்க்க தீர்ப்பு என்ன?அவர்களுக்கு ஹஜ்/உம்ரா செய்வதற்கு அனுமதி தருவதன் சட்டம் என்ன?

கேள்வி:

ஷிஆக்கள் என்பவர்கள் யார்?அவர்கள் குறித்த மார்க்க தீர்ப்பு என்ன?அவர்களுக்கு ஹஜ்/உம்ரா செய்வதற்கு அனுமதி தருவதன் சட்டம் என்ன?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

ஷீஆக்கள் பல குழுக்கள்.அவர்கள் ஒரு குழு கிடையாது.அவர்கள் 22 குழுக்கள் என்று ஸிஹ்ரிஸ்தானி என்பவர் கூறியுள்ளார். அவர்கள் பல தரப்படுகின்றனர் .அவர்களில் சிலர்களின் பித்அத் அவர்களை காபிராக மாற்றும்.இன்னும் சில கூட்டத்தினர்களின் பித்அத் அவர்களை காபிராக்காது. சுருக்கமாக கூறுவதாயின் அவர்கள் அனைவரும் பித்அத் வாதிகள்.

இவர்களில் மிகவும் குறைந்த நிலையில் உள்ளவர்கள் அபூபக்கர் ,உமர் ,உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹும் அவர்களைவிட அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மேன்மை படுத்துபவர்கள்.
இவர்கள் தவறிழைத்தவர்கள். சஹாபாக்களின் ஏகோபித்த கருத்துக்கு முரணானவர்கள்.

இவர்களின் மிக மோசமானவர்கள் ராபிலாக்கள். -குமைனிய்யின் கூட்டத்தினர்- இவர்கள் தான் ( ஷீஆக்களில்) மிகவும் மோசமானவர்கள். அவ்வாறே நுஸைரிய்யாக்கள் (மிக மோசமானவர்கள்). -ஹாபில் அல்அஸத் அவர்களின் கூட்டத்தினர்-இவர்களின் கூட்டம் சிரியாவில் உள்ளது.
சிரியாவில் உள்ள பாத்தினிய்யாக்கள்,ஈரானில் உள்ள பாத்தினிய்யாக்கள்,இந்தியாவில் உள்ள பாத்தினிய்யாக்கள்; இவர்கள் அனைவரும் இஸ்மாஈலிய்யாக்கள். இந்த மூன்று கூட்டத்தினர்களும் (ஷீஆக்களில்) மிகவும் கடுமையானவர்கள்,மிகவும் மோசமானவர்கள். இவர்கள் காபிர்கள். இவர்கள் முஸ்லிம்களுக்கு தீங்கை நாடுபவர்கள். இறைநிராகரிப்பை விட முஸ்லிம்கள் மிகவும் மோசமானவர்கள் என்று கருதுபர்கள்.இவர்கள் குப்ரை வெறுப்பதை விட முஸ்லிம்களை கடுமையாக வெறுக்கின்றனர். மேலும் அவர்களின் இரத்தங்களை ஓட்டுதல்,அவர்களின் சொத்துக்களை அபகரித்தல் போன்றவை அவர்களுக்கு ஹலால் என்று கருதுகின்றனர்

அதேபோன்று இவர்களின் தலைவர்கள் மறைவானவைகளை அறிகின்றவர்கள், பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள், அவர்களிடம் அபயம் தேடுதல், அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல் போன்ற வணக்கங்களை அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு நிறைவேற்றுகின்றனர். இதுதான் இவர்கள் அவர்களின் தலைவர்களுடன் நடந்து கொள்கின்ற விதமாகும்.

மேலும் அபூபக்கர்,உமர், உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹும் அவர்களின் தலைமைத்துவம் பிழையானது என்று கருதுகின்றனர் .அலி,ஹஸன்,ஹுஸைன்,அம்மார் பின் யாஸிர் இது போன்ற குறிப்பிட்ட சில நபர்களைத் தவிர ஸஹாபாக்கள் அனைவரும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய காபிர்கள் என்று கருதுகின்றனர். ஸஹாபாக்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அநியாயம் இழைத்துவிட்டார்கள் என்று கருதுகின்றனர்.

ஷியாக்கள் பல கூட்டத்தினர்கள் ஒரே கொள்கை கிடையாது. இவர்களில் சிலைகளை வணங்குபவர்கள்,அஹ்லுல் பைத் விடயத்தில் எல்லைமீறியவர்கள், அல்லாஹ்வையன்றி அழைப்பவர்களைத்தவிர ஏனையவர்கள் காபிர்கள் கிடையாது.
அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அபூபக்கர்,உமர்,உஸ்மான் ரலியல்லாஹ் அன்ஹும் அவர்களை விட மேன்மைப்படுத்துவது மாத்திரம் காபிராக மாற்றாது.மாற்றமாக அது பித்அத்,தவறு.
மேன்மைப் படுத்துவதில் முதலாவது அபூபக்கர் பின்பு உமர் பின்பு உஸ்மான் பின்னர் அலி . அலி ரலியல்லாஹு அன்ஹும் நான்காவது சிறந்தவர். இதுதான் ஸஹாபாக்களின் ஏகோபித்த கருத்தாகும்.

கேள்வி:
இப்படியான நம்பிக்கை உடையவர்களுக்கு கஅபாவில் ஹஜ் செய்வதற்கு அனுமதிப்பது எப்படி?

பதில்:
கட்டாயம் இவர்களுடைய விடயங்களை பார்க்க வேண்டும்.அது விடயமாக (ஸஊதியாகிய) இந்த நாட்டுக்கு அல்லாஹ் ஒவ்வொரு நன்மைக்கும் உதவி செய்வானாக.

பதாவா இப்னு பாஸ் 28/258

 

மொழிபெயர்ப்பு:அஹ்ஸன் அல்கமி (ஆசிரியர்:மர்கஸு அல்கமா)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply