வானியல் கணக்குகளை பின்பற்றாமல் பிறை பார்ப்பது நபிவழியாகும்

கேள்வி:

ரமழான் மற்றும், ஈதுல் பித்ர் தொடங்கும் நேரம் குறித்து முஸ்லிம் அறிஞர்களிடையே பெரும் கருத்துவேறுபாடு உள்ளது. அவர்களில் சிலர் பிறை பார்த்தவுடன் செயல்படுகிறார்கள். ஏனெனில் ஹதீஸ்களில், பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; என்று வந்துள்ளது. மற்றவர்கள், வானியல் நிபுணர்களின் கணக்குகளை நம்பி, இந்த விஞ்ஞானிகள் வானியல் அறிவியலில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். சந்திர மாதங்கள் எப்போது தொடங்குகிறது என்பதை அவர்களால் அறிய முடிகிறது என்று கூறுகிறார்கள். இந்த விஷயத்தில் யார் கூறுவது சரி?

பதில்:

முதலில்: (ஸஹீஹ் முஸ்லிம்-1974) பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; (மேக மூட்டத்தால்) உங்களுக்குத் பிறை தென்படவில்லையானால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று நபி ﷺ அவர்கள் கூறியவற்றை பின்பற்றுவதே சரியான முறையாகும். ரமழான் மாதத்தின் தொடக்கத்தையும், ரமழான் மாதத்தின் முடிவையும் பிறை பார்ப்பதன் மூலமே தீர்மானிப்பதற்கு இதுவே அடிப்படையாகும்.அல்லாஹ் நமது நபியான முஹம்மது ﷺ அவர்களுக்கு இறக்கி வைத்த ஷரியத்தானது , முழு உலகிற்கும், மறுமை நாள் வரைக்கும் நிரந்தரமானதாகவும் பொதுவானதாகவும் அனுப்பி வைத்தான். இது அனைத்து காலங்களுக்கும், இடங்களுக்கும் தகுதியான சட்டமாகும், மக்கள் மத்தியில் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, மக்கள் மத்தியில் தொலைநோக்கு சாதனங்கள் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி, மக்கள் மத்தியில் வானியல் நிபுணர்கள் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, எல்லா கால, எல்லா இட மக்களாலும் செய்ய இயலும் விடையம் பிறை பார்ப்பது. வானியல் கணக்குகளோ மக்கள் அனைவராலும் செய்ய முடியாத விடையம், அதே போன்று வானியல் கருவிகளும் அனைத்து மக்களாலும் பெற முடியும் என்று கூற முடியாது.

இரண்டாவது: வானியல் மற்றும் பிற விஞ்ஞானங்களில் இன்னும் என்ன முன்னேற்றம் ஏற்படும் என்பதை அல்லாஹ் அறிந்திருந்தான்.ஆனால் அதையும் மீறி அவன் பின்வருமாறு கூறியுள்ளான். “உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்” – சூரா பகரா-2:185..மேலும், நபி ﷺ அவர்கள் கூறினார்கள், பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; எதிர் காலத்தில் வானியல் நிபுணர்கள் தங்களது விஞ்ஞானத்தை கொண்டு நட்சத்திரத்தின் இருப்பிடத்தை கணக்கிட்டு கொள்ளும் அளவிற்கு அறிவியலை வளர்த்து கொள்வார்கள் என்று அல்லாஹ் அறிந்தும், ரமழானின் ஆரம்பமும், முடிவும் பிறை பார்ப்பதுடன் இணைத்தே கூறியுள்ளார்கள், விஞ்ஞானிகளின் வானியல் கணக்குகளை கொண்டு அல்ல.
நோன்பின் ஆரம்பமும், அதன் முடிவையும் பிறையை பார்ப்பதன் அடிப்படையில், அல்லாஹ், நபி ﷺ அவர்கள் மூலம் முஸ்லிம்களுக்கு விதித்ததை முஸ்லிம்கள் பின்பற்ற கடமைபட்டுள்ளனர். இது அறிஞர்களின் ஒருமித்த கருத்தை போன்றதாகும். எவர் இதனுடன் மாறுபட்ட கணக்குகளை பின்பற்றுகிறாரோ அவர் ஷாத் (வித்யாசமான/தனித்த) கருத்தை கூறுகிறார் மற்றும் அவரது கருத்தை ஏற்க கூடாது. மேலும் அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

Islamqa இணையத்தில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது..

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply