بسم اللــــه الرحمـــــــــن الرحيم
ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்
கேள்வி 9️⃣ :
நோன்பு திறப்பதற்கு சில நிமிடத்திற்கு முன் மாதவிடாய் ஏற்பட்ட பெண் குறித்த மார்க்கத் தீர்ப்பு என்ன?
📝 பதில் :
அதான் கூறுபவர் சரியான நேரத்தில் கூறினால், அவள் அந்த நோன்பை மீட்ட வேண்டும். ஆனாலும், சூரியன் மறைந்த பின்பு அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால்,அவளது நோன்பு செல்லுபடியானதாகும்; அவள் அந்நோன்பை மீட்டத் தேவையில்லை.
கேள்வி 1️⃣0️⃣:
குழந்தை பிறப்பு காரணமாக தம்முடைய ரமழான் நோன்பை முறித்துக் கொள்ளும் பெண் குறித்த மார்க்கத் தீர்ப்பு என்ன?
📝 பதில் :
அவள் அந்நோன்புகளை திரும்ப வைக்க வேண்டும்.
கேள்வி 1️⃣1️⃣:
குழந்தை பிறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு தமக்கு ஏற்பட்ட இரத்தப்போக்கு காரணமாக ரமழான் நோன்பை முறித்துக் கொள்ளும் பெண் குறித்த மார்க்கத் தீர்ப்பு என்ன?
📝 பதில் :
சிறிதளவு இரத்தம் மட்டும் வெளியானால், அது நிஃபாஸ் (குழந்தைப் பேறு காரணமாக வெளிப்படும் இரத்தம்) என்றே கருதப்படும். ஆகையால், அவள் தமக்கு விடுபட்ட நோன்புகளை திரும்ப நோற்க வேண்டும்.
📝 மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: