திருமணம், திருமண நிச்சயத்தில் மோதிரங்கள், தாலி போன்றவற்றை அணிவது, அதற்கு விசேட சக்தி உள்ளதாக நம்புவது

திருமணத்தில்/திருமண நிச்சயத்தில் அணியப்படும் மோதிரங்களைப் பொறுத்தவரை, இது முஸ்லிம்களின் கலாச்சாரத்தில் ஒன்றல்ல. மேலும் இந்த மோதிரங்கள் கணவன்-மனைவி மத்தியில் உறவை மேம்படுத்தும், அதை கழட்டினால், அல்லது அணியாவிட்டால் அது கணவன்-மனைவி மத்தியிலான உறவை பாதிக்கும் என்று நம்பினால் அது ஒரு வகை ஷிர்க் மற்றும் ஜாஹிலி (மடமை) சிந்தனை. மேற்குறிப்பிடப்பட்ட காரணங்களினால் இது போன்ற திருமண மோதிரங்களை அணிவது அனுமதிக்கப்பட்டது அல்ல.

அதற்கான காரங்கங்கள்:

  • முதலாவதாக, அது நன்மை இல்லாத ஏதும் மக்களை பின்பற்றுவதாகும். இது மாற்று மத கலாச்சாரத்திலிருந்து முஸ்லிம்கள் மத்தியில் வந்த கலாச்சாரம்.
  • கணவன்-மனைவியின் உறவில் இந்த மோதிரத்தினால் தாக்கம் ஏற்படும் என்று நம்புவது ஒரு வகை ஷிர்க்காகும். லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி.

இது குறித்து அஷ் ஷெய்க் இப்னு உஸைமீன் அவர்களிடம் கேட்கப்பட்டது, அதற்கவர் கூறினார்:

“திருமண நிச்சயம் செய்யப்படும்போது மோதிரங்கள் போடப்படுகிறது, அடிப்படையில் மோதிரங்கள் அணிவதில் தவறேதும் இல்லை, அதனுடன் தவறான நம்பிக்கைகளை கொண்டிருந்தாலே தவிர. உதாரணமாக ஒரு ஆன் தன்னுடைய பெயரை மோதிரத்தில் எழுதி அதை அவர் திருமணம் செய்யப்போகும் பெண்ணிடம் கொடுக்கிறார், பதிலுக்கு பெண்ணும் தன்னுடைய பெயரை எழுதி அவனிடம் கொடுக்கிறாள், இவர்கள் இந்த மோதிரங்கள் தங்களது உறவை வலுவாக்கும் என்று நம்புகிறார்கள். இது தவறான செயல், ஒரு பொருளுக்கு அதற்கில்லாத சக்தி அதற்க்கு இருப்பதாக நம்புவதாகும் , இதற்க்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமும் இல்லை, மேலும் இது அறிவுக்கு பொருந்தாத செயல். ”

மூலம்: islamqa.info
தமிழாக்கம்: நயீம் இப்னு அப்துல் வதூத்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply