ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

கேள்வி 5️⃣ :

ஒரு நபர் நோன்பு திறப்பதற்கு முன்பு உறங்கிவிட்டு, மறுநாள் ஃபஜ்ர் வரையிலும் எழவில்லை எனும்போது, அந்நபர் நோன்பை தொடர வேண்டுமா..? அல்லது முறிக்க வேண்டுமா.?

பதில் :

அந்நபர் நோன்பை தொடர வேண்டும்.

நபி ﷺ அவர்களின் தோழர்களில் ஒருவரான அல்-கயீஸ் பின் ஸிம்ராஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு இதேபோல் ஏற்பட்டது.

ஒரு நபர் நோன்பு திறக்க மறந்த நிலையில் உறங்கிவிட்டால், மறுநாள் இரவு (இஃப்தார்) வரையிலும் அவர் உணவு உண்பதற்கு அனுமதியில்லை என்பதாக இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தது.

அல்-கயீஸ் பின் ஸிம்ராஹ் (ரலியல்லாஹு அன்ஹு) ஒருநாள் வேலை முடிந்த நிலையில் தம் மனைவியிடம் திரும்பிவிட்டு

, உண்பதற்கு உணவு ஏதேனும் உள்ளதா (?) எனக் கேட்டார். அவரது மனைவி ‘இல்லை’ என்பதாக கூறிவிட்டு, உங்களுக்காக சில உணவுகளை நான் சென்று வாங்கி வருகிறேன் என்று கிளம்பினார். அவரது மனைவி வீட்டிற்கு திரும்பிய போது அவர் உறங்கிவிட்டார். பிறகு மறுநாள் கயீஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் சிறிது நேரம் வேலை செய்துவிட்டு, அப்படியே மயக்கமுற்றார்.

அதன் பிறகுதான் அல்லாஹு தஆலா கீழ்கண்ட வசனத்தை அருளினான் :

أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ لَهُنَّ . عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنتُمْ تَخْتَانُونَ أَنْفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْ . فَالْآنَ بَاشِرُوهُنَّ وَابْتَغُوا مَا كَتَبَ اللَّهُ لَكُمْ . وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ

(நம்பிக்கையாளர்களே!) நோன்பு (நாள்களின்) இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவிகளுடன் வீடு கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (நோன்புடைய காலத்தில் இஷாவுக்குப் பின்னர் உங்கள் மனைவிகளுடன் கூடாமலும், யாதொரு பொருளை புசிக்காமலும் இருந்து) நிச்சயமாக நீங்கள் உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்து உங்கள்மீது இரக்கமுற்று உங்கள் கஷ்டத்தை நீக்கிவிட்டான். ஆகவே, இனி இருள் நீங்கி விடியற்காலை (ஃபஜ்ர்) ஆகிவிட்டது என்று உங்ளுக்குத் தெளிவாகும் வரையில் (நோன்பின் இரவு காலங்களில் உங்கள்) மனைவிகளுடன் சேர்ந்து அல்லாஹ் உங்களுக்கு(ச் சந்ததியாக) விதித்திருப்பதைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் (அந்நேரங்களில்) புசியுங்கள், பருகுங்கள்.

(அல்குர்ஆன் 2:187)

மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

நான்காம் பாகத்தை வாசிக்க

ஆறாம் பாகத்தை வாசிக்க

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d