ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

 

கேள்வி 6️⃣ :

ஒருவர் சஹர் சாப்பிடும் போது, ​ (தொழுகைக்கான) பாங்கு சொல்லப்படுவதை கேட்டால், அவரது வாயில் உள்ள உணவுகளை அகற்ற வேண்டுமா.? அல்லது அவர் அதனை சாப்பிட்டு முடிக்கலாமா..!?

 

பதில் :

 

அவரது வாயிலுள்ள உணவுகளை வெளியேற்றத் தேவையில்லை; அதேசமயம் (அந்த உணவிற்கு பிறகு) அவரிடம் இருக்கும் தண்ணீரை தவிர வேறெதும் சாப்பிடக் கூடாது.

 

நபி (صلى الله عليه و سلم) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிப்பதாவது :

 

إذا سمِعَ أحدُكم النداء ، و الإناء على يده ، فلا يضعه ، حتى يقضي حاجته منه

 

“உங்களில் ஒருவர் தம் கையில் உணவுப் பாத்திரம் இருக்கும் நிலையில், அதான் (பாங்கு) சொல்லப்படுவதை செவியேற்றால், உணவருந்தி முடிக்கும் வரையிலும் அவர் அந்த பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்”.

(நூல் : ஸுனன் அபுதாவூத்)

 

ஆகையில், அந்நபர் மீது எவ்வித குற்றமுமில்லை.

 

📝 மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply