ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

 

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

 

கேள்வி 2️⃣3️⃣ :

ரமழானின் பகல் பொழுதில் தம் கணவனை தம்முடன் உடலுறவு வைத்துக்கொள்ள அனுமதித்த பெண் குறித்த மார்க்கச் சட்டம் என்ன.? அப்பெண் தம் கணவனை தடுக்காததின் சட்டம் என்ன.?

 

பதில் :

 

இந்த செயலுக்கு அவள் சம்மதித்தால், பாவம் செய்தவளாக ஆகிவிடுவாள்; அவள் மீதான கடமையான பரிகாரத்தை பொறுத்தமட்டில், அதனை செய்யுமாறு அந்த பெண்ணிற்கோ அல்லது அவளை செய்ய பணிக்குமாறு அவளது கணவனையோ நபி ﷺ அவர்கள் கட்டளையிடவில்லை. ஆனாலும் (ரமழான் பகல் நேரத்தில் அவர்களுக்கு மத்தியில் நடந்த உடலுறவானது) அந்த பெண்ணின் சம்மதத்துடன் நடந்திருந்தால் அவளும், அவளது கணவனும் பரிகாரம் செய்ய வேண்டும். ஏனென்றால் அச்செயல் நடைபெறுவதற்கு அவள் ஒர் காரணமாகிவிடுகிறாள்; எனவே அவள் பாவியாகிறாள்.

 

அதேசமயம் அவளது கணவன் அவளை நிர்ப்பந்தம் செய்திருந்தால், அவன் மாத்திரம் பாவியாக கருதப்படுவான்.(அவன் பரிகாரம் செய்தாக வேண்டும்.)

 

கேள்வி 2️⃣4️⃣ :

தாம் ரமழானுடைய மாதத்தில் இருப்பதையே மறந்துவிட்டு, அதன் பகல் பொழுதில் உடலுறவு வைத்துக்கொண்ட நபர் குறித்த மார்க்கச் சட்டம் என்ன.?

 

பதில் :

 

அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

 

தாம் ரமழான் மாதத்தில் இருப்பதை உண்மையாகவே அந்நபர் மறந்திருந்தால், அவர் அந்நோன்பை திரும்ப வைக்க தேவையில்லை.

 

இதுபோன்ற நிகழ்வு ரமழானின் முதல் நாளில் மட்டுமே நிகழ வாய்ப்புள்ளது; எனவேதான் (மற்ற மாதத்தில் இருப்பது போன்ற எண்ணத்தில்) அவர் மறக்க வாய்ப்புள்ளது.

 

ஒருவேளை அந்நபர் அவ்வாறு மறந்திருந்தாலும், அவரது மனைவியுமா மறந்திருந்தாள்..(?)

 

(இது சார்ந்த) பரிகாரத்தை பொறுத்தளவில், அவர் அதனை கட்டாயம் செய்ய வேண்டும்.

(பரிகாரம் குறித்து அறிய முந்தைய தொடர்களை பார்க்கவும்)

📝மூலநூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply