அஸர்‌ அல்லது இஷா நேரத்தில்‌ மாதவிடாயிலிருந்து சுத்தமானால்‌ அவள்‌ அஸருடன்‌ ளுஹரையும்‌ சேர்த்து ஜம்வு செய்தல்‌

ஒரு பெண்‌ அஸர்‌ அல்லது இஷா நேரத்தில்‌ மாதவிடாயிலிருந்து சுத்தமானால்‌ அவள்‌ அஸருடன்‌ ளுஹரையும்‌ சேர்த்து அல்லது இஷாவுடன்‌ மஃக்ரிபையும்‌ சேர்த்து ஜம்வு செய்தல்‌ என்ற அடிப்படையில்‌ தொழ வேண்டுமா?

பதில்‌: அறிஞர்களின்‌ இரு வேறு கருத்துக்களில்‌ சரியான கருத்தின்படி, ஒரு பெண்‌ மாதவிடாயிலிருந்து அல்லது பிரசவத்தீட்டிலிருந்து அஸர்‌ நேரத்தில்‌ தூய்மையானால்‌ அவள்‌ ளுஹரையும்‌ அஸரையும்‌ சேர்த்துத்‌ தொழுவது அவசியமாகும்‌. ஏனெனில்‌ நோயாளி, பயணியைப்‌ போன்ற தக்க காரணமுள்ளவர்களின்‌ விஷயத்தில்‌ இவ்விரண்டு தொழுகைகளின்‌ நேரமும்‌ ஒன்றுதான்‌. இவளது தூய்மை தாமதமானதால்‌ இவளும்‌ தக்க காரணமுடையவள்தான்‌. இவ்வாறே இஷா நேரத்தில்‌ தூய்மையாகிவிட்டால்‌ மஃக்ரிபையும்‌ இஷாவையும்‌ சேர்த்துத்‌ தொழுது கொள்ள வேண்டூம்‌. மேற்கூறப்பட்ட காரணம்‌ இதற்கும்‌ பொருந்தும்‌. அதிகமான நபித்‌தோழர்கள்‌ இவ்வாறே தீர்ப்பு வழங்கியுள்ளனர்‌.

இமாம் இப்னு பாஸ் – தொழுகை பற்றிய முக்கியமானகேள்வி பதில்கள்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Telegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: