பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 05 |
-அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் உஸைமின் [ரஹிமஹுல்லாஹ்] அவர்களின் புத்தகத்தில் இருந்து…
நிபாஸும் (பேறுகால உதிரப்போக்கும்) அதன் சட்டங்களும்:
நிபாஸ் என்பது, பேறு காலத்தின் போதோ, பிரசவத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களளுக்கு முன்போ அல்லது பின்போ பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து வலியுடன் வெளியாகும் இரத்தத்தைக் குறிக்கும்.
ஷெய்ஹூல் இஸ்லாம் இப்னு தைமியா கூறுகிறார்:
ஒரு பெண் பிரசவ வேதனை ஆரம்பமாவதுடன் இரத்தம் வெளிவரக் கண்டால் அது நிஃபாஸ் ஆகும். அது இரண்டு அல்லது முன்று நாட்களுக்கென வரையறுக்கப்படவில்லை. இதன் கருத்தாவது : பிரசவ வேதனையைத் தொடர்ந்து பிரசவம் நிகழ்ந்தால் அது நிபாஸ் இரத்தமாகும். இல்லாவிடில் அது நிபாஸ் இல்லை. அதன் நாட்களுக்கு எல்லை இருக்கின்றதா என்பதில் அறிஞர்கள் கருத்துவேறுபட்டுள்ளனர்.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது நூலில் ‘நிஃபாஸ் வெளிவரும் காலத்தை பொறுத்த வரையில் குறைந்த பட்ச காலம் கூடிய காலம் என்ற வரம்பு கிடையாது. ஒரு பெண்ணுக்கு நாற்பது, அறுபது அல்லது எழுபது நாட்களுக்கு மேலாக இரத்தம் வந்து பின்பு நின்றுவிடுகின்றது என்றால் அது நிபாஸு டைய இரத்தமாகும். சிலவேளை இந்த இரத்த வெளியேற்றம் தொடருமாயின் அப்பொழுது நிஃபாஸ் என்பதற்கான உச்ச கட்ட வரம்பு நாற்பது நாட்களாகக் கொள்ள வேண்டும் இதுவே அதிகமான பெண்கள் காணும் சாதாரண கால எல்லையாகும். அத்துடன் இக்கால எல்லை குறித்து சில சான்றாதாரங்களும் (ஸஹாபாக்கள் தாபிஈன்களின் கூற்றுக் களும்) வந்துள்ளன’.
எனது நிலைப்பாட்டைப் பொறுத்தவரை ‘மேற் குறிப்பிட்டவற்றின் அடிப்படையில் ஒரு பெண்ணுக்கு நாற்பது நாட்களுக்கு மேல் இரத்தம் தொடர்ந்தும் வருகிறது என வைத்துக் கொள்வோம். முன்னைய கால வழமையின் படி அதற்குப்பின் நின்றுவிடுமென்றிருப்பின் அல்லது நிற்பதற்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அது நிற்கும் வரை எதிர் பார்த்திருப்பாள். இல்லாவிடில் நாற்பது நாட்களைப் பூரணப்படுத்தி, குளித்து தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மறுபுறம், அந்த நாற்பது நாட்களையும் பூரணப்படுத்தியதைத் தொடர்ந்து அவளுக்கு மாதவிடாய் காலம் நேர்படுமாயின் அக்காலம் முடியும் வரை பொறுத்திருக்க வேண்டும். அதன் பின்பு அது நின்றுவிடுமானால் அதனை வழமையாக ஆக்கி எதிர்காலத்தில் அதனடிப்படையில் கணித்துக் கொள்ள வேண்டும். எனினும், அவளது வழக்கமான மாத விடாய் காலத்தையும் கடந்து இரத்த வெளியேற்றம் இருக்குமாயின் அப்பொழுது அதனை இஸ்திஹாழாவாகக் கருதி அதன் சட்டங்களை அவள் கடைப்பிடிப்பாள்.
அதே வேளை, நாற்பது நாற்களுக்கு முன்னரே நிபாஸ் நின்று சுத்தமடைந்து விட்டால் அவள் குளித்து தொழுவதற்கும் நோன்பு நோற்பதற்கும் உடலுறவு கொள்வதற்கும் அனுமதி உண்டு. இரத்தம் நின்று விடுவது ஒரு நாளைக்கும் குறைவாக இருந்தால் அதற்கு எந்த சட்டமும் கிடையாது. இது அல் முஃனி; என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு பெண் தெளிவான மனித உருவை பெற்றெடுக்காத வரையில் அவளது நிபாஸை உறுதிப்படுத்த முடியாது. விழு கட்டியை பெற்றெடுத்து அது நன்கு வளர்ச்சியடைந்த மனித உருவின் அமைப்பைத் தெளிவாகக் காட்டாத நிலையில் அதனுடன் வெளிவந்த இரத்தத்தை நிபாஸ் எனக் கொள்ள முடியாது. மாறாக அது இரத்த நாலத்திலிருந்து வெளிவந்த இரத்தம் என்றே கருத வேண்டும். ஒரு மனித உரு கருவில் உருவாகி வளர்ச்சியடைவதற்கு அது கருத்தரித்த தினத்திலிருந்து மிகக் குறைந்தபட்சம் எண்பது நாட்கள் ஆகும்; கூடிய பட்சம் தொண்ணூறு நாட்களாகும்.
அல் மஜ்த் இப்னு தைமிய்யா அவர்கள் பின்வருமாறு கூறு கிறார்: ‘ஒரு பெண் எப்போது பிரசவவேதனைக்கு முன் இரத்தம் வரக் கண்டால் அதை பொருட்படுத்த வேண்டிய தில்லை. பிரசவ வேதனையின் பின் இரத்தம் வரக்கண்டால் அவள் தொழுகை நோன்பு என்பவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். என்றாலும் அவள் தனது குழந்தையைப் பிரசவித்ததன் பின் பிரசவ வேதனைக்கு முன் வந்த இரத்தம் நிபாஸாக இருந்ததை அறிந்தால் அவள் அக்காலப்பகுதி யில் விட்ட தொழுகைகளையும் நோன்பையும் மீண்டும் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லாதிருந்தால் வெளி ரங்கமான சட்டத்தையே கடைப்பிடிக்க வேண்டும். ஆகவே தொழுகை மற்றும் நோன்புகளை மீண்டும் கழாச் செய்ய வேண்டியதில்லை’ இக்னாஃ என்ற நூலின் விரிவுரையில் மஜ்த் இப்னு தைமியா கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிபாஸுக்குரிய (பேறு காலத்தில் ஏற்படக்கூடிய இரத்தத்தின்) சட்டங்கள்:
நிபாஸுக்குரிய சட்டங்கள் யாவும் மாதவிடாய்க்கான சட் டங்களைப் போன்றதுதான். ஆனால் பின்வரும் விடயங்க ளில் வித்தியாசப்படுகின்றன:
முதலாவது: இத்தா நிஃபாஸுடன் அல்லாது விவாகரத்தின் மூலமே கணிக்கப்படுகிறது. அதாவது: தலாக் (விவாகரத்து) பிரசவத்திற்கு முன்னர் செய்யப்பட்டால் இத்தாவானது பிரசவத்துடன் முடிவடைகின்றது. அன்றி, அதற்கும் நிபா ஸுடைய காலத்திற்கும் எதுவிதத் தொடர்புமில்லை. சில வேளை பிரசவத்தின் பின் தலாக் சொல்லப்பட்டால் அவள் தனது மாதவிடாய் வரும்வரை காத்திருந்து முன்னறே விவரித்தபடி அவளது இத்தாவை கணிக்க வேண்டும்.
இரண்டாவது: ‘ஈலாவுடைடைய காலம் மாதவிடாய் காலத்தை வைத்தே தீர்மானிக்கப்படுமே தவிர நிபாஸு டைய காலத்தை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை.
‘அல் ஈலாஉ’ என்பது ஒரு கணவன் நிரந்தரமாக அல்லது நான்கு மாதத்திற்கு மேல் தனது மனைவியுடன் உடலுறவு கொள்வதில்லையென சத்தியம் செய்வதைக் குறிக்கும்.-இத்தகைய கட்டத்தில் குறித்த மனைவி, உடலுறவு கொள்ள வேண்டும் என உரிமையுடன் கேட்பாளாயின் அக்கணவனுக்கு சத்தியம் செய்த நாளிலிருந்து நான்கு மாதங்கள் அதற்காக கால அவகாசம் வழங்கப்படும். இக்கால எல்லை நிறைவடைந்ததும் ஒன்றில் உடலுறவில் ஈடுபட அல்லது மனைவியை பிரிவதற்கு (நீதிபதியால்) கட்டாயப்படுத்தப் படுவார். எனவே, இக்கால எல்லைக்குள் மனைவிக்கு நிபாஸ் ஏற்பட்டால் அது கணவன் மீது கணிக்கப்படமாட்டாது. அவள் சுத்தமாவதற்கு சமமான காலத்தைக் கணித்து ஈலாவுடைய காலத்துடன் சேர்க்கப்படும். இது மாதவிடாயி லிருந்து வித்தியாசமானது. மாதவிடாய்குரிய காலம் கணவன் மீது கணிக்கப்படும்.
மூன்றாவது : ஒரு பெண்ணின் பருவமடைதல் என்பது மாத விடாய் ஏற்படுதலின் மூலமே நிகழ்கிறது. மாற்றமாக நிபாஸ் ஏற்படுவதைக் கொண்டல்ல. அவளைப் பொருத்த வரை ஒரு வகை நீர் வெளிப்படும் வரையில் கருத்தரிப்பது நிகழமாட்டாது. ஆகவே பருவமெய்தல் என்பது கருத்தரிப் பதற்கு முன்னர் வெளிப்படும் நீரின் மூலம் ஏற்படும் ஒரு விடயமாகும்.
நான்காவது : மாதவிடாய் இரத்தமானது இடையில் நின்று விட்டு பின்னர் மீண்டும் வழமையான சுழட்சி முறைப்படி வந்தால் அது உண்மையான மாதவிடாயாகும். உதாரண மாக ஒரு பெண்ணின் வழமையான மாதவிடாய் காலம் எட்டு நாட்களாக இருந்து, அது நான்காவது நாளில் நின்று விடுகிறது எனக் கொள்வோம். பின் தொடர்ந்து இரண்டு தினங்கள் ஐந்தாம் ஆறாம் நாட்களிலும் அதே நிலையில் இருப்பதைக் காண்கிறாள். பின் ஏழாம் எட்டாம் நாட்களில் மீண்டும் இரத்தம் வெளிப்படுவதைக் கண்டால் அது மாத விடாயாகவே கருதப்படும் அப்போது அதற்குரிய சட்டங் களைப் அவள் பின்பற்ற வேண்டும்.
ஆனால் நிஃபாஸுடைய இரத்தம் நாற்பது நாட்களுக்கு முன் நின்று, மீண்டும் நாற்பதாவது நாள் வெளிவருகின்ற தெனில் அது சந்தேகத்திற்குரியது. அப்போது அவள் உரிய வேளையில் தொழுகை, நோன்பு ஆகிய கடமைகளை நிறை வேற்ற வேண்டும். கட்டாயக் கடமைகளைத் தவிர வேறு எவையெல்லாம் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளனவோ அவை இவளுக்கும் தடை யானவையே. மாதவிடாய் ஏற்பட்ட ஒரு பெண் எவற்றை யெல்லாம் கழா செய்கிறாளோ அவற்றை இவளும் கழாச் செய்ய கடமைப்பட்டவளாவாள். இதுவே ஹன்பலி மத்ஹப் சட்ட அறிஞர்களின் பிரபல்யமான நிலைப்பாடாகும்
இதில் சரியான நிலைப்பாடு யாதெனில் ‘நிபாஸுடையதாக இருக்கும் என்று கருதக்கூடிய காலப்பகுதியாகியில் இரத் தம் வெளிப்படுமாயின் அது நிபாஸுடைய இரத்தமாகவும் அவ்வாறு இல்லாவிட்டால் அது மாதவிடாயாகவும் கருதப் படும். அது தொடர்ந்தும் ஏற்பட்டால் இஸ்திஹாழா இரத்த மாகும்.’
இக்கூற்றானது இமாம் மாலிகின் மூலமாக குறிப்பிடப்பட்ட கருத்துக்கு மிக நெருக்கமான கூற்றாக உள்ளது. அக் கூற்றையே (இமாம் இப்னு குதாமா அல் மக்திஸி அவர்கள்) முஃனி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இமாம் மாலிகின் கருத்து வருமாறு : இரத்தம் வெளிவருவது நின்று இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப்பின் மீண்டும் வரக்கண்டால் அது நிஃபாஸுடைய இரத்தமாகும். அவ்வாறில்லையாயின் அது மாதவிடாயுடைய இரத்தமாகும். என்று குறிப்பிடுகி றார்.
இதையே ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்களின் தேர்வுமாகும். அதாவது நடை முறை ஒழுங்கில் இரத்தத்தில் எதுவும் சந்தேகத்திற்கிடமானவை என்பது இல்லை. சந் தேகம் என்பது ஒரு ஒப்பீட்டளவிலான விடயமாகும். அது மனிதர்களின் அறிவு, புரிதல் ஆகியவற்றின அடிப்படையில் வித்தியாசப்படும். அல்லாஹ் அருளிய குர்ஆனிலும், தூதர் முஹம்மத் அவர்களுடைய சுன்னாஹ்விலும் அனைத்துக்கு மான தெளிவு இருக்கிறது.
நோன்பு, தவாஃப் போன்ற கடமைகளை நிறைவேற்றும் பொழுது முதற் தடவையாக ஏதும் தவறுகள் நடந்தாலன்றி அவற்றை இருமுறை நிறைவேற்றும்படி அல்லாஹ் எவருக் கும் பணிக்கவில்லை. ஒரு அடியானுக்குரிய பணிகள் அல் லது கடமைகள் யாவும் அவனின் சக்திக்குட்பட்ட வகையில் தான் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு அவன் நிறை வேற்றும் போது அவனது பொறுப்பு நீங்கிவிடுகிறது. அல்லாஹ் இது குறித்து குறிப்பிடுகையில்: ‘எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப் படுத்தமாட்டான்’ (அல்பகரா :286) மேலும் அல்லாஹ் ‘உங்களால் முடியுமான அளவு அல்லாஹ்வைப் பயந்து கொள்ளவும்’ என்று கூறுகிறான். (தஃகாபுன்: 16)
மாதவிடாய்க்கும் நிபாஸுக்குமிடையிலான ஐந்தாவது வித்தியாசம் : ஒரு பெண் வழமையான மாதவிடாய் காலத் திற்கு முன்னர் சுத்தமடைந்து விடுவாளாயின் அவளது கண வர் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு அனுமதியுண்டு. நிபாஸைப் பொறுத்தவரையில் ஹன்பலி மத்ஹபின் பிரபல் யமான கருத்தின் படி நாற்பதுக்கு முன் அவள் சுத்தமானால் உடலுறவு கொள்வது மக்ரூஹ் (வெறுக்கப்பட்டது) ஆகும். என்றாலும் இது வெறுக்கப்பட்டதல்ல என்பதே சரியான கருத்தாகும். அதுவே (நிபாஸ் நின்று விட்டால் உடலுறவு கொள்வது அனுமதிக்கப்பட்டது என்பதே) பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துமாகும்.
ஏனெனில் விரும்பப்படவில்லை (மக்ரூஹ்) என்பது இஸ்லா மிய சட்டமாகும். எனவே, அவ்வாறு சொல்வதற்கு மார்க்க ஆதாரம் அவசியமாகும். இது தொடர்பாக இமாம் அஹ்மத் அவர்கள் உஸ்மான் இப்னு அபில் ஆஸ் அவர்கள் மூலம் அறிவிக்கும் ஒரு விடயத்தைத் தவிர வேறு ஆதாரமில்லை. அந்த சான்று பின்வருமாறு ‘அபில் ஆஸின் மகன் உஸ் மானை அவரது மனைவி தனது (நிஃபாஸின்) நாற்பது நாட் களுக்குரிய கால எல்லை முடிவடையும் முன்னர் நெருங்கி னார். அப்பொழுது அவர் (கணவரான உஸ்மான்) ‘என்னி டம் நெருங்கவேண்டாம்’ என்றார்.’ இந் நிகழ்வு நிபாஸின் போது உடலுறவு கொள்வது மக்ரூஹ் என்பதை வேண்டி நிற்காது. மாறாக அவர் அவ்வாறு சொல்வதற்கு, அவள் நிபாஸிலிருந்து சுத்தமாகிவிட்டாளா என்பதில் உறுதி இல் லாமல் இருக்கலாம் என நினைத்திருக்கலாம்; அல்லது அவ ளுடன் உடலுறவு கொள்வதால் மீண்டும் இரத்தம் வர ஆரம் பித்து விடலாம் என நினைத்திருக்கலாம்; அல்லது வேறு காரணங்களும் இருக்கக்கூடும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
தமிழில்:இஸ்லாம்ஹவுஸ் இணையதளம்
முந்தைய தொடரை வாசிக்க இங்கே CLICK செய்யவும்
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: