நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைக்கு மாற்றமான வழிமுறைகளை விட்டும் மக்களை எச்சரிக்கை செய்வது கட்டாயமாகுமா?

கேள்வி:

நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைக்கு மாற்றமான வழிமுறைகளை விட்டும் மக்களை எச்சரிக்கை செய்வது கட்டாயமாகுமா?

பதில்:-

ஆம், நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைக்கு மாற்றமான வழிமுறைகளை (விட்டும் மக்களை) எச்சரிக்கை செய்வது நம் மீது கடமையாகும்.
இது, அல்லாஹ்வுடனும், அவனுடைய வேதமான அல்குர்ஆனுடனும், அவனுடைய தூதருடனும், முஸ்லிமான தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடனும் மனத்தூய்மையாக நடந்து கொள்வதில் உள்ளதாகும்.

கெட்டவர்களை விட்டும் மக்களை நாம் எச்சரிக்கை செய்வதோடு, இவ்விடயங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் நாம் அவர்களுக்கு தெரியப்படுத்துவோம். மேலும் அல்குர்ஆனையும், நபி மொழிகளையும் பற்றிப் பிடிக்குமாறு அம்மக்களை நாம் தூண்டுவோம்.

ஆனாலும், இது மார்க்க அறிவு வழங்கப்பட்ட ஆலிம்களின் பொறுப்பாகும். அவர்கள் தான் இவ்விடங்களில் நுழைந்து, மக்களுக்குத் தகுதியான, மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட முறையில் தெளிவு படுத்துவார்கள்.

பதிலளித்தவர்:

அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பௌஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள்.

பார்க்க:

“الأجوبة المفيدة عن أسئلة المناهج الجديدة” (பக்கம் 145)

மொழிபெயர்ப்பு:ஷெய்க் அஸ்ஹர் அபூ ஹனீஃபா (அப்பாஸி மதனி)

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply