புத்தக அறிமுகம்
நமது இஸ்லாமிய அறிஞர்கள் பல நூல்களை தமது கைப்பட தொகுத்து தந்திருந்தாலும் சில அறிஞர்கள் வழங்கிய மார்க்கத் தீர்ப்புகள் அவர்களது மாணவர்களாலோ அல்லது பின்வந்தவர்களாலோ தொகுக்கப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் நவீன கால முஜத்தித்களில் ஒருவரும் ஹதீஸ் கலை வல்லுனருமான இமாம் நாஸிருத்தீன் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மார்க்கத் தீர்ப்புகள் பத்வாக்கள் தொகுக்கப்பட்ட நூலே أساس الباني في تراث الألباني என்ற புத்தகமாகும்.
அவரது மாணவர்களில் ஒருவரான கலாநிதி அபூ இப்ராஹீம் அஹ்மத் இப்னு நஸ்ருல்லாஹ் ஸப்ரி என்பவரே தொகுத்துள்ளார்.
நான்கு பாகங்களையும் 2550 பக்கங்களையும் கொண்ட இந்நூலை ஆசிரியர் நன்கு ஒழுங்கு படுத்தி வாசிப்பவருக்கு இலகுவான விதத்தில் வடிவமைத்துள்ளார்.
இந்த கிதாபில் மார்க்கத்தின் பல பகுதிகளுக்கான தீர்ப்புகள் பதியப்பட்டுள்ளன.
முதலாவது பாகத்தில் 83 பக்கங்கள் அகீதாப் பகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.
கேள்வி :
“அனுவளவு தீமை செய்திருந்தாலும் அவர் (மறுமையில்) அதைக் கண்டு கொள்வார்” என்ற வசனம் என்னை கவலையடையச் செய்கிறது. ஒவ்வொருவரும் தனது பாவங்களை மறுமையில் மக்கள் மத்தியில் பார்த்துக் கவலைப்படுவாரே என்று சஞ்சலப்படுகிறேன். தௌபா செய்திருந்தாலும் இவ்வாறு காண்பானா?
பதில்:
மனிதன் தனது பாவத்தை விட்டும் தௌபா செய்து அல்லாஹ் அதனை அழித்திருந்தால் மறுமையில்அதைதக் காண மாட்டார். உலகில் தௌபா செய்யாத பாவத்தையே அவன் காண்பான்.
இமாம் அல்பானி
மூலம் : أساس الباني في تراث الألباني
மொழிபெயர்ப்பு:ஷெய்க் ஷுஐப் உமரீ (இஸ்லாமிய அழைப்பாளர்,இலங்கை)
அரபி மூலம்:
هل يرى المرء ذنوبه في الآخرة حتى لو تاب منها؟
السؤال:
سألت بنفسي فضيلته قائلا : شيخنا الفاضل! السلام عليكم ورحمة الله وبركاته لقد أهمني معنى قوله تعالى “ومن يعمل مثقال ذرة شرا يره” وأصابني قلق وخوف أن يرى المرء ذنوبه يوم القيامة فيستاء ويفضح ، فهل لا بد أن يراها حتى لو تاب منها؟
الجواب :
قال لي فضيلته ما معناه “لا يراها… إن الإنسان إذا تاب من ذنبه ومحى الله عنه هذا الذنب فلا يراه يوم القيامة. إنما الذنب الذي يراه هو الذي لم يتب منه”
المفتي : العلامة ناصر الدين الألباني رحمه الله
السائل : تلميذه الدكتور أبو إبراهيم أحمد بن نصر الله صبري
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: