தொழாதவருக்குரிய சட்டம் என்ன? செயல் மற்றும் நம்பிக்கை சார்ந்த நிராகரிப்புகளுக்கு இடையிலான வித்தியாசம் என்ன?

கேள்வி :
“தொழாதவர் காபிராகி விடுகிறாரா? என்ற சட்டப் பிரச்சனையை தவறாக கையாள்வது வழிகேட்டின் வாயிலைத் திறந்து விடுகின்றது” என்று தாங்கள் சில சபைகளில் கூறினீர்கள். இது குறித்து தெளிவு படுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம்.

பதில் :
இது குறித்து பல தடவை தெளிவு படுத்தியிருக்கிறோம். நம்பிக்கை சார்ந்த நிராகரிப்புக்கும் செயல் ரீதியான நிராகரிப்புக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது.

தொழுகையை விடக் கூடியவர் தொழுகை கடமை என்பதை ஏற்றுக் கொண்டவராகவோ அல்லது கடமை இல்லை என்று மறுப்பவராகவோ இருக்கலாம்.

மறுப்பவராக இருந்தால் அவர் காபிராகி விடுகிறார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

தொழுகை, நோன்பு மற்றும் ஹஜ் உட்பட மார்க்கக் கடமைகள் தான் என்று கட்டாயமாக அறியப்பட்ட ஏதாவது ஒன்றையேனும் யார் மறுக்கின்றாரோ அவர் காபிராகி விடுவார். இதில் முஸ்லிம்களுக்கு மத்தியில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.

ஆனால் அவர் தொழுகை கடமை என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார். மறுக்கவில்லை. ஆனால் அவர் விட்டு விட்டுத் தொழுகின்றார். அல்லது அறவே தொழாமல் இருக்கிறார் என்றால் அவரை காபிர் என்று கூற முடியாது. ஏனென்றால் குப்ர் என்பதற்கு நிராகரித்தல் என்பதே கருத்தாகும். இவர் தான் தொழுகையை நிராகரிக்கவில்லையே.

உதாரணமாக, ஸைத் என்ற ஒரு நபர் தொழுவதில்லை. “சகோதரரே! ஏன் நீங்கள் தொழுவதில்லை?” என்று கேட்டால், “அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டும். ஷைத்தானை அல்லாஹ் சபிக்க வேண்டும். உலக விவகாரங்களிலும் பிள்ளைகள் விடயங்களிலும் பிஸியாக இருக்கிறேன்” என்கிறார்.
இது அவர் தொழுகையை விடக் காரணமாக ஏற்க முடியா விட்டாலும் அவர் தொழுகை கடமை என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இவரைக் காபிரென்று கூறுவது யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாததன் விளைவாகும். ஏனென்றால் அவர் தொழுகையை மட்டுமல்ல முழு இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார். அவரை எப்படி காபிர் என்று கூற முடியும்?

“சகோதரா! தொழும் காலம் மலையேறிவிட்டது. சுத்தம் தூய்மை மற்றும் உடற்பயிற்சி இல்லாமல் அநாகரிகமாக வாழ்ந்த மக்களுக்காகவே அது உருவாக்கப்பட்டது. தொழுவதை விட நல்ல சாதனங்கள் இப்போது இருக்கின்றன” என்று கூறினால் அது குப்ராகும். அவன் மோசமான இடமான நரகத்திற்கே செல்வான்.

எனவே எந்தவொரு முஃமினையும் ஒரேயடியாக காபிரென்று கூறுவது கூடாது. கலிமாச் சொன்னவர் அனுவளவு அமல் செய்திருக்கா விட்டாலும் கூட சுவனம் நுழைவார் என்றே ஹதீஸ்கள் வந்துள்ளன. நரகில் பொசுக்கப்பட்டு கறிக்கட்டியாக மாறினாலும் அவனது ஈமான் நரகில் அவன் நிரந்தரமாக்கப்படுவதை விட்டும் தடுக்கும்.

அல்லாஹ்வையும் ரஸூலையும் முழுமையாக ஏற்றுக் கொண்ட ஒருவர் தொழாதவராகவோ அல்லது நோன்பு ஹஜ் போன்ற இதர கடமைகளில் ஏதாவதொன்றை நிறைவேற்றாதவராகவோ அல்லது விபச்சாரம் களவு போன்ற பாவங்களை செய்யக் கூடியவராகவோ இருந்தால் அவரது இந்நிராகரிப்பை மேற்கூறிய விதத்தில் பரிசீலிக்க வேண்டும்.

விபச்சாரம் செய்யும் ஒருவர் விபச்சாரம் ஹராம் என்று ஏற்றுக் கொள்கிறானா? அல்லது சில மடையர்கள் கூறுவது போன்று ஹராமும் இல்லை ஹலாலும் இல்லை என்று கூறுகிறானா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு கூறுவது நிராகரிப்பாகும். களவு, புறம் பேசுவது போன்றவற்றிலும் இது கவனிக்கப்பட வேண்டும்.

கடமையானதாக இருந்தாலும் தடுக்கப்பட்டதாக இருந்தாலும் இந்த அளவு கோல் பேணப்பட வேண்டும்.

தடுக்கப்பட்டவற்றை ஹலாலென்று கருதினால் காபிராகி விடுகிறான். தான் செய்தது பாவம் தான் என்று ஏற்றுக் கொண்டால் காபிராக மாட்டான்.

அதேநேரம்
கட்டாயம் நிறைவேற்ற வேண்டியவற்றை விடுவதும் கூடாது. ஆனால் சோம்பேறித் தனத்தில் விடுபவரை காபிரென்று கூறக்கூடாது. மறுத்தால் காபிராகி விடுகிறான்.

பதிலளித்தவர்:இமாம் அல்பானி(ரஹிமஹுல்லாஹ்)

மூலம் : أساس الباني في تراث الألباني

மொழிபெயர்ப்பு:ஷெய்க் ஷுஐப் உமரீ (இஸ்லாமிய அழைப்பாளர்,இலங்கை)

ما حكم تارك الصلاة؟ وما الفرق بين الكفر العملي والكفر الاعتقادي

السائل : قلتم في بعض مجالسكم إن الخطأ في مسألة تكفير تارك الصلاة مفتاح لباب من أبواب الضلال. نرجو أن تفصلوا لنا القول في هذه المسألة؟

الشيخ الألباني رحمه الله : تفصيل هذه المسألة هو ما تكلمنا عنه مرارا وتكرارا في التفريق بين الكفر الاعتقادي والكفر العملي. لأن تارك الصلاة له حالتان : إما أن يؤمن بها بشرعيتها وإما أن يجحد شرعيتها. ففي الحالة الثانية فهو كافر بإجماع المسلمين.
وكذلك كل من جحد أمرا معلوما من الدين بالضرورة. من جحد الصيام مثلا فهو كافر والحج كذلك إلى آخر ما هنالك. من الأمور المعروفة عند المسلمين جميعا أنها من ضروريات الدين. فهذا لا خلاف فيه من جحد شرعية الصلاة فهو كافر.

لكن إذا كان هناك رجل لا يجحد الصلاة يعترف بشرعيتها ولكن من حيث العمل هو لا يقوم بها لا يصلي ربما لا يصلي مطلقا وربما يصلي تارة وتارة. ففي هذه الحالة إذا قلنا : هذا رجل كفر. ما يصلح عليه هذا الكلام بإطلاقه. لأن الكفر هو الجحد. وهو لا يجحد شرعية الصلاة. كما قال تعالى بالنسبة للكفار “وجحدوا بها واستيقنتها أنفسهم” فإذا أخذنا مثلا زيدا من الناس لا يصلي ولكن حينما يسأل : لماذا لا تصلي يا أخي؟ فيقول : الله يتوب على. والله الدنيا شاغلني والأولاد شاغلني. من هذا الكلام. هذا الكلام طبعا ليس له عذر مطلقا. لكن يعطينا فائدة لا نعرفها نحن لأننا لا نطلع عما في قلبه.
يعطينا فائدة أن الرجل يؤمن بشرعية الصلاة.

بخلاف ما لو كان الجواب لا سمح الله : يا أخي! الصلاة هذي راح وقتها. هذه كانت في زمن يعني كان الناس غير مثقفين كانوا بحاجة إلى نوعية من النظافة والظاهرة والرياضة. وهذا الآن ذهب زمانه، الآن فيه وسائل جديدة. تغنينا عن الصلاة. هذا كفر “ومأواه جهنم، وبئس المصير” أما إذا كان الجواب هو الأول : لماذا لا تصلي، الله يتوب علينا، الله يلعن الشيطان، من هذا الكلام الذي يدل على أن الرجل لا ينكر شرعية الصلاة، فإذا قلنا هذا الرجل كافر. نكون خالفنا الواقع، لأن هذا رجل مؤمن. مؤمن بشرعية الصلاة ومؤمن بالإسلام كله. فكيف نكفره؟! من هنا نحن نقول لا فرق بين تارك الصلاة وتارك الصيام وتارك الحج وتارك أي شيء من العبادات العملية في أنه يكفر وأنه لا يكفر.

متى يكفر؟ إذا جحد
متى لا يكفر؟ إذا آمن

فالمؤمن لا يجوز تكفيره قولا واحدا. وعلى ذلك جاءت الأحاديث الصحيحة التي آخرها “أدخلوا الجنة من قال : لا إله إلا الله وليس له من العمل مثقال ذرة.” لكن له مثقال ذرة من إيمان. فهذا الإيمان هو الذي يمنعه من أن يدخل في النار. ويدخل الجنة ولو بعد أن صار فحما أسود، لكن الذي يشهد أن لا إله إلا الله وأن محمداً رسول الله ويؤمن بكل ما جاء عن الله ورسوله، لكن لا يصلي أو لا يصوم أو لا يحج، أو نحو ذلك. أو يسرق أو يزني، كل هذه الأمور لا فرق فيها إذا ما وضعت في ميزان الكفر العملي والكفر الاعتقادي.

رجل مثلا يزني، هل نكفره؟! ستقولون : لا، وأنا أقول : لا، رويدا ننظر. هل يقول الزنا حرام؟ هل يقول كما يقول بعض الجهال : لا حرام ولا حلال. إذا قال لي كلمة كفر. كذلك السارق. أي ذنب الرجل الذي مثلا يغتاب كثيرا من الناس، نقول : اتق الله. الرسول قال. : “الغيبة أن تذكر أخاك بما يكره” فيقول : لا قال الرسول ولا كذا كفر.
هكذا كل الأحكام الشرعية.

سواء ما كان منها حكم إيجابي بمعنى فرض من الفرائض. أو كان حكما سلبيا بمعنى المحرمات. يجب أن يبتعد عنها. فإذا استحل شيئا من هذه المحرمات في قلبه كفر. لكن إذا واقعها عمليا وهو يعتقد أنه عاص، لا يكفر. فلا فرق في هذا بين الأحكام الشرعية كلها. سواء ما كانت من الفرائض أو ما كانت من المحرمات.

الفرائض يجب القيام بها، لا يجوز تركها. لكن من تركها كسلا لم يجز تكفيره. من تركها جحدا كفر. من استحل شيئا من المحرمات كذلك يكفر. لا فرق في هذا أبدا بين الواجبات وبين المحرمات. هذا ما أردت بكلمتي السابقة.

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply