ஜும்ஆ தொழுகையில் இரண்டு பாங்கு கூறக்கூடிய பள்ளியில் தொழலாமா?

கேள்வி:ஜும்ஆ தொழுகையில் இரண்டு பாங்கு கூறக்கூடிய பள்ளியில் தொழலாமா?

பதில்:அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக…

இது விடயத்தில் சுன்னா நடைபெறக்கூடிய பள்ளிகளில் தொழுவதே மிகச் சிறந்தாகும்

சுன்னா நடைபெறக்கூடிய பள்ளிகள் கிடைக்காத சந்தர்ப்பங்களில் ஜும்ஆ தினத்தில் இரண்டு பாங்கு சொல்லுதல், இதுபோன்ற சுன்னாவுக்கு முரணான செயல்கள் நடைபெறக்கூடிய அல்லது இறை நிராகரிப்பை ஏற்படுத்தாத பித்அத் நடைபெறக்கூடிய பள்ளியில் தொழுவது கட்டாயமாகும்.

ஏனெனில் ஜமாஅத் மற்றும் ஜும்மா தொழுகையை பொருத்தவரை சக்தி பெற்ற ஆண்கள் மீது கடமையாகும்.

குறித்த அந்த பித்அத்களில் பங்குகொள்ளாது அதை சக்திக்கு உட்பட்ட விதத்தில் தடுத்து மக்களுடன் ஜமாஅத்தாக தொழுவது கட்டாயமாகும்.

இஸ்லாம் ஸுஆல் ஜவாப் :177352
(ஷெய்க் ஸாலிஹ் அல் முனஜ்ஜித் (ஹபிழஹுல்லாஹ்)

நூருன் அலத்தர்ப் :11/411-413
(ஷெய்க் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)

ஆகியோரின் ஃபதாவா சுருக்கம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்…

 

மூலம்:islamqa.info

மொழிபெயர்ப்பு:( அஹ்ஸன் அல்கமி;ஆசிரியர் மர்கஸு அல்கமா )

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d