ஜும்ஆவில் உறங்குபவரை எழுப்புபவர் வீணான காரியத்தை செய்தவராக கருதப்படுவாரா?

கேள்வி:ஜும்ஆவில் உறங்குபவரை எழுப்புபவர் வீணான காரியத்தை செய்தவராக கருதப்படுவாரா?

பதில்: செயலால் அவர்களை எழுப்ப முடியும். பேசுவதன் மூலம் அவர்களை எழுப்பக்கூடாது. ஏனெனில் குத்பா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பேசுவது கூடாது. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய். (ஸஹீஹ் புகாரி : 934)

அவர் நன்மையான ஒரு விடயத்தை ஏவக்கூடியவராக இருந்தும் அவரை நபியவர்கள் வீணான காரியத்தைச் செய்யக் கூடியவராக குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே குத்பா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அவசியம் மௌனமாக இருக்க வேண்டும் என்பதையும், பேசுவது ஹராமாக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.

பதிலளித்தவர்: அஷ்ஷெய்ஹ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ்

மஜ்மூஉல் பதாவா (30/252)

 

மொழிபெயர்ப்பு:அஸ்கி அல்கமி(இஸ்லாமிய அழைப்பாளர்,இலங்கை)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply