சுஜூதில் இருக்கின்ற போது மேலதிகமாக துஆ கேட்கின்ற சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டுமா?

சுஜூதில் இருக்கின்ற போது மேலதிகமாக துஆ கேட்கின்ற சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டுமா???

 

பதில்:-

 

துஆவின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறுவதை பொறுத்தவரையில், துஆவின்போது நாம் பேண வேண்டிய ஒழுக்கங்களில் மிக முக்கியமான ஒழுக்கமாக இருப்பதை நாங்கள் பார்க்க முடியும்.

 

ஒருமுறை ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் மீது ஸலவா கூறாமல் அல்லாஹ்வை புகழாமல் துஆ கேட்கின்ற போது அல்லாஹ்வுடைய தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் அந்த மனிதரைப் பார்த்து “அவர் அவசரப்பட்டு விட்டார்” என்று கூறிவிட்டு அந்த மனிதரை அழைத்து துஆக் கேட்கின்ற சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வை புகழ்ந்து, நபி அவர்கள் மீது ஸலவாத் கூறிவிட்டே துஆ கேட்க வேண்டும்.” என்ற விடயத்தை அவருக்கு கற்றுக் கொடுக்கின்றார்.

 

(( இந்த ஹதீஸ் அபூதாவூத் என்ற கிரகத்தில் பதிவாக இருக்கின்றது. அஷ்ஷைக் அல்பானி -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.”

 

அஷ்ஷைக் ஸாலிஹ் அல்பௌஸான் -ஹபிழஹுல்லாஹ்- அவர்கள் கூறினார்கள்:-

“துஆவின் போது ஸலவாத் கூறுவது சுன்னத்தாகும். எனவே சுஜூதில் இருக்கும் போதும் அதை சுஜூது இல்லாத சந்தர்ப்பத்திலும் துஆ கேட்கின்ற போது ஸலவாத் கூறுவது கடமை அல்ல.”

 

பொதுவாக, ஸலவாத் கூறிவிட்டு துஆ கேட்கவும் முடியும் சலவாத் கூறாமல் துஆ கேட்கலாம். ஆனாலும் கூட துஆவுடைய ஒழுக்கம் என்று அமைப்பில் ஸலவாத் கூறிவிட்டு துஆ கேட்பதே மிக சிறந்ததாகும்.

 

அல்லாஹ் மிக அறிந்தவன்

 

ஆக்கம் :அபூ அப்திர்ரஹ்மான் அஸ்ஹர் அபூஹனீபா மதனி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply