குப்ர் என்பதற்கு நிராகரித்தல் தவிர்த்து வேறு கருத்துகள் உள்ளனவா?

குப்ர் என்பதற்கு நிராகரித்தல் என்று மட்டும் தான் கருத்தா அல்லது பெருமை, புறக்கணிப்பு, மறுத்தல் போன்ற கருத்துக்களும் இருக்கின்றனவா?

பதில் :
செயல் ரீதியான நிராகரிப்பு (குப்ர்), நம்பிக்கை சார்ந்த நிராகரிப்பு (குப்ர்) என்று இரு பிரிவுகள் இருப்பதாக முன்னர் கூறியிருந்தோம். குப்ர் என்ற சொல்லுக்கு நிராகரிப்பு அல்லாத வேறு கருத்துக்களும் இருக்கின்றன.

தொழுகையோடு தொடர்பு படுத்தி குப்ரை இரு வகைப்படுத்தலாம்

1. நம்பிக்கை சார்ந்த நிராகரிப்பு (குப்ர்) :
தொழுகையை மறுத்து விடுபவர் காபிராகி விடுகிறான்

2. செயல் ரீதியான நிராகரிப்பு (குப்ர்)
தொழுகையை மறுக்காமல் காபிர்களைப் போன்று தொழாமல் இருந்தால் காபிராகி விட மாட்டான். ஆனால் பாவியாகி விடுகிறார்.

பதிலளித்தவர்:இமாம் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்)

மூலம் : أساس الباني في تراث الألباني

மொழிபெயர்ப்பு:ஷெய்க் ஷுஐப் உமரீ (இஸ்லாமிய அழைப்பாளர்,இலங்கை)

السائل : هل الكفر يفسر بالجحود فقط من الناحية الاصطلاحية أم له صور أخرى للكفر يفسر بها كالإعراض والاستكبار والإباء وغيرها؟

الجواب : نعم، هذا سؤال غير وارد. لأننا نحن قسمنا الكفر إلى قسمين : كفر عملي وكفر اعتقادي. فإذن هذا جواب مقدم سلفا لما تقدمنا بهذا التقسيم. وقلنا أن الكفر قد يكون كفرا عمليا وليس كفرا اعتقاديا، فإذن ليس الكفر فقط يعني الجحود وإنما يعني أيضا معنى آخر. من ذلك ما جاء في سؤال السائل فقد يكون كفر نعمة مثلا، يكفر بالنعمة أو يكفرن العشير، كما جاء في حديث البخاري عن النساء، فإذن الكفر له عدة معان حقيقة. لكن فيما كان يتعلق ببحثنا السابق، كالكفر فيما يتعلق بالصلاة وغير الصلاة : إما أن يكون كفرا بمعنى الجحد فهو مرتد عن دينه وإما أن يكون كفرا بمعنى أنه يعمل عمل كفار فلا يصلي، فهذا لا يكفر وإنما يفسق.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d