கப்ர் ஸியாரத்(சந்திப்பு) செய்வதின் சட்டம் என்ன? பெண்கள் கப்ரு ஸியாரத் செய்வது குறித்த மார்க்க தீர்ப்பு

கேள்வி: கப்ர் ஸியாரத் செய்வது குறித்த சட்டம் என்ன?

பதில்: கப்ருகளை ஸியாரத் செய்வது நபி صلى الله عليه وسلم வழிகாட்டிய ஒரு சுன்னத்தான விடையம். முதலில் நபி صلى الله عليه وسلم அவர்கள் அதை தடுத்திருந்தார்கள், பின்னர் கப்ரு ஸியாரத் செய்யுமாறு கட்டளை இட்டார்கள்.

நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: “நான் உங்களை கப்ரு ஸியாரத் செய்வதை விட்டும் தடுத்திருந்தேன். இனி நீங்கள் கப்ரு ஸியாரத் செய்யுங்கள்.”

(ஸஹீஹ் முஸ்லிம்)

திர்மிதியில்:

“ஏனென்றால், நிச்சயமாக அது உங்களுக்கு மறுமை நாளை நினைவூட்டும்.” எனும் வாக்கியமும் இடம் பெற்றுள்ளது

ஆகையால் கப்ருகளை ஸியாரத் செய்வது மறுமை நாளை நினைவுபடுதும், சுன்னாஹ்வை பின்பற்றவதுமாகும்.

மனிதன் மரணம் அடைந்தவர்களை சந்திக்க கப்ருகளுக்கு செல்லும்போது, அவர்கள் நேற்று இந்த உலகத்தில் இவர் உண்பதை போல உண்டுகொண்டும், இவர் பருகுவதை போல் பருகியும், இவர் உலகை அனுபவித்ததை போன்று அனுபவித்தும் இருந்தார்கள் என்பதை உணர்கிறான். ஆனால் இப்பொழுதோ, அவரின் செயல்களை நம்பியே இருக்கிறார், நன்மைகளை செய்திருந்தால் நன்மைகளை அடைகிறார், தீமைகளை செய்திருந்தால் தீமைகளை அடைகிறார்.

இதனால் அவனின் உள்ளம் பாடம் பெறுகிறது, மென்மமையடைகிறது. மேலும் இறைவனுக்கு மாருசெய்வதை விட்டும் மீண்டு கட்டுபடுவதின் மூலம் அவனிடம் திரும்புகிறான்.

மேலும் கப்ருகளை ஸியாரத் செய்வோர், நபி صلى الله عليه وسلم கேட்ட, உம்மத்திற்க்கு கற்றுக்கொடுத்த இந்த துவாவை கேட்கவேண்டும்.

السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمِ مُؤْمِنِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللّٰهُ بِكُمْ لَاحِقُوْنَ، يَرْحَمُ اللّٰهُ الْمُسْتَقْدِمِيْنَ مِنَّا وَمِنْكُمْ وَالْمُسْتَأْخِرِيْنَ، نَسْأَلُ اللّٰهَ لَنَا وَلَكُمْ العَافِيَةَ اللّٰهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُمْ، وَلَا تَفْتِنَا بَعْدَهُمْ، وَاغْفِرْ لَنَا وَلَهُمْ

இங்கு இருக்கும் முஃமின்களே! உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! நிச்சயமாக நாங்களும் உங்களை வந்தடைவோம், அல்லாஹ் நாடினால்! எங்களின் முன் சென்றவர்களுக்கும் பின் வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை காட்டுவானாக! எங்களுக்கும் உங்களுக்கும் அல்லாஹ்விடம் ஆஃபியத்தை (நற்சுகத்தை, பாதுகாப்பைக்) கேட்கின்றேன்.

மேலும் நபி صلى الله عليه وسلم கப்ருகளை ஸியாரத் செய்யும்போது, ஃபாத்திஹா ஸூரா ஓதியதாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை, ஆகையால் கப்ருகளை ஸியாரத் செய்யும்போது ஃபாத்திஹா ஸூரா ஓதுவது நபி صلى الله عليه وسلم காட்டிதந்த வழிமுறைக்கு மாற்றமானது.

பெண்கள் கப்ரு ஸியாரத் செய்வதை பொறுத்தவரை, அது ஹராமாகும், ஏனென்றால் ஸியாரத் செய்யும் பெண்களையும், கப்ருகளின் மீது மஸ்ஜிதுகளை எழுப்புவோரையும் நபி صلى الله عليه وسلم சபித்துள்ளார்கள்.

ஆகையால் ஒரு பெண் கப்ருகளை பார்க்க செல்லும் எண்ணத்தில் தன் வீட்டை விட்டு வெளியேறுவது அனுமதிக்கப்பட்டது அல்ல. ஆனால் அந்த நோக்கமின்றி வேறு வேலைகளுக்காக வெளியே செல்லும்போது, கப்ரையோ, கப்ருஸ்தானையோ சந்திக்க நேரிட்டால், அவர்கள் மீது ஸலாம் கூறுவதில் தவறேதும் இல்லை, இவ்வாறே ஒரு அடிமை பெண்ணுக்கு நபி صلى الله عليه وسلم கற்றுக்கொடுத்தார்கள்.

ஆக பெண்களை பொறுத்தவரை, கப்றுகளை ஸியாரத் செய்யும் எண்ணத்தில் செல்வதற்கும், அந்த எண்ணம் இல்லாமல், செல்லும் வழியில் கப்ரை சந்திப்பதர்க்கும் வேறுபாடு உண்டு. முதலாவதை செய்பவள் ஹராமான செயலை செய்கிறாள், நபியின் صلى الله عليه وسلم சாபத்திற்கு தன்னை தானே உள்ளாக்கிக்கொள்கிராள், இரண்டாவது நாம் குறிப்பிட்டதை செய்வதில் எந்த தவரும் இல்லை.

ஷெய்கு முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன், மஜ்மூ அல் ஃபதாவா வர்ரஸாயில் அஷ் ஷெய்க் உஸைமீன்

மொழிப்பெயர்ப்பு: நயீம் இப்னு அப்துல் வதூத்

سئل فضيلة الشيخ رحمه الله تعالى: ما حكم زيارة المقابر؟

فأجاب فضيلته بقوله: زيارة القبور سنة أمر بها النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بعد أن نهى عنها كما ثبت ذلك عنه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ في قوله: “كنت نهيتكم عن زيارة القبور ألا فزوروها فإنها تذكركم الا?خرة”. رواه مسلم، فزيارة القبور للتذكر والاتعاظ سنة، فإن الإنسان إذا زار هؤلاء الموتى في قبورهم، وكان هؤلاء بالأمس معه على ظهر الأرض يأكلون كما يأكل، ويشربون كما يشرب، ويتمتعون بدنياهم، وأصبحوا الا?ن رهناً لأعمالهم، إن خيراً فخير، وإن شرًّا فشر، فإنه لابد أن يتعظ ويلين قلبه ويتوجه إلى الله عز وجل بالإقلاع عن معصيته إلى طاعته، وينبغي لمن زار المقبرة أن يدعو بما كان النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يدعو به وعلمه أمته “السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاءالله بكم لاحقون، يرحم الله المستقدمين منا ومنكم والمستأخرين، نسأل الله لنا ولكم العافية”، اللهم لا تحرمنا أجرهم، ولا تفتنا بعدهم، واغفر لنا ولهم، يقول هذا الدعاء ولم يرد عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أنه كان يقرأ الفاتحة عند زيارة القبور، وعلى هذا فقراءة الفاتحة عند زيارة القبور خلاف المشروع عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وأما زيارة القبور للنساء فإن ذلك محرَّم؛ لأن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لعن

زائرات القبور، والمتخذين عليها المساجد والسرج، فلا يحل للمرأة أن تزور المقبرة هذا إذا خرجت من بيتها لقصد الزيارة، أما إذا مرت بالمقبرة بدون قصد الزيارة فلا حرج عليها أن تقف وأن تسلم على أهل المقبرة بما علمه النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أمته، فيفرق بالنسبة للنساء بين من خرجت من بيتها لقصد الزيارة، ومن مرت بالمقبرة بدون قصد فوقفت وسلمت، فالأولى التي خرجت من بيتها للزيارة قد فعلت محرماً وعرضت نفسها للعنة الله عز وجل، وأما الثانية فلا حرج عليها.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply