ஷீஆக்கள் அறுத்த பிராணிகளை உண்ணுதல் தொடர்ப்பில் மார்க்க தீர்ப்பு

கேள்வி:

நாங்கள் ஷீஆ சமூகத்தின் மத்தியில் வாழ்கிறோம்; அவர்கள் இஸ்லாமியர்கள் என தங்களை கூறிகொண்டபோதிலும்,அல்குர்ஆனுக்கும்,சுன்னாவுக்கும்முரண்பட்ட அவர்களின் கொள்கைகள் பற்றி உங்களுக்குத் தெரியும். இந்நிலையில், அவர்கள் நேர்ச்சைகாகவோ, மரணித்தவர்களுக்காகவோ, மண்ணறையில் உள்ளவர்களுக்காகவோ, சந்தையில் விற்கப்படுவதற்காகவோ, வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ அவர்கள் அறுக்கும் பிராணிகளை நாம் உண்ணுவது அனுமதிக்கப்பட்டதா?

பதில்:

அல்ஹம்துலில்லாஹ் அறுக்கப்படும் பிராணிகள் உண்ண அனுமதிக்கப் படுவதற்கு, அறுப்பவர் முஸ்லிமாக அல்லது ஏற்கனவே இறைனால் அனுப்பப்பட்ட மார்க்கங்களை அதன் உண்மை நிலையில் பின்பற்றுகிறவராக இருத்தல் வேண்டும் என்பது நிபந்தனையாகும். அப்போது தான் அது உண்ணுவதற்கு அனுமதிக்கப் பட்டதா(ஹலால் ஆ)கும்.

மாற்றமாக இறைனுக்கு இணை கற்பிப்பவனாகவோ, நெருப்பு வணங்கியோ அல்லது இஸ்லாத்தில் இருந்து மதம் மாறியவனோ அறுத்தவற்றை உண்ணுவதற்கு (ஹராம்) அனுமதிக்கப் பட்டதல்ல.

ஷீஆக்களைப் பொறுத்தவரையில் அவர்கள், இஸ்லாத்தின் வட்டத்தில் இருந்து அவர்களை வெளிப்படுத்திவிடும் கொள்கை கோட்பாடுகளை நம்பிக்கை கொண்டுள்ளதோடு, இஸ்லாத்திற்கு முரணான பல செயல்களையும் அவர்கள் செய்து வருகின்றனர்.

அல்குர்ஆன் திாிபு படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் நம்பியுள்ளமை, அவர்களின் இமாம்கள் மறைமுகமானவற்றை அறிகிறார்கள் மற்றும் அவர்களுக்கு எந்த வகையான மறதியோ, தவறோ ஏற்படாது என அவர்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளமை போன்றவற்றை இதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம்.

மேலும் ஷீஆக்கள், மரணித்தவர்களிடம் உதவி தேடுகிறார்கள், அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கிறார்கள், அவர்களின் மண்ணறைகளுக்குச் சென்று அவர்களை வணங்குகிறார்கள்.

நபிமார்கள்,ரசூல்மார்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆகியோருக்கு அடுத்து மிக சிறந்த மனிதர்களாக விளங்கும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அளலஹி வஸல்லம்) அவர்களின் தோழர்களை(ரிள்வானுல்லாஹி அலைஹிம்) விமர்சிக்கின்றார்கள்,ஏசுகின்றார்கள்,அவர்களை காஃபிர்கள் என கூறுகிறார்கள்.

இது போன்ற கொள்கை கோட்பாடுகளை நம்புவது அல்லது இவ்வாறான செயற்பாடுகளை புாிவதன் மூலம் ஒருவன் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறி வெளியறியவனாக கருதப்படுவான். அவன் அறுக்கும் பிராணிகளை உண்பது ஹலால் ஆக மாட்டாது.

கஷ்டம் மற்றும் செழிப்பின் போது அலி, ஹசன், ஹுசைன் இவர்கள் போன்ற ஏனைய தலைவர்களை அழைத்து பிராதித்து வரும் “ஷீஆ” கொள்கையைச் சேர்ந்த உட்பிாிவான “ஜஃபாியா” பிாிவை சேர்ந்தோர் அறுத்து பலியிடும் பிராணிகளை உண்பது தொடர்பில் சவுதி ஃபத்வா சபை அறிஞர்களிடம் வினவப்பட்டது.

இதற்கு அவர்கள்

,إذا كان الأمر كما ذكر السائل من أن الجماعة الذين لديه من الجعفرية يدعون علياً والحسن والحسين وسادتهم فهم مشركون مرتدون عن الإسلام والعياذ بالله ، ولا يحل الأكل من ذبائحهم ، لأنها ميتة ولو ذكروا عليها اسم الله ” انتهى .
“فتاوى اللجنة الدائمة” (2/264)

வினா எழுப்பியவர் கூறுவது போன்று “ஜஃபாியா” பிாிவை சார்ந்தோர் கஷ்டம் மற்றும் செழிப்பின் போது அலி, ஹசன், ஹுசைன் இவர்கள் போன்ற ஏனைய தலைவர்களையும் அழைத்து பிரார்த்தித்து வந்தால் அவர்கள் இறை நிராகாிப்பாளர்கள்(முஷ்ரிக்கள்) இஸ்லாத்தை விட்டும் மதம் மாறியவர்கள் (அல்லாஹ் எம்மை காப்பாற்றுவானாக). எனவே அவர்கள் அறுத்தவற்றை உண்ணுவதற்கு அனுமதி (ஹலால்) வழங்கப்படமாட்டாது.அதன் மீது இறைவனின் பெயர்கூறப்பட்ட போதிலும், மரணித்ததாகவே கருதப்படும் என பதிலளித்தார்கள்.

(ஃபத்வா சபையின் ஃபத்வாக்கள்:பாகம்: 2 பக்கம்: 264)

மற்றொருவர் சவுதி ஃபத்வா சபை அறிஞரிடம் பின்வருமாறு வினவினார்,

“நானும் எனது குடும்பமும் நாட்டின் வடக்கு எல்லையில் வாழ்ந்து வருகின்றோம்,ஈராக் நாட்டைச் சேர்ந்தாரும் எம்முடன் கலந்து வாழ்கின்றனர்.அவர்கள் “ஷீஆ”பிாிவைச் சேர்ந்தோர். அவர்கள் சிலை வணக்கம் செய்கின்றனர்.ஹசன் என்ற பெயாிலும், ஹுசைன் என்ற பெயாிலும், அலி என்ற பெயாிலும் குவிமாடங்களை (குப்பா)களை அமைத்து வணங்கி வருகின்றனர்.யா அலி! யா ஹசன்! யா ஹுசைன் என்று அதனை அழைக்கின்றனர். எங்கள் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் திருமண வைபவங்கள் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் அவர்களுடன் ஒன்றாக கலந்து வாழ்கின்றனர்.பல விடுத்தம் அவர்களை எச்சரித்தேன், அவர்கள் உணர்வு பெறுகிறார்கள் இல்லை.அவர்கள் அறுக்கும் பிராணிகளை உண்ணக் கூடாது என்று கேள்வி பட்டிருக்கின்றேன்,ஆனால் எமது கோத்திரத்தில் சிலர் அவர்கள் அறுப்பதை உண்டு வருகிறார்கள். இது போன்ற நிலையில் என்ன செய்ய வேண்டும் என தெளிவு படுத்துமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

அதற்கு அந்த அறிஞர்கள் பின்வருமாறு பதில் அளித்துள்ளார்கள்,

“إذا كان الواقع كما ذكرت من دعائهم عليّاً والحسين والحسن ونحوهم : فهم مشركون شركاً أكبر يخرج من ملة الإسلام ، فلا يحل أن نزوجِّهم المسلمات ، ولا يحل لنا أن نتزوج من نسائهم ، ولا يحل لنا أن نأكل من ذبائحهم ، قال الله تعالى : (ولا تنكحوا المشركات حتى يؤمنَّ ولأمَةٌ مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبدٌ مؤمنٌ خيرٌ من مشركٍ ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون)”إذا كان الواقع كما ذكرت من دعائهم عليّاً والحسين والحسن ونحوهم : فهم مشركون شركاً أكبر يخرج من ملة الإسلام ، فلا يحل أن نزوجِّهم المسلمات ، ولا يحل لنا أن نتزوج من نسائهم ، ولا يحل لنا أن نأكل من ذبائحهم ، قال الله تعالى : (ولا تنكحوا المشركات حتى يؤمنَّ ولأمَةٌ مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبدٌ مؤمنٌ خيرٌ من مشركٍ ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون)”

நீங்கள் கூறுவது போன்று அவர்கள் யா அலி! யா ஹசன்! யா ஹுசைன்! என்று அழைத்து வணங்கி வருகிறார்கள் என்றால்,அவர்கள் இறைநிராகரிப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்)ஆவர்.

அது இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி விடும் (மதம் மாற்றிவிடும்) பெரிய ஷிர்க் ஆகும். அவர்களுக்கு எமது முஸ்லிம் பெண்களை திருமணம் முடித்து கொடுக்கக் கூடாது. அவர்களின் பெண்களை நாமும் திருமணம் முடிக்கக் கூடாது.

இறைவன் பின்வருமாறு தனது திருமறையில் கூறுகின்றான்.

وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّ‌ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ‌ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا ‌ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْ اُولٰٓٮِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ  وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖ‌ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ ‏

(அல்லாஹ்வுக்கு)இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.(அல்குர்ஆன் : 2:221)

(ஃபத்வா சபையின் ஃபத்வாக்கள்: பாகம்: 2 பக்கம்: 264)

ஷீஆக்களின் மிகவும் மோசமான “ராஃபிழா” பிாிவைச் சேர்ந்தோர் அறுத்தவற்றை உண்பது தொடர்ப்பில் பிரபலமிக்க அறிஞரான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு ஜிப்ரின் (ஹஃபிழஹுல்லாஹ்)அவர்களிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தார்.

“لا يحل ذبح الرافضي ولا أكل ذبيحته ، فإن الرافضة غالباً مشركون حيث يدعون علي بن أبي طالب دائماً في الشدة والرخاء حتى في عرفات والطواف والسعي ، ويدعون أبناءه وأئمتهم كما سمعنا مراراً ، وهذا شرك أكبر وردة عن الإسلام يستحقون القتل عليها ، كما يغلون في وصف علي رضي الله عنه ويصفونه بأوصاف لا تصلح إلا لله كما سمعناهم في عرفات، وهم بذلك مرتدون حيث جعلوه ربّاً وخالقاً ومتصرفاً في الكون ويعلم الغيب ويملك الضر والنفع ونحو ذلك ، كما أنهم يطعنون في القرآن الكريم ويزعمون أن الصحابة حرفوه وحذفوا منه أشياء كثيرة تتعلق بأهل البيت وأعدائهم فلا يقتدون به ولا يرونه دليلا ، كما أنهم يطعنون في أكابر الصحابة كالخلفاء الثلاثة وبقية العشرة وأمهات المؤمنين ومشاهير الصحابة كأنس وجابر وأبي هريرة ونحوهم ، فلا يقبلون أحاديثهم لأنهم كفار في زعمهم ، ولا يعملون بأحاديث الصحيحين إلا ما كان عن أهل البيت ، ويتعلقون بأحاديث مكذوبة ، أو لا دليل فيها على ما يقولون ، ولكنهم مع ذلك ينافقون فيقولون بألسنتهم ما ليس في قلوبهم ويخفون في أنفسهم ما لا يبدون لك ، ويقولون : “من لا تقية له فلا دين له” ، فلا تقبل دعواهم في الأخوة ومحبة الشرع … إلخ , فالنفاق عقيدة عندهم ، كفى الله شرهم” انتهى .

எமக்காக “ராஃபிழா” பிாிவைச் சேர்ந்தோர் அறுப்பதும் கூடாது,அதனை நாம் உண்பதும் கூடாது.“ராஃபிழா” மக்கள் பெரும் பாலும் முஷ்ரிக்குகளாவே உள்ளனர். அவர்கள் ஹஜ்,உம்ராவின் போது அரஃபாத்,தவாஃப்,ஸஃயி உட்பட கஷ்டம் மற்றும் செழிப்பின் போதெல்லாம் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை அழைத்து பிரார்த்திக்கின்றனர்.அவாின் பிள்ளைகள் உட்பட இமாம்களை அழைத்து பிரார்த்திக்கின்றனர். இவ்வாறு செய்வது மிகப்பெரிய “ஷிர்க்” க்கும், அது இஸ்லாத்தை விட்டும் மதம் மாற்றிவிடும் “ரித்தத்”தும் ஆகும்.

இதற்காக அவர்களுக்கு மரண தண்டனை வழங்க முடியும்.அவர்கள் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை எல்லை மீறி அல்லாஹ்வின் இடத்திற்கு உயர்த்தி புகழ்கின்றனர். அல்லாஹ்வுக்கு மாத்திரம் உாிய தன்மைகளை அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் கற்பிக்கின்னர்.நாம் அரபாத்தின் போது இதனை செவிமடுத்து உள்ளோம்.

அவர்கள் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை படைத்து பாிபாலிக்கும் ரப்பாக, உலகத்தை இயக்க சக்தி பெற்றவராக,மறைவானவற்றை அறியும் ஆற்றலுடையவராக,மக்களுக்கு நல்லது மற்றும் துன்பம் ஏற்படுத்த சக்தி பெற்றவராக கருதி இறைவனின் இடத்திற்கு உயர்த்துவதனால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டவர்களாக கருதப்படும்.

மேலும் அவர்கள் இறைவேதமாகிய அல்குர்ஆனை குறை கூறி விமர்சிக்கின்றனர்.

அதனை சகாபாக்கள் திாிபு படுத்திவிட்டதாகவும்,“அஹ்லுல் பைத்” (இறைத் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அளலஹி வஸல்லம்) அவர்களின் குடும்பத்தினர்) உடனும்,அவர்களின் எதிாிகளுடனும் சம்பந்தப்பட்ட பல அல் குர்ஆன் வசனங்களை சகாபாக்கள் நீக்கி விட்டதாகவும் குறை கூறுகின்றனர்.நம்மிடம் உள்ள அல் குர்ஆன் பிரதியை அவர்கள் பின்பற்றுவதும் இல்லை. அதனை ஆதாரமாக ஏற்றுக் கொள்வதும் இல்லை.

இவ்வாறாக அவர்கள் முப்பெரும் கலீஃபாகளான அபூ பக்ர், உமர், உஸ்மான், பிரபல மிக்க சகாபாக்களான அனஸ், ஜாபிர், அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹும்) மற்றும் இவ்வுலகிலேயே சுவர்க்க வாதிகள் என நன்மாராயம் கூறப்பட்ட பத்து சகாபாக்கள், மற்றும் முஃமின்களின் தாய்மார்களான இறைத் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அளலஹி வஸல்லம்) அவர்களின் மனைவிமார்கள் உள்ளிட்ட பல சகாபாக்களை குறை கூறி விமர்சிக்கின்றனர்.அவர்கள் மீது பழி சுமத்துகின்றனர். அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை மறுக்கின்றனர். அவர்களை இறைநிராகாிப்பாளர் (காஃபிர்)களாக கருதுகின்றனர்.

“அஹ்லுல் பைத்”(இறைத்தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குடும்பத்தினர்) அறிவிக்கும் ஹதீஸ்களை தவிர்த்து அறிஞர்கள் அனைவரும் ஏகோபித்து ஏற்றுக் கொண்டுள்ள புகாாி மற்றும் முஸ்லிம் கிரதங்களில் வரும் ஏனைய ஹதீஸ்களையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

அவற்றை இட்டுக்கட்டப் பட்ட ஹதீஸ்கள் என குறிப்பிடுகின்றனர். இது தவிர அவர்கள் முஸ்லிம்களுடன் பழகும் போது உள்ளத்தில் இருக்கும் அவர்களின் கொள்கைகளை மறைத்து நயவஞ்சகத் தன்மையுடன் நடந்து கொள்கின்றனர்.”له دين فال له تقية ال من “உள்ளத்தில் உள்ள கொள்கைகளை மறைத்து மற்றவாின் கொள்கையை ஒத்தவர் போன்று நடிக்காதவனுக்கு மார்க்கம் இல்லை என்றும் கூறுகின்றனர்.

எனவே அவர்கள் எங்களுடன் சகோதர பாசத்துடன் நடந்தாலும், எங்களிடம் எமது ஷரிஆவை விரும்புபவர்கள் என்று கூறினாலும் நாம் அவதானத்துடன் செயல் பட வேண்டும். அவர்களின் இதுபோன்ற பொய்யான வாதங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.“நிஃபாக்” நயவஞ்சகம் என்பது அவர்களின் கொள்கை கோட்பாடுகளில் ஒன்று. அல்லாஹ் அவர்களின் தீமைகளை விட்டும் எம்மை காப்பாற்றுவானாக.

அல்லாஹ் மிக அறிந்தவன்…

Arabic: http://islamqa.info/ar/60046

Tamil:Islamhouse.com

அரபியில்:ஷெய்க் அஹ்மத் சாலிஹ் அல் முனஜ்ஜித்

தமிழில்:ஷெய்க் அப்துல் ஜப்பார் முஹம்மத் மக்தூம்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply