கடமையான தொழுகையை நிறைவேற்றிய பின் திக்ர் செய்துவிட்டு கையேந்தி அல்லாஹ்விடம் துஆ கேட்பது பித்அத் ஆகுமா ?

கேள்வி:

 

கடமையான தொழுகையை நிறைவேற்றிய பின் திக்ர் செய்துவிட்டு கையேந்தி அல்லாஹ்விடம் துஆ கேட்பது பித்அத் ஆகுமா ?

 

பதில்:

அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

துஆ: ஒரு இபாதத் ஆகும்.

துஆ என்பது ஒரு வழிபாட்டுச் செயல் என்பது அடிப்படை, மேலும் ஒவ்வொரு வழிபாட்டுச் செயலும் ஆதாரத்தின் அடிப்படையில் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(சில குறிபிட்ட நேரத்தில்) துஆவின் போது கைகளை உயர்த்துதல்:

துஆ செய்யும் போது கைகளை உயர்த்துதல் என்பதே அடிப்படை,

ஆனால் இவ்வாறு கைகளை உயர்த்தி துஆ செய்தல் என்பது இன்னொரு வழிபாட்டில் இருக்கும் போது கூடுதல் செயலாகக் கருதப்படுகிறது (அதாவது செய்யக்கூடாது).

உதாரணமாக தொழுகையில், குத்பா (வெள்ளிக்கிழமை பிரசங்கம்), தவாஃப் (கபாவைச் சுற்றி வருவது), ஸஈ (அல்-ஸஃபா மற்றும் மர்வாவுக்கு இடையே ஓடுவது) போன்றவை.

அதேபோல தொழுகையில் பின்வரும் துஆக்களின் இடங்களான

தொடக்கத்தில், ருகூவில், ருகூவிலிருந்து எழுந்து நிற்கும் போது, இரண்டு ஸஜ்தாக்களில் மற்றும் இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் அமர்ந்திருக்கும்போது இது போன்ற இடங்களில் எவர் கைகளை உயர்த்தி துஆ கேட்டாலும் அது பித்அத் செயலைச் செய்ததாகக் கருதப்படுகிறது.

பிரசங்க மேடையில் துஆ செய்யும் போது கைகளை உயர்த்துவதற்கும், தவாஃப் அல்லது ஸஈ செய்யும் போது செய்யும் துஆவிற்கும் இது பொருந்தும்.

ஆனால் இஸ்திஸ்கா (மழை வேண்டி பிரார்த்தனை) (அப்போது கைகளை உயர்த்தலாம்).

துஆவில் எப்போது கைகளை உயர்த்த வேண்டும்?:

குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கைகளை உயர்த்துவது அனுமதிக்கப்படுகிறது என்பதைக் காட்டுவதற்கு ஆதாரம் இருப்பதால், எந்த சர்ச்சையும் இல்லை. எந்த ஒரு ஹதீஸ் அறிவிப்புகளிலும் கூறப்படாத மற்றும் மற்றொரு வழிபாட்டின் ஒரு பகுதியாக இல்லாத எந்த துஆவும் பொதுவான துஆவாக கருதப்படுகிறது; இந்த விஷயத்தில் கைகளை உயர்த்துவதில் எந்த தவறும் இல்லை.

முஹம்மது நபி ﷺ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்:

(ஒரு மனிதர்) தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “யா ரப்! யா ரப்” என்று பிரார்த்திக்கிறார். ஆனால்,அவர் உண்ணும் உணவு ஹராம்; அவர் அருந்தும் பானம் ஹராம்; அவர் அணியும் உடை ஹராம்; ஹராமையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?”

மேலும் நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

“ தனது அடிமை தன்னிடம் இரு கைகளையும் உயர்த்திய நிலையில் அதனை வெறுமையாக அனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான்”

நஃபில் தொழுகைக்கு பின் துஆவில் கைகளை உயர்த்துதல்:

நஃபில் தொழுகைக்குப் பிறகு (துஆவில்) கைகளை உயர்த்துவதைப் பொறுத்தவரை,

அது வழக்கமான துஆவாக அல்லாமல் ஒரு மனிதன் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிக்காக, ​அந்த நேரத்தில் அவன் அல்லாஹ்வை அழைப்பதாக இருந்தால், அதில் எந்தத் தவறும் இல்லை.

 

ஆனால் அவர் கடமையான தொழுகைக்குப் பிறகு கைகளை உயர்த்தி வழக்கமாக துஆச் செய்வதற்கு தெளிவான ஆதாரம் இல்லை.

 

மேலும் அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

Source: Islamqa English website

Translation:AdminTeam Islamqatamil

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply