எண்ணையின் மீது அல்லது நீரின் மீது ஓதுவதும், நோயாளியின் மீது ஓதுவதும் ஒன்றாகுமா?

கேள்வி:
எண்ணையின் மீது அல்லது நீரின் மீது ஓதுவதும், நோயாளியின் மீது ஓதுவதும் ஒன்றாகுமா?

பதில்: நோய், சூனியம், ஜின், மனநோய் ஆகியவற்றிற்காக, நீரின் மீதோ அல்லது எண்ணெயின் மீதோ ஓதிக்கொடுப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பாதிக்கப்பட்டவரின் மீது ஓதி ஊதுவது அதைவிட சிறந்தது.

இமாம் அபூ தாவூத் رحمه الله ஹசன் தர இஸ்னாதுடன் அறிவிக்கிறார்: “ஸாபித் இப்ன் கைஸ் இப்ன் ஷம்மாஸ் எனும் ஸஹாபிக்காக நபி صلى الله عليه وسلم நீரில் ஓதி, அதை அவரின் மீது ஊற்றினார்.”

மற்றோர் ஹதீஸில் நபி صلى الله عليه وسلم கூறினார்கள்:
“ஷிர்க்கான வாசகங்கள், செயல்கள் இல்லாதவரை, ஓதி ஊதுவதில் எந்த தவறும் இல்லை.” இது ஸஹீஹான ஹதீஸாகும். இந்த ஹதீஸ் ஒரு மனிதன் மீது, அல்லது நீர், எண்ணெய், அதை போன்றவைகள் அனைத்திற்கும் பொதுவாக பொருந்தும்.

அல்லாஹ்வே உதவியையும் வெற்றியையும் தருபவன்.

-ஷேக் பின் பாஸ் – மஜ்மூ அல் பதாவா. 9/409

 

Olive Oil

س: هل القراءة علي الزيت، أو الماء تأخذ حكم قراءة المعالج على المريض نفسه؟.

ج:لا حرج في القراءة في الماء والزيت في علاج المريض والمسحور والمجنون؛ ولكن القراءة على المريض بالنفث عليه أولى وأفضل وأكمل، وقد خرج أبو داود رحمه الله بإسناد حسن أن النبي صلى الله عليه وسلم قرأ لثابت بن قيس بن شماس في ماء وصبه عليه، وقد قال النبي صلى الله عليه وسلم: « لا بأس بالرقى ما لم تكن شركًا» وهذا الحديث الصحيح يعم الرقية للمريض على نفسه، وفي الماء والزيت ونحوهما، والله ولي التوفيق. مجموع لابن باز(9/409)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply