உதட்டை அசைக்காமல் தொழுபவரை பற்றிய (மார்க்க) நிலைபாடு

بســـم اللــه الرحــمــن الـرحـــيــم

உதட்டை அசைக்காமல் தொழுபவரை பற்றிய (மார்க்க) நிலைபாடு

அன்பிற்குரிய ஷெய்க். முஹம்மத் இப்னு ஹிஸாம் (ஹஃபிதஹுல்லாஹ்) அவர்களிடம் கீழ்கண்ட கேள்வி கேட்கப்பட்டது…

கேள்வி :

உதட்டை அசைக்காமல் (மௌனமாக) ஓதி தொழுபவரின் சட்டம் என்ன..?

பதில் :

அவரது தொழுகை செல்லுபடியாகாதது. ஏனென்றால் உதட்டையும், நாவையும் அசைத்து ஓதுவதுதான் (சரியான) ஓதுதலாக அமையும்.

அல்லாஹ் தஆலா கூறுவதாவது …

{لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِ}

(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர்.
(அல்குர்ஆன் 75:16)

மேற்கண்ட வசனம் குறிப்பிடுவது என்னவென்றால், நாவையும், உதட்டையும் அசைக்காமல் ஓதுதல் ஏற்படாது. ஒருவர் தம் மனதிற்குள் ஓதுவதாக கருதுவதை பொறுத்தமட்டில், அது (சரியான) ஓதுதல் அல்ல!.
மனதிற்குள் நினைப்பது, வாசிப்பது போன்றவை சரியான ஓதுதலாக கருதப்படமாட்டாது. எனவே அவரது தொழுகை செல்லுபடியான ஒன்றல்ல!; இதே நிலையில் அவர் ஸுரத்துல் ஃபாத்திஹாவை ஓதினாலும், அவரது தொழுகை செல்லுபடியற்றதுதான்.


Translated by:
அபூ இஸ்ஹாக் முஹம்மத் இப்னு அஹ்மத் பா ‘அலவி

Original Fatwa: https://t.me/ibnhezam/8918

குறிப்பு :

தொழுகையின்போது நாவு மற்றும் உதட்டை அசைக்காமல் உள்ளத்தில் ஓதுவது போதுமானதல்ல என்ற கருத்தையே முஹத்திஸ், இமாம், இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள்.
(ஆதாரம் : மஜ்மூஃ ஃபதாவா இப்னு உஸைமீன் 13/ 156)

அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன்.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply