ஆஷுரா தின நோன்புடன், முஹர்ரம் 11 வது நாள் நோன்பு வைக்க ஏன் அறிவுறுத்தபடுகிறது?

ஆஷுரா தின நோன்புடன், முஹர்ரம் 11 வது நாள் நோன்பு வைக்க ஏன் அறிவுறுத்தபடுகிறது?

கேள்வி-
இன்று நான் ஆஷூரா நாள் பற்றிய அனைத்து ஹதீஸ்களையும் படித்துவிட்டேன், ஆனால் யூதர்களுக்கு மாற்றமாக முஹர்ரம் 11 வது நாள் நோன்பு வைக்குமாறு நபி ﷺ கூறிய எந்த ஹதீஸையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக ,“இன்ஷா அல்லாஹ் – அடுத்த ஆண்டில் நான் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன்” என்று நபி ﷺ கூறினார்கள். மேலும் அவர்களது தோழர்களுக்கு 11 வது நாள் நோன்பு நோற்குமாறு வழிகாட்டவில்லை. அதன் அடிப்படையில் நபி ﷺ அவர்களும் அவர்களது தோழர்களும் செய்யாத ஒன்றை செய்வது பித்ஆத் இல்லையா? யாராவது ஒன்பதாவது நாள் நோன்பு நோற்க தவறினால், அவர் பத்தாவது நாள் நோற்றால் போதுமா?

சுருக்கமான விடை
1) முஹர்ரம் 11 வது நாள் நோன்பு நோற்பது முஸ்தஹப்(விரும்பத்தக்கது) என்று அறிஞர்கள் கருதுகின்றனர். ஏனெனில் அந்த நாளில் மக்கள் நோன்பு நோற்குமாறு நபி ﷺ அவர்கள் ஏவியதாக ஹதீஸ் முஸ்னத் அஹ்மதில் வந்துள்ளது
2) முஹர்ரம் 11 வது நாள் நோன்பு நோற்பது முஸ்தகப் (விரும்பத்தக்கது) என்பதற்கு அறிஞர்கள் மற்றோரு காரணத்தை குறிப்பிடுகிறார்கள்,பத்தாவது நாள் பொருத்த வரை சரியானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் மக்கள் முஹர்ரம் மாத பிறை பார்ப்பதில் தவறு இழைக்கலாம் அதனால் பத்தவது நாள் எது என்பது சரியாக அறியாமல் போகலாம்.

முழுமையான விடை:

முஹர்ரம் 11 வது நாள் நோன்பு நோற்பது முஸ்தஹப்(விரும்பத்தக்கது) என்று அறிஞர்கள் கருதுகின்றனர். ஏனெனில் அந்த நாளில் மக்கள் நோன்பு நோற்குமாறு நபி ﷺ அவர்கள் ஏவியாதாக ஒரு ஹதீஸ் வந்துள்ளது.

ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்-இப்னு அப்பாஸ்(ரலி)

இமாம் அஹ்மத் தனது முஸ்னத் அஹ்மத்-2154 என்ற நூலில் பதிவுச் செய்யதுள்ளார்கள்.

இந்த ஹதீஸின் தரத்தில் அறிஞர்கள் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. ஷேக் அஹ்மத் ஷாகிர்(ரஹ்) இது ஹஸன்(நடுத்தரமான செய்தி) என்று கூறியுள்ளார்கள். ஆனால் முஸ்னத் அஹ்மத் நூலை ஆராய்ந்து சரி பார்த்த உலமாக்கள் இது பலவீனமான செய்தி என்று கூறியுள்ளார்கள்.

இதே வார்த்தைகள் உடைய ஹதீஸ் இமாம் இப்னு குஜைமா(ரஹ்) தனது நூல்- இப்னு குஸைமா-2095 பதிவு செய்துள்ளார்கள். ஆனால் இந்த அறிவிப்புகளில் இப்னு அபீ லைலா என்பவர் இடம் பெறுகிறார்.
இவர் மனன சக்தியில் மிக மோசமானவர் ஆவார். அதனால் இமாம் அல்பானி (ரஹ்) இது பலவீனமான செய்தி என்று கூறியுள்ளார்கள்.

இந்த செய்திக்கு மாற்றான கருத்தில் அதாஃ மற்றும் சிலர்
இப்னு அப்பாஸ் (رضي الله عنه) அவரிடத்தில் இருந்து மௌகூஃப்( சஹாபியின் கூற்று) எனும் தரத்தில் அறிவித்து உள்ளனர் .. அதன் அறிவிப்பாளர் தொடர் தஹாவி(ரஹ்) மற்றும் அல் பைஹகீ(ரஹ்) ஆகியோர் பார்வையில் ஸஹீஹ்.

அந்த ஹதீஸ் ஹஸன்(நடுத்தரம்) என்றால் எந்த பிரச்னையும் இல்லை. அது ளயீஃப்(பலவீனமான) ஹதீஸாக இருந்தால் அத்தகைய விஷயத்தில் அறிஞர்கள் சலுகை காட்டியுள்ளனர். ஏனெனில் இதில் சிறிய பலவீனமே உள்ளது. இது பொய்யான அல்லது இட்டுகட்டபட்ட செய்தியோ அல்ல. நற்செயல்களை ஊக்குவிக்கும் ஹதீஸ்கள் விடையத்தில் சிறிய குறைகளை கொண்ட ஹதீஸ்களை அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

மேலும், நபி ﷺ அவர்கள் முஹர்ரம் மாதத்தில் நோன்பு நோற்குமாறு அறிவிறுத்தியுள்ளார்கள்.

ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்

ஸஹீஹ் முஸ்லிம்-2157

மேற்கூறபட்ட கருத்துடைய செய்தியை அல் பைஹகீ(ரஹ்) தன்னுடைய நூல்”சுனன் அல் குப்ரா”வில் பதிவு செய்துள்ளார்கள். வேறொரு அறிவிப்பில் அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என்று வந்துள்ளது.

இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி(ரஹ்) தனது இத்ஹாஃப் அல் மஹ்ரா-2225 என்ற நூலில் கூறுவதாவது:

அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என்று வர கூடிய ஹதீஸ் முஸ்னத் அஹ்மத்-2154 மற்றும் குப்ரா பைஹகீ-8405 ஆகிய நூல்களில் பலவீனமான அறிவிப்பாளர் தொடரோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இப்னு அபீ லைலா என்பவர் பலவீனமானவர். ஆனால் இவர் மட்டும் இந்த ஹதீஸ் அறிவிப்பு செய்யவில்லை. ஸாலிஹ் இப்னு அபி ஸாலிஹ் இப்னு ஹையீ அவர்கள் அவர்களை தொடர்ந்து அறிவித்துள்ளார்கள்.

முஹர்ரம்-9,10,11 ஆகிய நாளில் நோன்பு நோற்பது முஸ்தகப்(விரும்பதக்கது) என்று இந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முஹர்ரம் பதினொராவது நாள் நோன்பு வைப்பது முஸ்தகப் (விரும்பத்தக்கது) என்பதற்கு அறிஞர்கள் மற்றோரு காரணத்தை குறிப்பிடுகிறார்கள்.பத்தாவது நாள் பொருத்த வரை சரியானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் மக்கள் முஹர்ரம் மாத பிறை பார்ப்பதில் தவறு செய்யும் வாய்ப்பு அதிகம் அதனால் பத்தவது நாள் எது? என்பது சரியாக அறியாமல் போகலாம். ஒருவேளை ஒரு முஸ்லிம் 9,10,11 ஆகிய நாட்களில் நோன்பு நோற்றால் நிச்சயமாக அவர் ஆஷூராவை அடைந்து கொள்வார்.

தவஸுஸ்(ரஹ்) அவர்கள் ஆஷூராவை விட்டுவிடுவோம் என்ற அச்சத்தால், அதற்கு முந்திய நாளும் மற்றும் அதற்கு பிந்திய நாளும் நோன்பு நோற்க கூடியவர்களாக இருந்தார்கள்

இப்னு அபீ ஷைபா(ரஹ்) தனது நூலான முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-(2/313) பதிவு செய்துள்ளார்கள்.

ஆஷூராவில் நோன்பு நோற்பவர் முஹர்ரம்-9,10 நோன்பு நோற்று கொள்ளட்டும். மாதத்தை சரியாக அறியமுடியவில்லை என்றால் அவர் மூன்று நாட்களில் நோன்பு நோற்று கொள்ளட்டும் என்று இப்னு ஸீரின்(ரஹ்) கூறுவதாக இமாம் அஹ்மத் கூறுகிறார்கள்

நூல்- அல் முக்னீ-4/441.

மூன்று நாட்களில் நோன்பு நோற்பது பித்ஆ (புதுமையானது) என்று கூறுவது சரியானதல்ல என்று தெளிவாக நிருபனமாகியுள்ளது.

ஒருவர் ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பது தவறவிட்டுவிட்டால், அவர் பத்தாவது நாள் மட்டும் நோன்பு நோற்றால் போதுமானது. இதில் எவ்வித குற்றமும் இல்லை. ஆனால் ஒருவர் பதினொராவது நாளும் நோன்பு தோற்றால் அது சிறந்தது அது மக்ரூஹ் அல்ல (வெறுக்கதக்க செயல்)

சரியான கருத்து அடிப்படையில் பத்தாவது நாள் மட்டும் தனித்து நோன்பு நோற்பது மக்ரூஹ் அல்ல. இமாம் இப்னு தைய்மிய்யா(ரஹ்) மக்ரூஹ் இல்லை என்று ஏற்றுள்ளார்கள் ( அல் இன்ஸாஃப்)

அல்லாஹ் மிக அறிந்தவன்…

Source:Islamqa

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply