அவ்வாபீன் தொழுகை

கேள்வி: அவ்வாபீன் தொழுகை என்பது மஃரிபுக்கு பின்பு தொழுகப்படும் ஆறு ரக்ஆத் தொழுகையா?

பதில்: இது ஸஹீஹ் அல்ல, ஆனால் மஃரிபுக்கும் இஷாவிர்க்கும் இடையில் நஃபில் தொழுவது விருமத்தக்கது, அது ஆறு ரக்ஆத்துகளுக்கு அதிகமாக இருந்தாலும் சரி.

(அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டு, அவனுக்கு  கட்டுப்பட்டு , அனைத்து நேரங்களிலும் அவனிடம் திரும்புபவர்கள் அவ்வாபீன் என்று அழைக்கப்படுகின்றனர்) அவ்வாபீன் தொழுகையை பொறுத்தவரை, ழுஹா தொழுகையே அவ்வாறு அழைக்கப்படுகிறது, அதாவது ழுஹா நேரத்தின் வெயில் கடுமை ஆகும்நெரும் தொழுகப்படும் தொழுகை அவ்வாபீன்களுடைய தொழுகை என்று அழைக்கப்படுகிறது.

صلاة الأوابين حين ترمض الفصال

“சுடுமணலில் ஒட்டகக்குட்டியின் கால் குழம்புகள் கரியும் நேரமே “அவ்வாபீன்” தொழுகையின் நேரமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

அதாவது வெயில் கடுமையாகவும் நேரத்தில் ழுஹா தொழுவது, அதாவது சூரியன் உச்சத்தை அடைவதற்கு சற்று நேரம் முன்னர் தொழுகப்படும் தொழுகை தான் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

மஃரிபுக்கும் இஷாவுக்கும் இடையில் தொழப்படும் தொழுகையை அவ்வாபீன் தொழுகை என்று கூறி வரும் ஹதீஸ் பலவீனமானது. ஆனால் அந்நேரத்தில் மூமின்கள் மஃரிபின் சுன்னத்திற்கு மேல் அதிகமாக அல்லாஹ் அவர்களுக்கு நாடும் அளவு தொழுவது விரும்பத்தக்கது (முஸ்தஹப்).

மஃரிபின் சுன்னத் இரண்டு ரக்ஆத்துகள், அதற்கு மேல் அதிகமாக இரண்டு, நான்கு, ஆறு, பத்து என எவ்வளவு வேண்டுமானால் தொழுகளாம்.

மஃரிப் மட்டும் இஷாவுக்கு இடையில் உள்ள நேரம் முழுவதும் வணக்க வழிபாடுகளுக்கான நேரம், அதில் அதிகமாக தொழுகளாம், அதே போன்று தான் இஷாவுக்கும் ஃபஜ்ருக்கும் இடையிலான நேரம்.

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே

இமாம் இப்னு பாஸ்: https://binbaz.org.sa/fatwas/12741/هل-صلاة-الاوابين-هي-ست-ركعات-بعد-المغرب

தமிழாக்கம் செய்தோனின் அடிக்குறிப்பு:

நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: அவ்வாப் (எல்லா நேரங்களிலும் பாவங்களில் இருந்து மீண்டு, அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அவனிடம் திரும்பக்கூடியவரை) தவிர வேறு யாரும் ழுஹா தொழுகையை நிலையாக தொழுதுவர முடியாது, மேலும் அது அவ்வாபீங்களுடைய தொழுகையாகும்.

(இப்னு குஸைமா, ஹாகிம். இமாம் அல்பானி இதை ஹஸனான ஹதீஸ் என்று கூறுகிறார்கள்.)

لا يُحافِظُ على صَلاةِ الضُّحَى إلَّا أَوَّابٌ ، و هيَ صلاةُ الأَوَّابينَ

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply