அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும் என்று துஆ கேட்பது

கேள்வி: ” அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்” என்று துஆ செய்வது குறித்த சட்டம் என்ன?

பதில்:

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.

ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உசைமீன் கூறினார்கள்:

“நீண்ட ஆயுளை மட்டும் கேட்பது உகந்தது அல்ல. ஏனென்றால் நீண்ட ஆயுள் என்பது நன்மையாகும் அமையலாம், தீமையாகவும் அமையலாம், ஏனெனில் நீண்ட காலம் வாழ்ந்தும் கெட்ட செயல்களில் தன் வயதை கழித்தவனே மக்களில் மிக மோசமானவன் ஆவான். ஆகையால் ‘நன்மையான செயல்களை செய்ய அல்லாஹ் உனது ஆயுளை நீண்டதாக்கட்டும்’ என்பது போன்ற சொற்களை பயன்படுத்தினால் தவறில்லை”

மஜ்மூ அல் ஃபதாவா ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன்

மூலம்: https://islamqa.info/ar/answers/41625/

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply