அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் விஷயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாஹ்வின் நிலைபாடு என்ன?

கேள்வி:

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் விஷயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாஹ்வின் நிலைபாடு என்ன?

பதில்:

அஹ்லுஸ் ஸுன்னாஹ்வை பொருத்த வரையில் அல்லாஹ்வின் பெயர்கள்,பண்புகளை குர்ஆனிலும் சுன்னாவிலும் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அதேபோன்று அதனை உறுதியாக நம்பிக்கை கொள்வார்கள்.

அப்பெயர்களையும்,பண்புகளையும் திரித்து கூறாமலும்,மறுக்காமலும்,உதாரணம் கூறாமலும்,உவமைகூறாமலும் விட்டுவிடுவார்கள்.இது தான் அல்லாஹ்வின் பெயர்கள்,பண்புகள் தொடர்பாக அஹ்லுஸ்சுன்னா வல் ஜமாஅவின் நிலைபாடாகும். அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல் ஜமாஅ என்பது நபி ﷺ அவர்களின் தோழர்கள்,இன்னும் அவர்களின் வழிமுறையை பின்பற்றியவர்கள் ஆவார்கள்.அவர்கள் குர் ஆனிலும் ஆதாரபூர்வமான சுன்னாவிலும் வந்துள்ள அல்லாஹ்வின் பெயர்கள்,பன்புகளை நம்பிக்கை கொள்வார்கள். அப்பெயர்களையும்,பண்புகளையும் அல்லாஹ்வின் அந்தஸ்த்திற்கேற்ப்ப இருப்பதாக நம்பிக்கை கொண்டு திரித்து கூறாமலும்,மறுக்காமலும்,உதாரணம் கூறாமலும்,உவமைகூறுவதையும் தவிர்த்து கொள்ளவேண்டும்.அதாவது ஜஹ்மியாக்கள்,முஃதஸிலாக்கள் செய்வது போன்று அப்பெயர்களையும்,பண்புகளையும் திரித்து கூறவோ,மறுக்கவோ மாட்டார்கள்,அல்லாஹ்வின் பண்புகளை படைப்புகளின் பண்புகளோடு ஒப்பிடமாட்டார்கள் இன்னும் அதற்கு இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என்று வடிவம் கொடுக்கவும் மாட்டார்கள்.மாறாக  அதனை திரித்து கூறாமலும்,மறுக்காமலும்,உதாரணம் கூறாமலும்,உவமை கூறாமலும் விட்டுவிடுவார்கள், உதாரணமாக அர் ரஹ்மான் கருணையாளன் என்பதை அல்லாஹ்வை அவனது அந்தஸ்த்திற்கேற்ப ரஹ்மத் என்ற பண்பின் மூலம் வர்ணிக்கப்பட்டவன் ஆவான் என்று நாம் கூறுவோம்,அல்லாஹ்வின் கருணை படைப்புகளின் கருணையை போன்றல்ல அவனது ரஹ்மத்தின் வடிவத்தை  நாம் அறியமுடியாது.அதனை அதிகப்படுத்தவோ,குறைக்கவோ முடியாது.அதே போன்று தான் அல் இஸ்திவா என்ற பண்பும்

அல்லாஹ் கூறுகிறான்

அர்ரஹ்மான் அர்ஷின் மேல் உயர்ந்தான் {அல்குர்ஆன்:20:05}

அர்ஷின் மேல் உயர்ந்தான் எவ்வாறு உயர்ந்தான் என்பதை அல்லாஹ்வே அறிந்தவன்.ஜஹ்மியாக்கள் கூறுவதைபோன்று இஸ்திவா என்பதற்கு ஆட்சி பீடத்தில் அமர்ந்தான் என்று கூறமாட்டோம்

மாறாக அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்தான் என்றுதான் நாம் கூறுவோம்  இஸ்திவா என்பதற்கு உயர்வது என்பது தான் பொருள் ஆனாலும் அல்லாஹ் உயர்வான் என்பது அவனது அந்தஸ்திற்கு ஏற்ப உயர்வதாகும் அதனை படைப்பினங்கள் தங்களது வாகனத்தின் மீதோ அல்லது கட்டிடங்களின் மீதோ உயர்வதுடன் ஒப்பிடகூடாது.அல்லாஹ் அவனது அந்தஸ்திற்கு பொருத்தமான விதத்தில் உயர்வான் படைப்புகளின் தன்மைக்கு ஒப்பாக அல்ல அதன் வடிவத்தை அல்லாஹ்வைத்தவிற வேறு யாரும் அறியமாட்டார்.அவ்வாறு தான் அல்லாஹ் கோபப்படுவான்  என்பதும் அல்லாஹ்வுக்கு மாறு செய்வோர்கள் மீதும்,அவனது கட்டளையை மீறுவோர்கள்மீதும் அவன் கோபம்கொள்வான்,அவனது கோபம் நமது கோபத்தைபோன்று அல்ல அவனது அந்தஸ்த்திற்கும் கண்ணியத்திற்கும் தக்கவாறு அவன் கோபப்படுவான் படைப்புகளின் கோபத்துடன் அதனை ஒப்பிட்டுபார்க்க கூடாது.

அல்லாஹ் கூறுகிறான்

அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். {அல்குர்ஆன் :42:11}

 அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.{அல்குர்ஆன்:112:04}

அல்லாஹ்வே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.{அல்குர்ஆன்:02:22}

அவனுக்கு  நிகராகவோ,ஒப்பாகவோ யாரும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளான்.

அதேபோன்றுதான் அவன் கொடுப்பதும்,கொடுக்காமல் இருப்பதும்,அவனது நேசமும்,வெறுப்பும் அல்லாஹ்வின் அந்தஸ்த்திற்கேற்ப இருக்கும் அவனது விருப்பம்,வெருப்பு,கோபம் மனிதனுடயது போன்றல்ல.இன்னும் அல்லாஹ்விற்கு முகம்,கை,பாதம்,செவி,பார்வை உள்ளன. இவைகளும் நமது செவி,பார்வை,கைகள்,முகம் போன்றல்ல

அல்லாஹ்விற்கு அவனது அந்தஸ்த்திற்கேற்ப முகம், கை,பாதம்,செவி,பார்வை உள்ளன. உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் பண்புகள் ஒருபோதும் மனிதனுடைய பண்புகளுக்கு ஒப்பாகாது.

அல்லாஹ் கூறுகிறான்

அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.{அல்குர்ஆன் 42:11}

அல்லாஹ் அவனை குறித்து செவியேற்பவன்,பார்ப்பவன்,அவன் யாவரையும் மிகைத்தவன்,நுட்பமானவன் என்று தெரிவிக்கிறான்.அவனது கைகளை விரித்துவைதுள்ளான்

நபி ﷺகூறினார்கள்

 –  عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لاَ تَزَالُ جَهَنَّمُ تَقُولُ: هَلْ مِنْ مَزِيدٍ، حَتَّى يَضَعَ رَبُّ العِزَّةِ فِيهَا قَدَمَهُ، فَتَقُولُ: قَطْ قَطْ وَعِزَّتِكَ، وَيُزْوَى بَعْضُهَا إِلَى بَعْضٍ ” 

(நரகவாசிகள் நரகத்தில் போடப்படுவார்கள். நரகம் நிரம்பாத காரணத்தால்) ‘இன்னம் அதிகம் இருக்கிறதா?’ என்று கேட்டுக் கொண்டே இருக்கும். இறுதியில் கண்ணியத்தின் அதிபதி(யான இறைவன்) தம் பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது ‘போதும்! போதும்! உன் கண்ணியத்தின் மீதாணையாக!’ என்று கூறும். நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும்.

அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்{ரழியல்லாஹு அன்ஹு}.நூல் புஹாரி 6661


இவ்வாறு தான் ஏனைய பண்புகள் தொடர்பாக கூறப்பட்டுள்ளதையும்  ஏற்று நம்பிக்கை கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் அந்தஸ்திற்கேற்ப அப்பண்புகளை உறுதி செய்யவேண்டும். திரித்து கூறாமலும்,மறுக்காமலும்,உதாரணம் கூறாமலும்,உவமைகூறாமலும் அதனை விட்டுவிட வேண்டும்.இப்பண்புகள் அனைத்தும் உண்மையாகும் உறுதியானதும் கூட அதன் வடிவத்தை அல்லாஹ்வை தவிற வேறு யாரும் அறியமாட்டார் .

அல்லாஹ் கூறுகிறான்

அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.{அல்குர்ஆன் 42:11}

இமாம் மாலிக் பின் அனஸ் அவர்களிடம் இஸ்திவாவைகுறித்து கேட்கப்பட்டது அதற்கு அவர்கள்,

இஸ்திவா என்பதன் பொருளை நாம் அறிவோம் அதன் வடிவம் அறியப்படாது அதனை நம்பிக்கை கொள்வது வாஜிபாகும்,அது எப்படி என்று கேட்பது பித்அத் ஆகும் என்று கூறினார்கள்.

இமாம் பைஹகி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் அல் இஃதிகாது 1/67-55

இமாம் பைஹகி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் அல் அஸ்மாயி வஸ்ஸிஃபாத் 2/410-836

இதே கருத்தைதான்  இமாம்களில் சுஃப்யானுஸ்ஸவ்ரி  ,இப்னுல் முஈன்,அலவ்ஸாயி,அஹ்மத் பின் ஹம்பல்,இஸ்ஹாக் பின் ராஹவைஹி இன்னும் இவர்களை போன்ற ஸலஃபு அறிஞர்களும், நபிதோழர்களும்,தாபியீன்களும் கூறினார்கள். அவர்கள் யாரும் அல்லாஹ்வின் பண்புகளை படைப்புகளின் பண்புகளுடன் ஒப்பிட வில்லை. அதற்கு வடிவம் கற்பிக்கவில்லை மாறாக அல்லாஹ்வின் அந்தஸ்த்திற்கும் கண்ணியத்திற்கும் ஏற்ப அதனை அல்லாஹ்விற்கு இருப்பதாக உறுதிசெய்தார்கள் அதனை திரித்து கூறாமலும்,மறுக்காமலும்,உதாரணம் கூறாமலும்,உவமைகூறாமலும் அல்லாஹ் கூறுவதைபோன்றே கூறவேண்டும்.

மூலம் ஃபதாவா நூருன் அலல் தர்பு  ஷைகு  இப்னு பாஸ் 1/118-121 கேள்வி எண்;41

மொழிபெயர்ப்பு பஷீர் ஃபிர்தெளஸி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply