ஸகாத் கடமையாகின்ற மற்றும் கடமையாகாத பொருட்கள் அனைத்தையும் எங்களுக்கு நீங்கள் கூறுங்கள்?

05) ஸகாத் கடமையாகின்ற மற்றும் கடமையாகாத பொருட்கள் அனைத்தையும் எங்களுக்கு நீங்கள் கூறுங்கள்? பதில் தங்கம், வெள்ளி மற்றும் மக்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்கின்ற காகித நாணயங்கள், வியாபாரத்திற்காக தயார்படுத்தப்பட்டுள்ள நிலங்கள், வாகனங்கள், உபகரணங்கள், விவசாய நிலங்கள் போன்றவைகள் ஸகாத் கடமையாகும் பொருட்களில் உள்ளவைகளாகும். அதேபோன்று தானியங்களில் அரிசி போன்றவைகளும், பழங்களில் பேரிச்சை, திராட்சை போன்றவைகளும் பழுத்து (அறுவடை செய்யப்படும் காலப் பகுதியை அடைந்து கொண்டு, அதன் கடமையாகும்) அளவை எத்திக்கொண்டால் (அவைகளுக்கும் ஸகாத் கடமையாகிறது.) மேலும் ... Read more

ஷியாக்களின் வகைகள், ஷேக் பின் பாஸ்

கேள்வி: ஒரு கதீப் ஜும்ஆ உரை ஒன்று வழங்கினார், அதில் ஷியாக்களைப் பற்றி, அவர்களின் அசிங்கங்களைப் பற்றிப் பேசினார், பிறகு குமைநி ஒரு காஃபிர் என்றார். லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று கலிமா சொல்லிய ஒருவரைக் காஃபிர் என்று கூறுபவர் குறித்து உங்களது கருத்து என்ன?! பதில்: ஷியாக்கள் பல வகைப்படுவர். ஷேக் அல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் 22 உட்பிரிவுகள் கொண்டுள்ளனர் என்று கூறுகின்றார். அவர்களில் ஒரு பிரிவினர், அல்லாஹ்வின் தூதர் ... Read more

அதிகமான வருடங்கள் ஜகாத் தராமல் இருப்பவர் எவ்வாறு அதனை நிறைவேற்றுவது?

கேள்வி 04: அதிகமான வருடங்கள் (எனது பொருட்களுக்கான) ஸகாத்தை நான் வழங்கவில்லை. எத்தனை வருடங்கள் (வழங்கப்படவில்லை) என்பதையும் நான் அறிய மாட்டேன். என்னிடம் அதிகமான பணமும், சொத்துக்களும் உள்ளன. கடந்து சென்ற (வருடங்களுக்கான) ஸகாத்தை நான் எவ்வாறு கொடுக்க வேண்டும்? நான் எவ்வாறு தவ்பா செய்வது? பதில்:- தவ்பா செய்வதைப் பொருத்தவரையில், (முதலில்) முன் சென்ற வருடங்கள் விடயத்தில் வருந்த வேண்டும். அதை மீண்டும் செய்யக்கூடாது என்று உறுதி கொள்ள வேண்டும். அதை (முழுமையாக) கைவிட வேண்டும். ... Read more

ஐவேளைத் தொழுகைகளை தொழாத ஒருவர் அவரது ஸகாத்தை வழங்கினால் ஏற்றுக்கொள்ளப்படுமா?

கேள்வி 03 : ஐவேளைத் தொழுகைகளை தொழாத ஒருவர் அவரது ஸகாத்தை வழங்கினால் ஏற்றுக்கொள்ளப்படுமா? பதில்: தொழுகையை விடுபவன் “காபீர்” (இறை நிராகரிப்பாளன்) ஆவான். அல்லாஹ்வின் தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் கூறினார்கள்:- ஒரு மனிதனுக்கு மத்தியிலும் இணைவைப்புக்கும், இறை நிராகரிப்புக்கு மத்தியில் இருப்பது தொழுகையை விடுவதாகும். நூல்: முஸ்லிம்-82 இந்த ஹதீஸ் பொதுப்படையாக இடம் பெற்றிருப்பதன் காரணமாக தொழுகை கடமை என்பதை மறுக்காமல் (சோம்பேறித்தனத்தின் காரணமாக) ஒருவர் விட்டிருந்தாலும் (அவர் இறை நிராகரிப்பாளனாகி விடுவார்.) ... Read more

ஸகாத் கொடுக்காதவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவாரா? இமாம் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)

கேள்வி: ஸகாத் கொடுக்காதவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவாரா? பதில்: ஸகாத் கொடுக்காதவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடமாட்டார். ஆனாலும் அது பெரும் பாவங்களில் ஒன்றாகும். அவர் அல்லாஹ்வின் நாட்டத்தின் கீழ் இருப்பார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:- தங்கம், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய (ஸகாத்) கடமையை நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். ... Read more

ஜகாத் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி நமக்கு கூற முடியுமா? | இமாம் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)

கேள்வி 01:- இந்த ஜகாத் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி நமக்கு கூற முடியுமா? பதில்:- “ஜகாத் என்பது மகத்துவமான ஒன்றாகும். அது சமூகத்தில் பெரிய பிரயோஜனத்தை உண்டாக்குகிறது. அதன் மூலம் முஸ்லிம்களில் சிலர் சிலரின் கவலையை நீக்கி ஆறுதல் கூறுபவர்களாக உள்ளனர். தமது செல்வங்களிலிருந்து (அந்த ஏழையான சகோதரனுக்கு) தேவைகள் கருதி கொடுத்து உதவுகின்றனர். எனவே இந்த ஜக்காத்தின் மூலம் ஏழைகளுக்கு ஆறுதல் அளிக்கப்படுகின்றது. கடன்கள் நீக்கப்படுகின்றன. புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களின் உள்ளங்கள் இஸ்லாத்தின் பால் ... Read more

ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன?

ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன? தொகுப்பு : ஷெய்க் SHM இஸ்மாயில் ஸலஃபி பதில்: ஒரு மஸ்ஜிதில் இரண்டாம் ஜமாஅத் நடாத்தப்படுவது மூன்று வகைப்படும். முதலாவது வகை: மஸ்ஜித் பாதை ஓரத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டதாக இருத்தல். இத்தகைய மஸ்ஜித்களில் இரண்டாம் ஜமாஅத் நடாத்துவது தொடர்பில் எந்தச் சிக்கலும் இல்லை. இங்கு நியமிக்கப்பட்ட எந்த இமாமும் இல்லை. வருபவர், போகின்றவர்கள் எல்லோரும் தொழுவார்கள். இரண்டாவது வகை: ஒரே மஸ்ஜிதில் இரண்டு இமாம்களை நியமித்தல். ... Read more

தலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி?

தலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி? உள்ளடக்கம்: இதிலுள்ள கருத்து வேறுபாடுகள்:- முழுமையாக தடவ வேண்டும் என்று கூறுவோரின் ஆதாரங்கள். சில பகுதியை தடவினால் போதும் என்று கூறுவோரின் ஆதாரங்களும், இவர்களது கூற்றுக்கான மறுப்பும். சரியான நிலைப்பாடு என்ன? இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. தொழுகை சீராக வேண்டுமேயானால் வுளு ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிபூரணமானதாக இருக்க வேண்டும். அந்தடிப்படையில் வுளுவை நிறைவேற்றுகின்ற போது, இடம் பெறுகின்ற தவறுகளில் பிரதானமானது தான் தலையை மஸ்ஹ் செய்கின்ற ... Read more

அல்குர்ஆனிய துஆக்கள்

இறைவனின் வார்த்தைகளான திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள முக்கியமான மற்றும் அழகான துஆக்களின் (பிரார்த்தனைகளின்) தொகுப்பு அடங்கிய PDF ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்தத் துஆக்கள், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தேவைக்கும், இன்பத்திற்கும், துன்பத்திற்கும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்துள்ள வழிகாட்டல்களாகும். இந்த PDF-ஐ பயன்படுத்தி, தினமும் குர்ஆனிய துஆக்களை ஓதி, அதன் மூலம் அல்லாஹ்வின் அருளையும், நெருக்கத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். இதை உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் பகிர்ந்து, நன்மைகளைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

100 பெரும் பாவங்கள் – PDF Book

பெரும் பாவங்கள் ஓர் அறிமுகம் இஸ்லாம் மார்க்கத்தில், ஒரு மனிதன் செய்யும் செயல்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன: நற்காரியங்கள் மற்றும் பாவங்கள். பாவங்கள் மீண்டும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: பெரும் பாவங்கள் (கபாயிர்) மற்றும் சிறு பாவங்கள் (சகாயிர்). பெரும் பாவங்கள் என்பவை அல்லாஹ்வும் அவனது தூதரும் (ஸல்) கடுமையாக எச்சரித்த பாவங்களாகும். இவை மரண தண்டனை, மறுமையில் கடுமையான வேதனை அல்லது அல்லாஹ்வுடைய சாபம் போன்ற தண்டனைகளை ஏற்படுத்தும். இந்தப் பாவங்கள் ஒரு மனிதனின் ஈமானை ... Read more