ஸகாத் பற்றிய கேள்வி பதில்கள்
3.கேள்வி:-
யதார்த்தத்தில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கும், மறைமுகமான அடிப்படையில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கும் ஒரு உதாரணம் கூறுக?
பதில்:-
யதார்த்தத்தில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கு உதாரணம் கால்நடைகள், பயிர்கள், பழங்கள் மற்றும் வியாபாரப் பொருட்களாகும்.
மறைமுகமான அடிப்படையில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கு உதாரணம் தங்கம் மற்றும் வெள்ளியாகும். ஏனெனில் இவ்விரண்டும் அசையாமல் இருந்தாலும் இவ்விரண்டின் மூலமாக விரும்பிய நேரத்தில் வியாபாரத்தை மேற்கொள்ள முடியும்.
⛳ பார்க்க:-
“الشرح الممتع للشيخ ابن العثيمين” (1/455)
4.கேள்வி:-
ஸகாத் கடமையாகும் பொருட்கள் யாவை?
பதில்:-
ஐந்து பொருட்களில் ஸகாத் கடமையாகிறது:
1. தங்கம்
2. வெள்ளி
3. வியாபாரப் பொருட்கள்
4. கால்நடைகள்
5. பூமியிலிருந்து வெளிப்படும் பொருட்கள்.
இன்னும் சில பொருட்களில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
உதாரணமாக: தேன், புதையல்.
இவைகள் பற்றிய தெளிவு பின்வரும் தொடர்களில் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.
இவை அனைத்தும் அஷ்ஷைக் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்-அஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்களின் மார்க்கத் தீர்வில் இருந்து பெறப்பட்டவைகளாகும்.
அல்லாஹ் இதன் மூலம் முஸ்லிம்களுக்கு பல பிரயோசனங்களை வழங்குவானாக.
தமிழில்:-
அபூ அப்திர்ரஹ்மான் (அப்பாஸி,மதனி)
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: