கடன் வாங்கி உத்ஹிய்யா/குர்பானி கொடுக்கலாமா?

உத்ஹிய்யா கொடுப்பது கடமையா இல்லையா என்பது குறித்து உலமாக்கள் மத்தியில் கருத்து வருபாடு நிலவுகிறது.

பெரும்பாலான அறிஞர்கள் அது ஸுன்னா முஅக்கதா (வலியுறுத்தப் பட்ட சுன்னத்) என்ற கருத்தையே தேர்வு செய்கின்றனர். இதுவே ஷாஃபியி, மாலிகி மற்றும் ஹம்பலி மத்ஹபுகளின் கருத்தாகும்.

சிலர் அது கடமை என்று கூறுகின்றனர். இதுவே ஹனஃபி மத்ஹபின் கருத்தாகும். இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்களிடம் இருந்து அறிவிக்கப்படும் இரு கருத்துகளில் இதுவும் ஒன்று. ஷேக் அல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்களும் இதே கருத்தை தான் தேர்வு செய்கின்றார்.  அவா் கூறினார்: ” இதுவே மாலிகி மத்ஹபில், இருக்கும் இரு கருத்துகளில் ஒன்று, அல்லது மாலிகி மத்ஹபின் கருத்துக்களில் வெளிலிப்படையானது”

இமாம் இப்னு உஸைமீன் அவர்கள் கூறுகிறார்கள்: ” உத்ஹியா கொடுப்பது, அதற்கான சக்தி உடையோருக்கு வலியுறுத்தப் பட்ட சுன்னத் ஆகும், ஒரு மனிதர் தனக்கும் தன் குடும்பத்திற்கும் சேர்த்து உத்ஹியா கொடுத்தால் போதும்”
ஃபதாவா இப்னு உஸைமீன்

இமாம் இப்னு பாஸ் கூறினார்கள்: “ஷரியத்தின் ஆதாரங்களில் உத்ஹிய்யா கொடுப்பது கடமை என்பதற்கு யாதொரு ஆதாரமும் வரவில்லை, ஆதலால் அது கடமை என்று கூறுவது பலவீனமான கூற்றாகும்”

(மஜ்மூ ஃபதாவா இப்னு பாஸ்.)

அது கடமை என்று கூறுவோர், செல்வம் இருப்போர் மீது தான் கடமை என்று ஷர்த்தும் வைக்கின்றனர்.

(பார்க்க ஹாஷியது இப்னு ஆபிதீன் 9/452)

ஆகையால் உத்ஹிய்யா கொடுப்பது கடமை என்று கருதினாலும், அல்லது வலியுறுத்தப்பட்ட சுன்னத் என்று கருதினாலும், உத்ஹியா விலங்கை வாங்குவதற்காக கடன் வாங்குவது கடமை அல்ல, ஏனென்றால் உலமாக்களின் ஏகோபித்த கருத்தின் படி ஏழைகளுக்கு உத்ஹிய்யா கொடுப்பது கடமை அல்ல.

இப்போது உத்ஹிய்யா கொடுப்படார்க்காக கடன் வாங்குவது விரும்பத்தக்கதா என்ற கேள்வி உள்ளது?

அதற்கு பதில்: ஒருவருக்கு கடன் திரும்பி கொடுக்கும் சக்தி இருந்தால், அவருக்கு அது விரும்பத்தக்கது, உதாரணமாக மாத சம்பளம் வாங்கக் கூடிய வேளையில் இருக்கும் ஒருவர், சம்பளம் வந்தவுடன் கடனை அடைக்க இயலும் என்றால்.

கடனை திரும்பி கொடுக்க இயலாதவர் இவ்வாறு கடன் வாங்காமல் இருப்பது தான் சிறந்தது. ஏனென்றால் அவர் கடமையல்லாத ஒரு விடையத்திர்க்காக, தன் பொருளாதார சுமையை அதிகரிக்கிரார்.

மேலும் ஷெய்க் அல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களிடம் உத்ஹிய்யா கொடுக்க சக்தி பெராதோர் கடன் வாங்கி கொடுக்கலாமா என்று கேட்கப்பட்டது

அதற்கு அவர்: கடனை அடைக்க இயலும் என்றால் செய்யலாம், ஆனால் அது அவர் மீது கடமை இல்லை, என்று பதில் கூறினார்.

(மஜ்மூ அல் ஃபதாவா)

இப்னு தைமிய்யா உத்ஹிய்யா கொடுப்பது கடமை எனும் கருத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்னு பாஸ் அவர்களிடம் உத்ஹிய்யா கொடுப்பது சக்தி பெராதோருக்கு கடமையா? கடன் வாங்கி உத்ஹிய்யா கொடுக்கலாமா? என்று கேட்கப்பட்டது
அவா்: உத்ஹிய்யா என்பது கடமை அல்ல சுன்னத் தான்… ஒரு முஸ்லிம் கடனை அடைக்கும் சக்தி பெற்று இருந்தால்,  உத்ஹிய்யா கொடுக்க கடன் வாங்குவதில் தவறில்லை.

என்று பதில் அளித்தார்.
(ஃபதாவா இப்னு பாஸ் 1/37)

மூலம்: https://islamqa.info/ar/answers/41696/هل-يستدين-لشراء-الاضحية

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply