கேள்வி:
திருமண ஏற்பாடுகளையும், வலீமா விருந்தும் யார் செய்ய வேண்டும்? மணமகன் வீட்டாரா அல்லது மணமகள் வீட்டாரா ?
பதில்:
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே.
அடிப்படையாக, வலீமா விருந்தை மணமகன் தான் கொடுக்கவேண்டும். அவர் தான் அதற்க்கு கட்டளை இடப்பட்டிருக்கிறார், புகாரி மற்றும் முஸ்லிமில் வரும் ஹதீஸ் இதற்க்கு ஆதாரம்.
நபி صلى الله عليه وسلم அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ஃபிடம் رضي الله عنه :
பாரகல்லாஹு லக்க’ (அல்லாஹ் உங்களுக்கு சுபிட்சத்தை/வளத்தை வழங்குவானாக!) என்று பிரார்த்தித்துவிட்டு, ‘ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா-மணவிருந்து அளியுங்கள்’ என்று கூறினார்கள்.
ஸஹீஹ் அல் புகாரி 6386, ஸஹீஹ் முஸ்லிம் 2788
ஷேக் இப்ன் உஸைமீன் கூறினார்கள்:
“வலீமா விருந்து கணவர் மீதே விதிக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் நபி صلى الله عليه وسلم அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ஃபிடம் رضي الله عنه ‘வலீமா அளியுங்கள்‘ என்று கூறினார்கள். பெண்வீட்டாரிடம் கூறவில்லை. மேலும் திருமணம் மூலம் கணவருக்கே பெண்ணைவிட அதிகமான அருட்கொடைகள் கிடைக்கிறது, மேலும் அவர் தான் பெண்ணை திருமணத்திற்கு கேற்கிறார், ஒரு பெண் கணவனை தேடுவது மிக அரிதே.”
[ஷர்ஹ் அல் மும்தி]
மற்றோர் இடத்தில் அவர் கூறினார்:
”
மணமகள் வீட்டார் மட்டும் தனியாக விருந்துகொடுத்து, கணவர் வேறொரு வலீமா விருந்தை மணமகள் தன் வீட்டிற்கு வரும்போது கொடுப்பார் எனும் நிலையில், பெண் வீட்டின் விருந்தை ஏற்பது கடமை அல்ல. அதை ஏற்பது சுன்னத்தே ஆகும்”
[பதாவா நூறுந் அலா அல்தர்ப்]
இதிலிந்து பெண்வீட்டாரும் மாப்பிள்ளையும் சேர்ந்து வலீமா விருந்து கொடுக்கலாம் என்று தெரிகிறது, அல்லது பெண்வீட்டார் மட்டும் தனியாகவும் கொடுக்கலாம் என்றும் தெரிகிறது. சில நாடுகளில் நடப்பது போல் திருமண செலவுகளை இரவுறும் சேர்ந்து முடிவெடுத்து பிரித்துக்கொள்ளலாம், இருவரும் தனியாக விருந்து ஏற்பாடுகளும் செய்யலாம்.
வலீமா விருந்தை யார் கொடுக்க வேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு வந்தால், முன்னர் கூறப்பட்டது போல் கணவர் மீதே அது கடமை. திருமணத்திற்கான மற்ற செலவுகளை இருவரும் சேர்ந்து முடிவெடுத்த்துக்கொள்ளலாம்.
السؤال
من الذي يجب عليه ترتيب حفل النكاح والوليمة : هل هي أسرة العريس أم أسرة العروس ؟
نص الجواب
الحمد لله
الأصل في وليمة النكاح أن تكون على الزوج ؛ لأنه المأمور بها ، كما روى البخاري (5155) ومسلم (1427) أن النبي صلى الله عليه وسلم قال لعبد الرحمن بن عوف : ( بَارَكَ اللَّهُ لَكَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ ) .
قال الشيخ ابن عثيمين رحمه الله : ” وهي مشروعة في حق الزوج ؛ لأن النبي صلى الله عليه وسلم قال لعبد الرحمن بن عوف ـ رضي الله عنه ـ: أولم ولم يقل لأصهاره: أولموا، ولأن النعمة في حق الزوج أكبر من النعمة في حق الزوجة ؛ لأنه هو الطالب الذي يطلب المرأة، ويندر جدا أن المرأة تطلب الرجل ” انتهى من “الشرح الممتع” (12 / 321) .
وقال رحمه الله : ” قول السائلة إن الإجابة للوليمة واجبة ليس على إطلاقه ، ولكنها الوليمة إن كانت من الزوج : فالإجابة إليها واجبة ، وكذلك لو كانت مشتركة بين الزوج وأهل المرأة فالإجابة إليها واجبة ، لأن الزوج هو المأمور بالوليمة ، لقول النبي صلى الله عليه وسلم لعبد الرحمن بن عوف : ( أولم ولو بشاة )، وإذا كانت الوليمة من أهل الزوجة فقط ، والزوج سيعد وليمة إذا ارتحلت الزوجة إليه : فإنه لا يجب إجابة أهل المرأة ، وإنما إجابتهم سنة ” انتهى من “فتاوى نور على الدرب”.
وعلم من هذا أن الوليمة يجوز أن يشترك فيها الزوج والزوجة ، أو يقوم بها أهل الزوجة ، وكذلك تكاليف النكاح تكون بحسب ما يتفق عليه الطرفان ، وقد يصنع كل منهما وليمة كما هو العرف في بعض البلدان ، وإذا حدث نزاع فيمن تلزمه الوليمة ، فالوليمة على الزوج كما سبق ، وأما تكاليف النكاح الأخرى كجعل الاحتفال في فندق ونحوه فهذه تكون بحسب التراضي .
والله أعلم .
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: