பித்அத் என்றால் என்ன

கேள்வி:
இஸ்லாமிய ஷரீஅத்தின் அடிப்படையில் எப்போது ஒரு செயல் பித்அத் என்று கூறப்படும்? பித்அத் என்பது வெறுமனே வணக்க வழிபாடுகளில் மட்டுமா அல்லது வணக்க வழிபாடுகள் மற்றும் நடைமுறைகளிலும் உள்ளதா?

பதில்: பித்அத் என்பது தூய்மையான இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் மக்களால் புதிதாக செய்யப்பட்ட குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படை ஆதாரம் இல்லாத செயல்பாடுகள் ஆகும். நபி (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததை புதிதாக எவன் உண்டாக்குகிறான் அவனுடைய அந்த புதுமை நிராகரிக்கப்பட்டதாகும் (புகாரி 2697)

மேலும் நபி (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்: நமது மார்க்க அடிப்படையில் அமையாத ஒரு செயலை யார் செய்கிராரோ அச்செயல் நிராகரிக்கப்படும் (முஸ்லிம் 1718).
அரபி மொழியை பொருத்தவரை முந்தைய உதாரணம் இல்லாத புதிய ஒன்று பித்அத் என்று கூறப்படும். என்றாலும் மார்க்கத்தில் பித்அத் என்று ஆகும் வரை அவை தடை என்று குறிப்பிட முடியாது. நடைமுறை விஷயங்களில் மார்க்க சட்டங்களுக்கு ஏதுவாக;(முரணின்றி) இருப்பவை மார்க்கச் சட்டங்களே. அதற்கு முரணாக இருப்பவை தவறான கொள்கையே. அவற்றை மார்க்கச் சட்டங்களின் அடிப்படையில் பித்அத் என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் அது வணக்கவழிபாடுகளில் வருவதில்லை.

ஃபதாவா இ உலமா இ பலதில் ஹராம்/ மஜல்லத் தஃவா 7/11/1410 ஹிஜ்ரி ல்- கண்ணியத்திற்குரிய அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ்) அவர்கள் கொடுத்த ஃபத்வா

ஃபதாவா இ உலமா இ பலதில் ஹராம்.

தலைப்பு– பித்அத் மற்றும் அதைக் குறித்த எச்சரிக்கை.

தமிழாக்கம்:ஷைய்க் யூனுஸ் ஃபிர்தௌசி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply