ஸூரத் அல்காரிஆ விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி

اَلْقَارِعَةُ ۙ‏ مَا الْقَارِعَةُ‌ ۚ‏ وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْقَارِعَةُ ؕ‏ يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ‏ وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِؕ‏ فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ ۙ‏ فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍ ؕ‏ وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ ۙ‏  فَاُمُّهٗ هَاوِيَةٌ ؕ‏وَمَاۤ اَدْرٰٮكَ مَا هِيَهْ ؕ‏ نَارٌ حَامِيَةٌ

 திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).  திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன? திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?

அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். 

அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். 

அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார். ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-

அவன் தங்குமிடம் “ஹாவியா” தான். இன்னும் (“ஹாவியா”) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?

(அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்.‏

 

இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்-ஸஅதி  கூறுகிறார்கள்:

அல்காரிஆ(திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).) என்பது கியாமத் நாளின் பெயர்களில் ஒன்று. மக்களை அதன் வேதனையால் திடுக்கிடவும் கவலையுறவும் செய்வதனாலேயே அவ்வாறு அழைக்கப்படுகிறது. இதனால் அல்லாஹ் அதன் முக்கியத்துவத்தையும் கடுமையையும் உணர்த்தும் வகையில் கூறுகிறான்:

الْقَارِعَةُ
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).
مَا الْقَارِعَةُ
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?
وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
 يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ
அந்நாளில் மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று ஆகிவிடுவார்கள்.

அந்நாளில் மனிதர்கள் பீதியிலும் பயத்திலும் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று ஆகிவிடுவார்கள், சிதறடித்துச்செல்லும் வெட்டுக்கிளிகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு பறப்பது போல் நடப்பார்கள். அல்ஃபராஸ் என்பது இரவில் பறக்கும் ஒரு வகை பூச்சி, எங்கே போகிறோம் என்று தெரியாமல் ஒன்றின் மீது ஒன்று மோதிக்கொள்ளும், தீ மூட்டப்பட்டால் அதன் அபாயம் உணராமல் அதில் சென்று விழும். அந்த நாளில், ஆறறிவு படத்தை மனிதனின் நிலையும் இந்த பூச்சி போன்றது தான்.

وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ 
மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.

பலமும் உறுதியும் வாய்நத மலைகளோ அந்நாளில், கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும். லேசான காற்றும் தூக்கி எரியும் கூட்டப்பட்ட பலவீனமான செம்மறியாட்டு கம்பளிப்பஞ்சைப்போல். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்:

وَتَرَى الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَهِيَ تَمُرُّ مَرَّ السَّحَابِ
இன்னும் நீர் மலைகளைப் பார்த்து அவை மிகவும் உறுதியாக இருப்பதாக எண்ணுகிறீர்; (எனினும் அந்நாளில்) அவை மேகங்களைப் போல் பறந்தோடும்; [27:88]

பின்னர் பரத்தப்பட்ட புழுதியாக ஆகிவிடும் [25: 23, 56: 5]. அதன் பின் ஒன்றுமில்லாமல் மறைந்து போகும். அதன் பிறகு மீஸான் எனும் தரசுகள் நிறுவப்படும்.

மக்கள் இருபிரிவினராக பிரிக்கப்படுவர் 1) வெற்றியும் இன்பமும் அடைந்தவர்கள் 2) தோல்வியும் இழிவும் அடைந்தவர்கள்.

فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ
எவனுடைய (நன்மையின்) எடை கனத்ததோ,

எவருடைய நல்லமல்கள் அவருடைய பாவங்களைவிட கனத்திருந்ததோ அவர்,

فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார்.

அருள் நிறைந்த சுவனச்சோலைகளில்.

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ  
ஆனால் எவனுடைய (நன்மையின்) எடை இலேசாக இருக்கிறதோ-

எவனுடைய நன்மைகள் அவன் செய்த தீமைகளுக்கு ஈடுபெறவில்லையோ

فَاُمُّهٗ هَاوِيَةٌ 
அவன் தங்குமிடம் “ஹாவியா” தான்.

அவனுடைய முடிவும் தங்குமிடமும் நன்றாக நெருப்புதான், அதன் பெயர்களின் ஒன்று ஹாவியா. அது அவனின் தாயைப்போல (فَاُمُّهٗ) அவனை விடாமல் அவனுடன் ஒட்டியிருக்கும், அல்லாஹ் கூறுகிறான்

إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்” 25: 65,

மேல்கூறிய காயத்தின் இன்னொரு விளக்கமாக அறிஞர்கள் கூறுகிறார்கள்: அவனுடைய உம்மு திமாகி என்றறியப்படும் அவனின் மண்டை ஓடு நரகில் தூக்கி எறியப்படும்(ஹாவியா) . அதாவது அவன் தலைக்குப்பிற நரகில் தூக்கி எறியப்படுவான்.

وَمَاۤ اَدْرٰٮكَ مَا هِيَهْ 
இன்னும் (‘ஹாவியா’) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?

இந்த ஆயத் அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக அல்லாஹ் கூறியது.

மேலும் அதை விளக்கி,

نَارٌ حَامِيَةٌ
(அதுதான்) கடுமையாக சூடேற்றப்பட்ட (நரக) நெருப்பாகும்.

என்று கூறுகிறான்.

ஹாமியா என்பதன் அர்த்தம் அந்த நெருப்பின் சூடு கடுமையானது என்பதாகும், அதன் சூடு உலக நெருப்பின் சூட்டைவிட விட எழுபது மடங்கு கூடுதல். அல்லாஹ்விடம் அந்த நெருப்பிலிருந்து பாதுகாவல் தேடுகிறோம்.

{الْقَارِعَةُ مَا الْقَارِعَةُ وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ يَوْمَ يَكُونُ النَّاسُ} من شدة الفزع والهول، {كَالْفَرَاشِ الْمَبْثُوث}

أي: كالجراد المنتشر، الذي يموج بعضه في بعض، والفراش: هي الحيوانات التي تكون في الليل، يموج بعضها ببعض لا تدري أين توجه، فإذا أوقد لها نار تهافتت إليها لضعف إدراكها، فهذه حال الناس أهل العقول، وأما الجبال الصم الصلاب، فتكون {كَالْعِهْنِ الْمَنْفُوشِ} أي: كالصوف المنفوش، الذي بقي ضعيفًا جدًا، تطير به أدنى ريح، قال تعالى: {وَتَرَى الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَهِيَ تَمُرُّ مَرَّ السَّحَابِ} ثم بعد ذلك، تكون هباء منثورًا، فتضمحل ولا يبقى منها شيء يشاهد، فحينئذ تنصب الموازين، وينقسم الناس قسمين: سعداء وأشقياء، {فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ} أي: رجحت حسناته على سيئاته {فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ} في جنات النعيم.

{وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ} بأن لم تكن له حسنات تقاوم سيئاته.

{فَأُمُّهُ هَاوِيَةٌ} أي: مأواه ومسكنه النار، التي من أسمائها الهاوية، تكون له بمنزلة الأم الملازمة كما قال تعالى: {إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا} .

الْقَارِعَةُ

{وَمَا أَدْرَاكَ مَاهِيَهْ} وهذا تعظيم لأمرها، ثم فسرها بقوله هي: {نَارٌ حَامِيَةٌ} أي: شديدة الحرارة، قد زادت حرارتها على حرارة نار الدنيا سبعين ضعفًا. نستجير بالله منها.

وقيل: إن معنى ذلك، فأم دماغه هاوية في النار، أي: يلقى في النار على رأسه.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d