கேள்வி: தனியாக தொழுகும்போது சத்தமாக ஓதலாமா ?
பதில் : ஷைஃக் இப்னு பாஜ் (رحمه الله) கூறிகின்றார்கள்:
இமாமும் மற்றும் தொழுகுபவர், இருவருக்கும் ஃபஜ்ர், மற்றும் மஃக்ரிப் , இஷாவின் முதல் இரு ரக்அத்கள், ஆகிய சத்தமாக ஓத வேண்டிய தொழுகைகளை சத்தமாக ஓதுவது சுன்னத்தாகும்.
ஆனால் யாராவது இந்த தொழுகைகளை சத்தமில்லாமல் ஓதினாலும் தவறில்லை. ஆனால் அவர் சுன்னத்தை விட்டவர் போலாவார்.
தனித்து தொழுபவருக்கு சத்தம் இல்லாமல் ஓதினால் தான் உள்ளச்சம் வரும் என்று நினைத்தால் அப்படியும் தொழலாம் தவறில்லை.
காரணம், இரவு நேர (தஹஜ்ஜுத்) தொழுகைகளில் நபி (صلى الله عليه وسلم) சில நேரங்களில் சத்தமாகவும் சில நேரங்களில் சத்தம் இல்லாமலும் ஓதியிருக்கின்றார்கள் என் ஆயிஷா (رضي الله عنها) கூறியிருக்கின்றார்கள்.
ஃபர்ள் தொழுகையானாலும், சுன்னத்தான் தொழுகையானாலும் இமாம் சத்தமாக ஓதுவது தான் நபியின் صلى الله عليه وسلم வழியிலிருந்து கிடைக்கும் சுன்னத்
மேலும் இதன் மூலம் ஜமாத்தில் பின்பற்றி தொகுபவர்களை அல்லாஹ்வின் கலாமை கேட்கவைக்கும் பயனும் உள்ளது..
அல்லாஹ்வே தவ்ஃபீக் வழங்குபவன்.
மூலம்: https://bit.ly/34qbWDF
மொழிப்பெயர்ப்பு: முஹம்மது ரித்வான், நயீம் இப்னு அப்துல் வதூத்
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: