பன்றிக்காய்ச்சலை போன்ற தொற்று நோய்களிலிருந்து மக்கா மதீனா பாதுகாக்கப்பட்டதா?

கேள்வி:

பன்றிக்காய்ச்சலை போன்ற தொற்று நோய்கள், கொள்ளை நோய்(எனும் பிளேக் நோய்) மக்கா மதீனா நகரங்களில் பரவ வாய்ப்புள்ளதா?

அல்லது இது போன்ற தொற்று நோய்களிலிருந்து அவை பாதுகாக்கப்பட்டுள்ளதா?

பதில்:

மக்காவும் மதீனவும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவை அல்ல. உமர் இப்னு அல்கத்தாப் رضي الله عنه அவா்களின் காலத்தில் மதீனத்து நகரில் ஒரு தொற்று நோய் பரவியது.

அபுல் அஸ்வத் அறிவிக்கிறார்: நான் மதீனா வந்தேன், அப்போது ஒரு நோய் மதீனாவில் பிடித்தது, மக்கள் வேகமாக மரணித்து வந்தனர்.

நான் வந்து உமர் رضي الله عنه அவா்களின் அருகில் அமர்ந்தேன்… (ஸஹீஹ் அல்புகாரி)

ஆனால் நபி صلى عليه وسلم அவார்களிடமிருந்து மதீனா நகரில் தாவூன் (கொள்ளை நோய்) நுழையாது என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் வந்துள்ளது, இன்னும் சில அறிவிப்புகளில் மக்காவிலும் தாவூண் நுழையாது என்று வந்துள்ளது.

அபூ ஹுறைரா رضي الله عنه அறிவிக்கிறார்கள்: “மதீனாவிற்கு செல்லும் பாதைகளில் வானவர்கள் உள்ளனர். மதீனாவினுள் கொள்ளை நோயும் நுழையாது, தஜ்ஜாலும் நுழைய மாட்டான்.” என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள். [ஸஹீஹ் அல்புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்]

ஹாஃபித் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ஃபத்ஹுல் பாரி எனும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்:

அபூ ஹுறைராவின் இந்த ஹதீஸின் சில அறிவிப்புகளில், ” மக்கா மதீனா நகரங்களை சுற்றி வானவர்கள் இருக்கிறார்கள். அவற்றிர்க்கு செல்லும் பாதைகள் ஒவ்வொன்றிலும் ஒரு வானவர் இருக்கிறார். இவ்விரு நகரங்களுள் தஜ்ஜாலும், கொள்ளை நோயும் நுழைய முடியாது.” எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு தொடரின் அறிவிப்பாளர்கள், சஹீஹின் அறிவிப்பாளர்கள்.

இமாம் அந்நவவி: அபுல் ஹஸன் அல் மதாயினி எனும் அறிஞர் மக்கா மதீனா நகரங்களை கொள்ளை நோய் தீண்டியதே இல்லை என்று கூறியதாக அறிவிக்கிறார். [அல் அத்கார்]

ஆனால் சில அறிஞர்கள் மக்கா நகரில் ஹிஜ்ரி 749ஆம் ஆண்டு கொள்ளை நோய் நுழைந்ததாக கூறுகின்றனர்.

அல் ஹாஃபித் இப்னு ஹஜர் رضي الله عنه, மக்காவை தீண்டிய அந்த நோய் கொள்ளை நோய் அல்ல வேறொரு தொற்று நோய், ஆனால் அந்த சம்பவத்தை அறிவித்தவர் அதை கொள்ளை நோய் என்று தவறாக கருதி விட்டார் என்கிறார்.

ஆகையால்: மக்கா மதீனா நகரங்கள் கொள்ளை நோயிலிருந்து பாதுகாக்க பட்டுள்ளன. மற்ற நோய்கள், தொற்று நோய்களிலிருந்து அல்ல.

அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பும், நல்வாழ்க்கையும் கொடுக்கட்டும் என்று கேட்கிறோம்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

Islamqa

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply