- وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ
- லைலதுல் கத்ர் இரவு
- இரவின்மூன்றாம் பகுதி.
- கடமையானதொழுகைகளுக்குப்பின்,
- அதான்- இகாமத்திற்கு இடைப்பட்ட நேரம்.
- ஒவ்வொரு இரவிலும் ஒரு குறிப்பிட்ட நேரம்.
- பாங்குசொல்லப்படும் போது.
- மழை இறங்கும்போது.
- அல்லாஹ்வின் பாதையில் வீரர்கள் போரைத் துவங்கும் போது.
- வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம், (அந்த நேரம் மாலை நேரங்களின் இறுதி நேரமாகும் என்று பெறும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் குத்பா மற்றும் ஜும்ஆத் தொழுகையுடைய நேரமென்றும் கூறுகின்றனர்.)
- உண்மையான எண்ணத்துடன் ஜம்ஜம் நீரைக் குடிக்கும்போது.
- ஸஜ்தாவில் இருக்கும் போது.
- இரவில் தூக்கத்தை விட்டு எழும்போது. அப்போது ஹதீஸில் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ள துஆவைக் கேட்க வேண்டும்.
13. உளு செய்து தூங்குகிற நிலையில், இடையில் ஏற்படும் விழிப்பின்போது. - லாயிலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக இன்னீ குன்து மினள் ளாலிமீன்- ‘ன்னைத் தவிர வணக்கத்திற்கு உறிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோஅநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்.’ என்று ஓதுவது. (அல்-அன்பியா – 21:87)
- மவுத்து (இறப்புச்) செய்திக்குப் பின் கேட்கும் துஆ.
- தொழுகையின் கடைசி இருப்பில் அத்தஹிய்யாது, ஸலவாத்து ஓதியதற்குப் பின் கேட்கும் துஆ.
- அல்லாஹ்வின் மகத்துவம் மிக்க பெயரைக் கூறி துஆ கேட்கும் போது. அந்த மகிமை மிக்க பெயரைக் கூறி அவனை அழைக்கும் போது, அவன் அதற்கு பதில் தருகிறான். அவனிடம் யாசிக்கும் போது அவன் அதை கொடுக்கின்றான்.
- ஓரு முஸ்லிம் தமது முஸ்லிமான சகோதரனுக்காக மறைவில் கேட்கும் போது.
- அரஃபா அன்று அரஃபா மைதானத்தில் கேட்கும் துஆ.
- ரமளான் மாதத்தில் கேட்கும் துஆ.
- திக்ர் மற்றும் உபதேச சபைகளில் முஸ்லிம்கள் ஒன்று கூடி இருக்கும் போது.
- சோதனையான நேரங்களில், “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”, “அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபதீ வ அக்லி ஃபிலீ ஹைரம்மின்ஹா”, (நிச்சயமாக நாங்கள் அல்லாஹுவிற்கே சொந்தமானவர்கள்! அவன் பக்கமே நாங்கள் திரும்புகிறோம்! அல்லாஹுவே… என் சோதனையில் எனக்கு நற்கூலி வழங்கு! எனக்கு சிறந்ததைப் பகரமாகத் தந்திடு!) என்று பிரார்த்திக்கும் போது.
- உள்ளத்தில் அல்லாஹ்வின் தேட்டம் அதிகமாகி முழுமையாக மனத்தூய்மை ஏற்படும் போது.
- அநீதியிழைக்கப்பட்டவர் தமக்கு அநீதி இழைத்தவருக்கு எதிராக கேட்கும் போது.
- தந்தை தனது மகனுக்குச் சாதகமாக அல்லது பாதகமாக கேட்கும் போது.
- நோன்பு வைத்திருக்கும் போது நோன்பு துறக்கும் வரை.
- நோன்பாளி நோன்பு துறக்கும் போது.
- நெருக்கடியான நிலையில் சிக்கிக் கொள்ளும் போது.
- நீதமான அரசர் கேட்கும் போது. 30. பயணத்தில் இருப்பவர் கேட்கும் போது.
- பெற்றோருக்கு உபகாரம் செய்யும் பிள்ளைகள் கேட்கும் போது.
- பயணத்தில் இருப்பவர் கேட்கும் போது.
- பெற்றோருக்கு உபகாரம் செய்யும் பிள்ளைகள் கேட்கும் போது.
32.உளு செய்ததற்கு பிறகு (ஹதீஸில் கூறபட்ட துஆவைக் ) கேட்கும் போது.
- ஹஜ்ஜில் சிறிய ஜமராவில் கல்லெறிந்த பின்.
- ஹஜ்ஜில் நடு ஜமராவில் கல்லெறிந்த பின்.
- கஅபாவிற்குள் கேட்கும் போது. (தற்போது, கஅபா கட்டிடதிற்கு வெளியில் வளைவாக கட்டப்பட்டுள்ள அரை மதிற்சுவருக்குள் தொழுவதும் துஆ கேட்பதும், கஅபாவிற்குள் தொழுவதும் துஆ கேட்பதுமாகவே ஆகும்.)
- ஸஃபா மலையில்.
- மர்வா மலையில்.
- முஸ்தலிஃபாவில்.
- முஃமின்( அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்) எங்கிருந்தாலும் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வையே பிரார்த்தித்தவராக இருக்க வேண்டும். (நபியே!) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றி கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்- ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன். ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும். என்னையே நம்பிக்கை கொள்ளட்டும். (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள்.’) (குர்ஆன்- 2 : 186)
– ஷேக் ஸயீது இப்னு வஹ்ஃப் அல் கஹ்தானி
இஸ்லாமிய நூல்கள் வாங்க
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: