இஸ்லாத்தின் பார்வையில் தேசியவாதமும், இனவாதமும்

கேள்வி: மார்கத்தின் பால் மக்களை ஆழைப்பதைவிட, இனம்/மொழியின் அடிப்படையில் மக்களை அழைப்பதற்கு முக்கியத்துவம் தரும் தேசியவாதம்/இனவாதம் பற்றி உங்களின் கருத்து என்ன. இந்த கூட்டம் நாங்கள் மார்கத்தை எதிர்க்கவில்லை, ஆனால் இனவாதம்/தேசியவாதத்திற்க்கு முக்கியத்துவம் தருகிறோம் என்று கூறுகின்றனர்.இந்த அழைப்பு குறித்து உங்களின் கருத்து என்ன?

பதில்: இந்த அழைப்பு ஜாஹிலியா எனும் அறியாமை ஆகும், இந்த அழைப்பில் இணைவதும், இந்த அழைப்பில் ஈடுபடுவோருக்கு துணை நிற்பதும்,இஸ்லாத்தில் ஆகுமானது அல்ல. இன்னும் கூறினால் இதை தடுப்பது மார்கக் கடமை. ஏனென்றால் இஸ்லாமிய ஷரீயத் இதை எதிர்த்தும் அழிக்கவும் வந்தது. மேலும் அவர்களின் சந்தேகங்களையும், வாதங்களையும் உண்மையை தேடுவோருக்கு மறுத்து தெளிவுபடுத்தியுள்ளது.இஸ்லாமிய மார்கம் மட்டும் தான் அரபுகளின் மொழி, இலக்கியம், மற்றும் பண்புகளை காத்தது.இஸ்லாத்தை புறக்கணிப்பது, உண்மையில் அரபுகளின் மொழி, இலக்கியம், மற்றும் பண்புகளை புறக்கணிப்பதாகும்.ஆகையால் இஸ்லாமிய அழைப்பாளர்கள், இஸ்லாத்தை ஓங்கச்செய்ய கடும் முயற்சிகள் எடுக்க வேண்டும், காலனித்துவவாதிகள் இஸ்லாத்தை அழிக்க கடும் முயற்சி எடுப்பது போல்.அரபு இனவாதம், அல்லது வேறு இனவாதங்களின்பால் அழைப்பது, ஒரு போலியான அழைப்பு, பெரும் குற்றம், தெளிவான பாவம், (ஜாஹிலிய) அறியாமை பண்பு, இஸ்லாத்திற்கும், அதன் மக்களுக்கும் எதிரான சூழ்ச்சி என்பது, இஸ்லாத்தின் அடிப்படைகளில், அனைவரும் அறிந்தாக வேண்டியது (இல்முத்தரூரத்).இதற்கான காரணங்களை, நான் “இஸ்லாம் மற்றும் யதார்தங்களின் ஒளியில் அரபு இனவாத்தின் மறுப்பு – நக்து அல் கவ்மிய்யா அல் அரபிய்யா அலா தவ்உ அல்இஸ்லாமி வல்வாகிஇ” எனும் தனியொரு நூலில் தெளிவாக விவரித்துள்ளேன்.இப்னு பாஸ், ஃபதாவா இப்னு பாஸ் 4/173தமிழாக்கம் நயீம் இப்னு அப்துல் வதூத்.س: ما رأيكم في الدعوة إلى القومية التي تعتقد أن الانتساب إلى العنصر، أو اللغة مقدم على الانتساب إلى الدين، وهذه الجماعات تدعي أنها لا تعادي الدين؛ ولكنها تقدم القومية عليه، ما رأيكم في هذه الدعوى؟.ج: هذه دعوة جاهلية لا يجوز الانتساب إليها، ولا تشجيع القائمين بها، بل يجب القضاء عليها؛ لأن الشريعة الإسلامية جاءت بمحاربتها والتنفير منها، وتفنيد شبههم ومزاعمهم والرد عليها بما يوضح الحقيقة لطالبها؛ لأن الإسلام وحده هو الذي يخلد العروبة لغةً وأدبًا وخلقًا، وأن التنكر لهذا الدين معناه القضاء الحقيقي التنكر على العروبة في لغتها وأدبها وخلقها، ولذلك يجب على الدعاة أن يستميتوا في إبراز الدعوة إلى الإسلام، بقدر ما يستميت الاستعمار في إخفائه.ومن المعلوم من دين الإسلام بالضرورة أن الدعوة إلى القومية العربية، أو غيرها من القوميات دعوة باطلة، وخطأ عظيم، ومنكر ظاهر، وجاهلية نكراء، وكيد للإسلام وأهله، وذلك لوجوه قد أوضحناها في كتاب مستقل سميته: (نقد القومية العربية على ضوء الإسلام والواقع)، سأل الله أن يوفق الجميع لما فيه رضاه.مجموع(4/173).

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

1 thought on “இஸ்லாத்தின் பார்வையில் தேசியவாதமும், இனவாதமும்”

Leave a Reply