ஜிப்ரீலின் عليه السلام வயதை குறித்து வரும் ஆதாரமற்ற போலி ஹதீஸ்

கேள்வி:

السؤال

ஜிப்ரீல் عليه السلام அவர்களின் வயதை குறித்து வரும் ஹதீஸ் ஸஹீஹ்தான் என்று ஒரு சகோதரர்  என்னிடம் விவாதம் செய்தார். நான் அவரிடம் “அந்த ஹதீஸ் நான் அறிந்தவரை பலகீனமானது, ஆனால் நான் கூருவது தவறாக இருக்கக்கூடும்” என்று கூறினேன். மேலும், இது குறித்து உலமாக்களிடம் கேட்பதே சிறந்தது என்றும் அவரிடம் கூறினேன்.

இந்த விஷயத்தை எங்களுக்காக தெளிவுபடுத்துமார் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

جادلني أحد الإخوة في صحة الحديث الذي يتكلم عن عمر جبريل عليه السلام ، فقال : إنه صحيح ، لكنني قلت له : إنه ضعيف على حد علمي ، وقد أكون مخطئاً ، ثم قلت له: الأفضل أن نستفسر أهل العلم ، فأرجو منكم توضيح هذه المسألة بالتفصيل ؛ حتى أنقل له قولكم .

பதில்:

புகழனைத்தும் அல்லாஹ்விற்கே.

சில அறிவற்ற சூஃபிகள் அபூ ஹுரைரா அறிவிப்பதாக கூறும் இந்த ஹதீஸை தான் நீங்கள் கூறுகிறீர்கள் என நினைக்கிறன்:

“ஒரு முறை  நபி ﷺ ஜிப்ரீலிடம் عليه السلام அவரின் வயதை குறித்து கேட்டார்.

அதற்கு அவர் ‘யா ரசூலுல்லாஹ் எனக்கு தெரியவில்லை ஆனால் வானத்தில் ஒரு நட்சத்திரம் 70,000 ஆண்டிற்கு ஒரு முறை தோன்றும், அதை நான் 72,000 முறை பார்த்திருக்கிறேன்’ என்றார் ‘

அதற்க்கு நபி ﷺ ‘என்னுடைய ரப்பின் கண்ணியத்தின் மீது சத்தியமிட்டு கூறுகிறேன் அந்த நட்சத்திரமே நான் தான் என்று கூறினார்’ “.

 

இந்த ஹதீஸ் எந்த ஆதரமுமற்ற, பாத்திலான(பொய்யான) ஹதீஸாகும். இதை சில அல்ட்ரா சூபிகளையும் அவர்களை பின்பற்றும் சாமானியர்களையும் தவிர வேற யாரும் அறிவிப்பதில்லை. தெளிவாக பொய் என தெரியும் கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று.

இமாம் இபின் அல்கய்யிம் رحمه الله கூறுகிறார்:

“இட்டுக்கட்டப்பட்ட பொய் ஹதீஸ்களில் அவை இட்டுக்கட்டப்பவை தான் எனக்காட்டும், ஒரு வகை இருளும், பலகீனமும், போலித்தனமும் இருப்பதை பார்க்கலாம்.” [மனார் அல்முனீஃப்  ]

 

ஷேக் அப்துல்லாஹ் இபின் முஹம்மது இபின் சித்தீக் அல்குமாரி رحمه الله கூறுகிறார்:

“சில மவ்லித் கிதாப்களில் அபூ ஹுரைராஹ் வழியாக இந்த ஹதீஸ் இடம் பெறுகிறது. இது மிக அசிங்கமான பொய்யாகும். இந்த பொய்யை இட்டுக்கட்டியவனை அல்லாஹ் அசிங்கப்படுத்தட்டும் ”

[முர்ஷித் அல்-ஹாயிற்]

https://islamqa.info/ar/answers/200271

الحمد لله
لعل السائل يقصد هذا الحديث الذي يذكره جهلة الصوفية عن أبي هريرة قال: ” سأل النبيّ صلى الله عليه وسلم جبريل عليه السلام فقال: يا جبريل كم عمّرتَ من السنين؟ فقال: يا رسول الله لست أعلم ، غير أن في الحجاب الرابع نجمًا يطلع في كل سبعين ألف سنة مرة ، رأيته اثنتين وسبعين ألف مرة ، فقال النبيّ صلى الله عليه وسلم : ( وعزة ربي أنا ذلك الكوكب ) .
وهذا حديث باطل لا أصل له ، وإنما يذكره هؤلاء الغلاة الجهلة من الصوفية ومن تابعهم من العوام ، وهو من الخرافة التي تنادي على نفسها بالبطلان .
قال ابن القيم رحمه الله :
” والأحاديث الموضوعة عليها ظلمة وركاكة ومجازفات باردة تنادي على وضعها واختلاقها على رسول الله صلى الله عليه وسلم ” .
انتهى من “المنار المنيف” (ص 50) .
وقال الشيخ عبد الله بن محمد بن الصديق الغماري رحمه الله :
” وروي في بعض كتب المولد النبوي عن أبي هريرة قال: ” سأل النبيّ صلى الله عليه وسلم جبريل عليه السلام فقال: يا جبريل كم عمّرتَ من السنين؟ … ” فذكره ثم قال : ” وهذا كذب قبيح ، قبّح الله من وضعه وافتراه ” .
انتهى من “مرشد الحائر” (ص5) .

راجع جواب السؤال رقم : (130210) لمعرفة موقف المسلم من الأحاديث الضعيفة والموضوعة .
والله تعالى أعلم .

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: