ஒருவன் தனியாகவோ ஜமாஅத்துடன் சேர்ந்தோ தொழும்போது இகாமத் சொல்ல மறந்து விட்டால் அத்தொழுகையில் குறையேதும் ஏற்படுமா?
பதில்: தனியாகத் தொழுபவர் அல்லது ஜமாஅத்தாகத் தொழுபவர்கள் இகாமத் சொல்லாமல் தொழுதுவிட்டால் அவர்களது தொழுகை நிறைவேறிவிடும்.
ஆனால் அவ்வாறு செய்தவர்கள் அல்லாஹ்விடம் தவ்பா செய்து கொள்ள வேண்டூம். இவ்வாறே பாங்கு சொல்லாமல் தொழுதாலும் அவர்களது தொழுகை கூடிவிடும். ஏனெனில் பாங்கும் இகாமத்தும் அனைவருக்கும் பொதுவாக ஒருவராவது சொல்லிவிட வேண்டும்
எனும் நிலையிலுள்ள கடமை (ஃபர்ளு கிஃபாயா) ஆகும். இவ்விரண்டும் தொழுகையின் அடிப்படைக் கடமைகளுக்கு வெளியே உள்ளவையாகும்.
பாங்கையும் இகாமத்தையும் விட்டவர்கள் அதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடிக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஃபர்ளு கிஃபாயா எனும் நிலையிலுள்ள கடமைகளை ஒருவர் கூட செய்யாமல் எல்லோரும் விட்டுவிட்டால் அனைவரும் குற்றவாளியாவர். ஒருவராவது நிறைவேற்றிவிட்டால் அனைவரின் சார்பாக அந்த கடமை நீங்கிவிடும். இத்தகைய ஃபர்ளு கிஃபாயா எனும்
நிலையிலுள்ள கடமைகளில் ஒன்றுதான் பாங்கும் இகாமத்தும். இவ்விரண்டையும் ஒருவரேனும் செய்துவிட்டால் மற்ற அனைவரையும் விட்டும் கடமையும் குற்றமும் நீங்கிவிடும். அவர்கள் ஊரிலிருந்தாலும் சரி அல்லது பயணத்திலிருந்தாலும் சரி. கிராமங்கள், நகரங்களில் இருந்தாலும் சரி அல்லது வனாந்தரத்தில் இருந்தாலும் சரி. அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களுக்கும் அவன் விரும்புகின்ற வழியில் செல்வதற்கு அருள் புரிவானாக! எனப் பிரார்த்திப்போம்.
இமாம் இப்னு பாஸ்- தொழுகை பற்றிய முக்கியமான கேள்வி பதில்கள்
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: