Democracy ஜனநாயகம் என்ற சொல் இஸ்லாமிய வரையறைக்குட்பட்டது என்று கூறகேட்டுள்ளேன் இது சரியா?ஜனநாயகத்தை ஊக்குவிப்பதன் மார்க்க வரம்பு என்ன?

கேள்வி:Democracy ஜனநாயகம் என்ற சொல் இஸ்லாமிய வரையறைக்குட்பட்டது என்று கூறகேட்டுள்ளேன் இது சரியா?ஜனநாயகத்தை ஊக்குவிப்பதன் மார்க்க வரம்பு என்ன?

முதலாவதாக;

Democracy என்பது அரபு சொல் அல்ல கிரேக்க மொழியிலிருந்து தான் இச்சொல் பெறப்பட்டது.     இரண்டு வார்தைகளை உள்ளடக்கிய சொல்லாகும்
ஒன்று Demos பொதுமக்கள்  இரண்டாவது   kratia ஆட்சி இதன் பொருள் ஜனநாயக ஆட்சி அல்லது அரசு என்பதாகும் .

இரண்டாவதாக;
ஜனநாயகம் என்பது இஸ்லாதிற்கு எதிராண( system) அமைப்பாகும் எப்படி என்றால்  சட்டம் இயற்றும் அதிகாரத்தை குடிமக்களுக்கும் அல்லது அவர்களின் பிரதிநிதிகளுக்கு வழங்குகிறது (நாடாளமன்ற உறுப்பினர்கள்)
இதன் அடிப்படையில் ஆட்சி அதிகாரம் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு ஆகிவிடுகிறது அதாவது மக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்குமாகி விடுகிறது.அவர்கள் அனைவரும் ஏகோபிக்க வேண்டுமென்பதை கருத்தில் கொள்வதில்லை மாறாக பெரும்பான்மை என்பதைதான் கருத்தில் கொள்வார்கள் பெரும்பான்மையினர் ஒன்றுபடும் கருத்து சமுதாயம் கடைபிடிக்க வேண்டிய சட்டமாக மாறும் அச்சட்டம் இயல்புக்கும்,மார்கத்திற்கும் ,அறிவிற்கும் முரணாக இருந்தாலும் சரியே.இந்த நியதியின் அடிப்படையில் தான் கருகலைப்பு ,ஒரினச்சேர்க்கையாளர்களின் திருமணம்,வட்டி,ஷரிஆ சட்டங்களை தள்ளுபடிசெய்வது,விபச்சாரம்,மது,போன்றவற்றிக்கு அனுமதி வழங்குவது இதுபோன்ற சட்டங்களின் மூலம் இஸ்லாமிய மார்கத்துடனும்,முஸ்லிம்களுடனும் அவர்கள் போர் புரிகிறார்கள்.

ஆட்சி அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே என்பதை அல்லாஹ் தனது வேதத்தில் அறிவித்து தந்துள்ளான்.
இன்னும் அவன் நீதிமான் களுக்கெல்லாம் மிக்க மேலான நீதிமான்.ஆட்சி அதிகாரத்தில்  அவனுக்கு பங்கு சேர்ப்பதை விலக்கியுள்ளான் இன்னும் அவனைவிட அழகான சட்டம் இயற்றக்கூடியவன் யாருமில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான்:

(பதில் கூறப்படும்:) “அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மகாப் பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது.”
( அல்குர்ஆன்:40:12)

அல்லாஹ் கூறுகிறான்:

“அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.

(அல்குர்ஆன்:12:40)

அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?

(அல்குர்ஆன்:95:08)

அல்லாஹ் கூறுகிறான்:

“அவர்கள் (அதில்) தங்கியிருந்த (காலத்)தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் மறைவாய் இருப்பவை அவனுக்கே உரியனவாகும்; அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன்; தெளிவாய்க் கேட்பவன் – அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை, அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை” என்று (நபியே!) நீர் கூறும்.

(அல்குர்ஆன்:18:26)

அல்லாஹ் கூறுகிறான்:

அஞ்ஞான (ஜாஹிலிய்யா) காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?
(அல்குர்ஆன்:5:50)

மேன்மைமிக்க அல்லாஹ் அவன் தான்  படைப்புகளைப் படைத்தவன் மனிதர்களுக்கு தோதுவான சட்டங்கள் என்ன என்பதையும் எது அவர்களுக்கு நன்மை பயக்கும் என்பதையும் அவன் தான் நன்கு அறிந்தவன்.மனிதனைப் பொருத்தவரையில் அவனது அறிவு,பன்புகள்,பழக்கவழக்கம் ஆகியவற்றில் ஏற்றதாழ்வுடயவர்கள் .மனிதன் தனக்கு எது நன்மை தரும் என்பதையே அறிந்திருக்கவில்லை அப்படி இருக்கும்போது பிறருக்கு எது நல்லது என்பதை அவன் எப்படி அறியமுடியும்.

எனவே தான் மனிதர்கள்   இயற்றிய சட்டங்களையும் நியதிகளையும் பின்பற்றும் சமுதாயத்தில் குழப்பங்களையும் ,ஒழுக்கசீர்கேடுகளையும்,சமூகசீர்கேடுகளையும் பார்கிறோம்.
இத்துடன் இதனையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.பெரும்பான்மை நாடுகளில் இந்த அமைப்பு முறை பெயரளவில் தான் உள்ளன யதார்தத்தில்  நடைமுறையில் இல்லை.

வெறும்னே ஜனநாயகம் என்ற அடையாளத்தை வைத்து கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் . யதார்த்தத்தில் ஆட்சி செய்பவர் அந்நாட்டின் தலைவரோ அல்லது அவரது எதிரிகளோ ஆவார்கள்.அவரது ஆணைகளுக்கு கட்டுப்படுவதற்கு நிர்பந்திக்கப்பட்டவர்கள் தான் குடி மக்களாக இருப்பவர்கள் ஆட்சியாளர்கள் விரும்பாதவற்றை ஜனநாயகம் கொண்டுவந்தால் அதனை அவர்கள் தங்களது கால்களில் போட்டு மிதித்து விடுவார்கள் .  மோசடியாண தேர்தல்களும்,சுதந்திரத்தை அடக்குமுறை செய்வது,உன்மை பேசுவோரின் வாய்களுக்கு திரையிடுவதும் ஆதாரம்காட்ட தேவையில்லாத அளவிற்கு அனைவரும் அறிந்த உண்மை .பகல் வெளிச்சதிற்கு ஆதாரம் கேட்பது அறிவிற்கு பொருந்தாது.

அல் மவ்சூஆ அல் முயச்சர என்ற நூலில் கூறப்பட்டுள்ளதாவது,

நாடளுமன்ற ஜனநாயகம்
மக்களில் இருந்து அவர்களது பிரதிநிதிகளை தேர்வு செய்யப்பட்ட குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது தான் இன்றைய ஜனநாயக அமைப்பின் அரசியல் நிலைபாடு.பல்வேறு வழிகளின் மூலம் மக்கள் நேரடியாக அரசியலில் தலையிட்டு தங்களுடய உரிமைகளை பாதுகாத்து கொள்வார்கள்.

அவ்வழிமுறைகள்,

1 வாக்களிக்கும் உரிமை:

சுருக்கமான ,மற்றும் விரிவான சட்டங்களை இயற்றுவதற்காக மக்களில் சிலர் ஈடுபட்டு பின்னர் அதனை நாடாளமன்ற அவையில் விவாதித்து அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும் உரிமை வழங்கப்படுகிறது.

2,  மக்களிடம் கருத்து கேட்கும் உரிமை:

நாடாளமன்றத்தில் அங்கிகாரம் கிடைத்த பிறகு அச்சட்டத்தை மக்கள் மன்றத்தில் அதனை சமர்ப்பித்து அவர்களது கருத்து கேட்பது.

3, சட்டத்தை மறுக்கும் உரிமை:

வாக்களர்களில்  சிலருக்கு சட்டம் இயற்றிய குறிப்பிட்ட காலத்தில் அதனை மறுப்பதற்கான உரிமையை அரசியல் அமைப்புச்சட்டம் வழங்குகிறது இதன் அடிப்படையில் பொதுவாக்கெடுப்பிற்காக மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீது மக்கள் ஒன்றுபட்டால்  அதனை நடைமுறை படுத்தப்படும் இல்லையெனில் அது நிராகரிக்கப்படும் இவ்வாறு தான் இன்று பெரும்பான்மையாண அமைப்புச்சட்டம் எடுக்கப்படுகிறது.

சட்டம் இயற்றும் ஆதிகாரத்தில் கட்டுப்படுவதும் , கீழ்ப்படிவதும் ஜனநாயக அமைப்பு முறையின்  நவீன இணைவைப்பின் வடிவம் தான் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை எவ்வாரெனில்  சட்டமியற்றும் விஷயத்தில் படைத்தவனின் அதிகாரத்தை தள்ளுபடி செய்து படைப்பினங்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்குகிறது.

_(அல் மவ்சூஆ அல் முயச்சர ஃபி அதியானி வல் மதாஹிபி வல் அஹ்ஸாபில் முஆசிரா 2/1066)_

அல்லாஹ் கூறுகிறான்:

“அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.

_(அல்குர்ஆன்:12:40)_

பின்னும் நீர் கூறும்:
*“நான் என்னுடைய ரப்பின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன்; ஆனால் நீங்களோ அதைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து என் அதிகாரத்தில் இல்லை; அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை; சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்.*

(அல்குர்ஆன்:6:57)

மூன்றாவதாக:
மக்களில் அதிகமானவர்கள் ஜனநாயகம் என்பதை சுதந்திரம் என்று எண்ணுகிறார்கள் இது ஒரு தவறாண என்ணமாகும் .
சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் வெளித்தோற்றமாக இருந்தாலும் அதாவது நம்பிக்கை சுதந்திரம்,ஒழுக்ககேட்டிற்கான சுதந்திரம், கருத்து சுதந்திரம் போன்றவைகள் இஸ்லாமிய சமுதாயத்திற்கு தீங்கு இழைக்ககூடியதாகும் .கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இறைதூதர்களையும்,குர்ஆனையும் ,நபிதோழர்களையும் குறைகூறும் அளவிற்கு சென்று விட்டது.இன்னும் சுதந்திரம் என்ற பெயரில் ஆடை குறைப்பு,நிர்வாண புகைப்படம்,மற்றும் சினிமா என்பவற்றுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.இதன் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்  அவை அணைத்தும் சமுதாயத்தை மார்கரீதியாகவும் ,ஒழுக்கரீதியாகவும் பாழ்ப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

அதேவேளையில் உலகநாடுகள் அழைப்பு விடுக்கும் ஜனநாயக அமைப்பு முழுமையாண சுதந்திரமல்ல. அச்சுதந்திரத்தின் வரையறையில் நண்மையையும்,மனோ இச்சையையும் பார்க்கமுடிகிறது.கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நபி ﷺ   அவர்களையும் குர் ஆனையும் விமர்ச்சிக்கும் வேளையில் நாசிகளின் ( holocaust) இன அழிப்பை விமர்சிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இன்னும் சொல்லப்போனல் அதனை விமர்சிப்பதை பெரும் குற்றச்செயலாக பார்க்கப்பட்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். உண்மையில் holocaust என்பது விமர்சிக்கப்பட வேண்டிய வரலாற்று பிரச்சனையாகும்.
உண்மையில் இவர்கள் சுதந்திரத்தின் அழைப்பாளர்களாக இருந்தால் ஏன் இஸ்லாமிய சமுதாயத்தை மட்டும் அதன் போக்கில் அதன் கொள்கைகளை பின்பற்றுவதற்கு விடுவதில்லை?

ஏன் அவர்கள் முஸ்லிம்களின் நாடுகளை ஆதிக்கம் செலுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள்?
இன்னும் முஸ்லிம்களின் நம்பிக்கைகளையும் மார்கத்தையும் மாற்ற முயற்சிகிறார்கள் .
இத்தாலியர்கள் லிபியா மக்களை கொன்று குவிக்கும்போது இந்த சுதந்திரம் எங்கே போனது?
அல்ஜீரியா மக்களை  பிரான்ஸ் நாட்டவர்கள் படுகொலை செய்த போதும் ,எகிப்தியர்களை பிரிட்டானியர்கள் படுகொலை செய்யும்போதும்,இன்னும் அமேரிக்கர்கள் ஈராக் மற்றும் ஆஃப்கன் மக்களை கொன்று ஒழிக்கும்போது இவர்கள் எங்கே சென்றார்கள். இந்த சுதந்திரத்தின் பால் அலைப்பவர்களே, அதை பல கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்துகிரார்கள்.

அவற்றில் சில;

1. சட்டங்கள்
பாதையில் எதிர்திசையில் பயணம் செய்வதற்கான சுதந்திரம் உரிமம் யாருக்கும் இல்லை. உரிய உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்வதற்காண சுதந்திரம் யாருக்கும் கொடுப்பதில்லை. மனிதன் தன்னை சுதந்திரமானவன் என்று கூறினாலும் அதை யாரும் பொருப்படுத்த மாட்டார்கள்

2.நடைமுறை
பெண் சுதந்திரம் என்ற பெயரில் நீச்சல் உடை அணிந்த பெண் மரண வீட்டிற்கு செல்வதை அனுமதிக்காது அவள் தன்னை சுதந்திரமானவள் என்று கூறினாலும் மக்கள் அவளை விரட்டியடிப்பார்கள் அவளை கேவலமாக நினைப்பார்கள் ஏனெனில் இது நடைமுறைக்கு மாற்றமாகும்

3.பொது விருப்பம்
ஒருவர் சுதந்திரம் என்ற பெயரில் மக்களுக்கு மத்தியில் காற்று வெளியேற்றுவதையோ ஏப்பம் விடுவதையோ அனுமதிக்கமாட்டர்கள் அதனை ஏளனமாக கருதுவார்கள் அதை அவர் சுதந்திரம் என்று கூறினாலும் சரி.

அப்படியானால் நாம் கேட்கிறோம் அவர்களால் தங்களுக்கென்று மறுக்க முடியாத சுதந்திரத்தை வரையறுத்து கொள்ள அனுமதியிருக்கும் போது ஏன் நமது மார்கத்திற்கு மட்டும்  அதற்கான சுதந்திரத்தை வரையறுத்து கொள்ள அனுமதியில்லை
மார்க்கம் எதை கொண்டு வந்ததோ அது தான் மனிதனுக்கு நன்மையும்,சிறப்பும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை
எனவே தான் மார்க்கம் பெண்களுக்கு அலங்காரத்தை தடைசெய்கிறது,மனிதனுக்கு மதுவையும்,பன்றி இறைச்சியையும் தடை செய்துள்ளது இதன் மூலம்  மனிதனுக்கும் அவனது அறிவு ,ஆரோக்கியம் ஆகியவற்றிக்கு நன்மை பயக்க கூடியதாய் உள்ளது. ஆனாலும் மார்க்கத்தின் பெயரால் மனிதனுக்கான சுதந்திரத்தை வறையருக்கும் போது அதனை அவர்கள் நிராகரிக்கிறார்கள்.
மனிதர்களிடமிருந்தோ மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களில் இருந்தோ பெருவதை கேட்டோம் கட்டுப்பட்டோம் என்று கூறி ஏற்கிறார்கள் .

நான்காவதாக;

சிலர் ஜனநாயகம் என்றச்சொல் இஸ்லாம் கூறும் ஷூராவிற்கு நிகராகனதாக கருதுகிறார்கள் பல காரணத்தால் இக்கருத்து தவறானதாகும்.

1. ஷுரா என்பது  குர் ஆனும் ஸுன்னாவும் தெளிவு படுத்தாத புதிய விஷயங்களிலும் ,நவீன பிரச்சனைகளின் போதும் தான் பயன்படுத்துவோம் .அதே நேரத்தில் ஜனநாயக ஆட்சி என்பது மார்க்கம் உறுதி செய்த விஷயங்களையும் விவாதிக்கிறது, மேலும் மார்க்கம் தடுத்தவற்றை நிராகரிக்கிறது.இன்னும் அல்லாஹ் கடமையாக்கியதையும்,அனுமதித்தையும் தடை செய்கிறது.இச்சட்டத்தின் அடிப்படையில் மது விற்பனை செய்வதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.அதேபோன்று வட்டியும்,விபச்சாரமும் அனுமதிக்கப்படுகிறது.
இச்சட்டத்தின் வாயிலாக இஸ்லாமிய நிறுவனங்களுக்கும்,அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்ககூடிய அழைப்பாளர்களுக்கும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது இவை அனைத்தும் மார்க்கத்திற்கு முரணானவையாகும் இவற்றிர்க்கும் ஷுராவிற்கும் என்ன தொடர்பு?

2 , மஜ்லிஸ்ஷுரா என்பது நற்பண்பு,பேணுதல்,புரிதல்,அறிவு,ஞனம்,ஆகியவற்றில் ஒரே அந்தஸ்த்தில் இருக்கும் மக்களை உள்ளடிக்கியதாகும் மூடனிடமோ,தீயவனிடமோ ஆலோசனை செய்வதில்லை அப்படியிருக்க நிராகரிப்பாளன்,மற்றும் நாத்திகனிடமா ஆலோசனை செய்வோம்.
ஜனநாயகத்தின் நாடாளமன்ற அவையை பொறுத்தவரையில் மேற்சொன்னவைகள் அங்கே கவனத்தில் கொள்ளப்படாது  நிராகரிப்பாளனும்,தீயவனும்,மூடனும் கூட அந்த அவையில் பொறுப்பேற்பார்கள் இதற்கும் இஸ்லாம் கூறும் ஷுராவிற்கும் என்ன சம்பந்தமுள்ளது.

3 . ஆலோசனை கூறுவது என்பது ஆட்சியாளருக்கு மட்டும் உரியதல்ல.அவையில் உள்ள ஒருவரின் கருத்து உறுதியாணதாக இருக்கும் பட்ச்சத்தில் அவரது கருத்தை ஆட்சியாளர் அவையில் முற்படுத்துவார் அக்கருத்தை அவையில் உள்ளவர்கள் சரி காண்பது தான் ஷுரா என்பது.ஜனநாயகத்தை பொறுத்த வரையில் பெரும்பான்மையினரின் ஒன்றுப்பட்ட கருத்து மக்கள் பின்பற்ற வேண்டிய சட்டமாகும்.இதனை அறிந்து கொண்ட முஸ்லிம்கள் தங்களது மார்கத்தை கன்ணியபடுத்துவதும் ரப்புடைய சட்டங்களை உறுதியாக பற்றிப் பிடிப்பதும் கடமையாகும் இதன் மூலம்தான் முஸ்லிம்களின் இம்மையும் மறுமையும் சீராகும் இன்னும் அல்லாஹ்வின் மார்கத்திற்கு முரணான அமைப்பு முறையை விட்டு விலகுவதும் கடமையாகும் .முஸ்லிம்கள் ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி குடிமக்களாக இருந்தாலும் சரி அணைவரும் எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வுடைய சட்ட்திட்டங்களை கடைபிடித்து வாழவேண்டும் .இஸ்லாம் அல்லாத வேறு வழிமுறையையோ அமைப்புமுறையையோ அங்கிகரிப்பது ஆகுமாணதல்ல .இது தான் அல்லாஹ்வை ரப்பாகவும் நபி ﷺ  அவர்களை நபியாகவும்,தூதராகவும் ,இஸ்லாத்தை மார்க்கமாகவும் ஏற்று கொள்வதன் அர்த்தமாகும்.வெளிப்படையாகவும்,மறைமுகமாகவும் மார்கத்தை பின்பற்ற வேண்டும் இன்னும் அல்லாஹ்வின் தீனை கண்னியப்படுத்த வேண்டும் ,நபி ﷺ அவர்களின் ஸுன்னாவை பின்பற்ற வேண்டும். இஸ்லாமிய மார்கத்தின் மூலம் கண்ணியத்தைப் பெறுவதற்கும்,எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கவும்  அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக.

மூலம் : இஸ்லாம் சுவால் வ ஜவாபு [ எண் : 98134 ]

மொழிபெயர்ப்பாளர் :  பஷீர் ஃபிர்தெளஸி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply