ஸ்பெயின் நாட்டில் பிறந்தார், இமாம் பகீ இப்ன் மக்லத். அந்நாட்டின் ஹதீஸ் துறை அறிஞர்கள் அனைவரிடமும் கற்றுத்தேர்ந்தார். அடுத்தது யாரிடம் ஹதீஸ் கற்பது என்று விசாரித்த பொழுது, அனைவரும் கூறியது, இமாம் அஹ்மத் இப்ன் ஹன்பலின் பெயரை.
20 வயதில் இமாம் அஹ்மதை சந்திக்க, ஸ்பெயின் நாட்டிலிருந்து மக்கா வழியாக பாக்தாத் வரை 6000 கி. மீட்டருக்கும் மேல் நடை பயணமாக புறப்பட்டார் இமாம் பகீ. பயணத்தில் ஒரு ஊரை அடைந்தாள் அங்கு பணி செய்து சில காசு சேர்ந்ததும் மீண்டும் பயணத்தை தொடர்வார்
அவர் கூருவதை கேழுங்கள்
” பாக்தாத் நகரை நான் நெருங்கிய போது, இமாம் அஹ்மத் தன் வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தார் என்று கேள்விப்பட்டேன். அவர் மக்களுக்கு படங்கள் நடத்தவும் தடை விதித்திருந்தார்கள். இதனால் சொல்ல முடியா வருத்தம் அடைந்தேன்.”
” பாக்தாத் நகரை அடைந்தவுடன் மஸ்ஜிதிற்கு சென்று அங்கு யாரிடமாவது கல்விதேட முனைந்தேன். நான் ஒரு பெரிய கூட்டத்திற்கு வழிகாட்டப்பட்டேன், அங்கு ஒருவர் ஹதீஸ் அறிவிப்பாளர்களை பற்றி பாடம் எடுத்துக்கொண்டிருந்தார், ஹதீஸ் அறிவிப்பாளர்களின் தரத்தை பற்றி கூறிக்கொண்டிருந்தார். விசாரித்த பொழுது, இவர் தான் யஹ்யா இப்ன் மயீன் என்று கூறினார்கள். அவரின் அருகில் ஒரு இடம் இருந்ததால், அங்கு சென்று அமர்ந்து அவரிடம் கேள்விகள் கேட்டேன்:
‘ அபூ ஸகரியவே, உங்கள் மீது அல்லாஹ் ரஹ்மத் செய்யட்டும், நான் வெகு தூரம் பயணம் செய்து வந்துள்ளேன், ஸ்பெயினிலிருந்து நடை பயணமாக வந்துள்ளேன், உங்களிடம் சில கேள்விகள் கேற்க விரும்புகிறேன், எனக்கு அனுமதி மறுத்து விடாதீர்கள்.’ என்றேன்
அதற்க்கு அவர்: ‘மற்றவர்களை விட உங்களுக்கு தான் முன்னுரிமை உண்டு , கேளுங்கள்’ என்றார்
‘ஹதீஸ் கலை அறிஞர்கள் சிலரை குறித்து அவரிடம் கேட்டேன், அவர்களில் சிலரை அவர் சரிகண்டார் , சிலரை குரைகண்டார். அவர்களின் நிறை குறைகளை தெளிவாகவும் துல்லியமாகவும் விளக்கினார் . ஸ்பெயின் நாட்டு அறிஞர்களை பற்றியும் கேட்டேன், அதற்க்கு அவர் துல்லியமாக பதிலளித்தார், ‘
நான் அவரிடம் ‘இறுதியாக எனக்கு ஒருவரை பற்றி கேற்க வேண்டும் என்றேன். அஹ்மத் இப்ன் ஹன்பலை பற்றி என்ன கூறுகிறீர்கள்’ என்று கேட்டேன். அங்குள்ள அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். யஹ்யா இப்ன் மயீனும் ஆச்சரியம் அடைந்தார்.
பின்னர் ‘அஹ்மத் இப்ன் ஹன்பலை பற்றி கூற எனக்கு என்ன தகுதி உள்ளது , அவர் தான் முஸ்லிம்கள் அனைவருக்கும் இமாம், முஸ்லிம்களில் சிறந்தவர், உயர்ந்தவர். இந்த பூமியில் அஹ்மத் இபின் ஹம்பலை விட மிக பெரிய ஆலிமை எனக்கு தெரியாது ‘ என்றார்.
இதை கேட்டு எனக்கு மேலும் ஆர்வம் ஏற்பட்டது, இமாம் அஹ்மதின் வீட்டை தேடி சென்றேன், காவலர்கள் கவனம் இழந்த நேரம், அவரின் வீட்டின் கதவை தட்டினேன், அறிமுகம் இல்லா மனிதரை கண்ட அவர் யாரென்று கேட்டார்.
நான் ‘அபூ அப்துல்லாஹ்வே! நான் வெகு தூரம் பயணம் செய்து இந்த ஊருக்கு முதல் முறை வந்துள்ளேன், உங்களிடம் ஹதீஸ் கர்ப்பதற்காகவே இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்’ என்றேன்.
யாரும் பார்க்காதவாறு என்னை தனியே அழைத்துச்சென்றார். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்றார், ‘மேற்கில் வெகுதூரத்திலிருந்து’ என்றேன், ‘ஆபிரிக்கவா?’ என்றார், ‘அதைவிடவும் தூரம், கடல் கடந்து தான் நான் ஆப்பிரிக்காவுக்கு செல்லவேண்டும், நான் ஸ்பெயினிலிருந்து வந்துள்ளேன் ‘ என்றேன்
இமாம் அஹ்மத் ‘நீங்கள் வெகுதூரத்திலிருந்து வந்திருக்கிறீர்கள், உங்களுக்கு நான் உதவி செய்ய ஆசைப்படுகிறேன், ஆனால் எனக்கு ஏற்பட்டுள்ள சோதனைனயயை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்’ என்றார்.
‘நான் கேள்விப்பட்டது தான். நான் இந்த ஊருக்கு புதிதாக வந்துள்ளேன், என்னை யாருக்கும் அடையலாம் தெரியாது. நீங்கள் அனுமதித்தால், நான் தினமும் பிச்சைக்காரன் போல் வேடம் அணிந்து உங்களிடம் யாசகம் கேற்க வருகிறேன். நீங்கள் வெளிவந்து தினமும் ஒரு ஹதீஸை எனக்கு அறிவித்தால் போதும்’ என்றேன்.
‘வேறு எந்த ஆலிமிடமும் நீங்கள் பாடம் கேற்க மாட்டீர்கள் என்றால் அனுமதிக்கிறேன்’ என்றார், நானும் சம்மதித்தேன்.
நான் தினமும் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு, தலையில் துண்டொன்று சுத்திக்கொண்டு, காகிதமும் (எழுதும்) மய்யையும் எடுத்துக்கொண்டு அவரின் வீட்டிற்கு சென்று பிச்சை எடுப்பதை போல் அழைப்பேன். அவர் வெளி வந்து ரொட்டி ஒன்றை கொடுத்துவிட்டு ,இரண்டு மூன்று ஹதீஸ்கள் அறிவிப்பார், சில நேரங்களில் சற்று அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பார். இதே போக்கில் அவரிடமிருந்து 300 ஹதீஸ்களை கற்றேன். அவர் விடுதலை அடையும் வரை இதை தொடர்ந்தேன்.
அவர் விடுதலை அடைந்த பிறகு அவரிடம் பாடம் கற்க சென்றால் அவர் என்னை அவரின் அருகில் அமரச்செய்வார், மற்றவர்களிடம் ‘இவர் ஹதீஸ் மாணவர் என்று அழைக்கப்பட தகுதியானவர் ‘ என்பார். அவர்களிடம் என் கதையை கூறுவார்.
இமாம் அபுல் வலீத் அல் பர்தீ கூறினார்: ‘இமாம் பகீ: ‘எனக்கு ஒரு மனிதரை தெரியும், அவர் மாணவராக இருந்த போது உண்பதற்கு தூக்கியெறியப்பட்ட முட்டைக்கோஸ் இலைகளை தவிர வேறு எதுவும் இல்லாமல் பல நாட்கள் கழித்தார் .’ [அவரை பற்றித்தான் கூறினார்]
இன்னொரு முறை தன் மாணவர்களை பார்த்து: ‘இப்படியா மார்க்க அறிவு தேடுவது, உங்களின் ஓய்வு நேரத்தில் மட்டும் தான் நீங்கள் மார்க்க அறிவு தேடுகிறீர்கள்! ‘எனக்கு ஒரு மனிதரை தெரியும், அவர் மாணவராக இருந்த போதுஉண்பதற்கு தூக்கியெறியப்பட்ட முட்டைக்கோஸ் இலைகளை தவிர வேறு எதுவும் இல்லாமல் பல நாட்கள் கழித்தார் . எனக்கு ஒரு மனிதரை தெரியும் அவர் காகிதம் வாங்குவதற்காக, தன் கீழாடைகளை விற்றார்’ ”
[صفحات من صبر العلماء على شدائد العلم والتحصيل,قصة وفكرة – بقي بن مخلد – الهمة في طلب العلم – د. طارق السويدان]
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: